நான் ஒரு வானூர்தி கட்டுரை

Naan Oru Vaanurthi Katturai

இந்த பதிவில் “நான் ஒரு வானூர்தி கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரை பதிவை காணலாம். ஒவ்வொரு கட்டுரையும் 150 சொற்களை கொண்டுள்ளன.

நான் ஒரு வானூர்தி கட்டுரை – 1

பூமியிலே இருந்து கொண்டு வானத்தை அண்ணார்ந்து பார்த்து கொண்டிருந்த மனிதனுக்கு வானத்தில் பறந்த இந்த பூமியின் வனப்புக்களை பார்க்கின்ற வாய்ப்பினை ஏற்படுத்தியது நான் தான். ஆமாம் நான் ஒரு வானூர்தி ஆனால் பறவைகள் போல வானத்தில் பறக்க நினைக்கின்ற கனவுகளை சுமக்கின்ற மனிதர்களை நான் சுமந்து செல்வேன்.

குழந்தைகளை வியப்பில் ஆழ்த்தி குதூகலப்படுத்துவேன். உலகத்தின் எந்த பாகத்துக்கும் மனிதர்கள் சென்று வர நான் பெரும் உதவியாக இருப்பேன். நான் இருப்பதனால் தான் மனிதர்கள் இந்த பரந்த உலகமெங்கும் விரைவாக பயணிக்க முடிகிறது.

மனிதர்களுக்கு தேவையான பொருட்களை நான் மிக விரைவாக சுமந்து செல்கிறேன். உலகத்தில் மிகவும் வேகமான போக்குவரத்து வாகனமாக நானே விளங்குகிறேன். நான் இந்த உலகத்தில் வேறு இடங்களுக்கு பயணிக்க விரும்புபவர்களை மிக துரிதமாக கொண்டு போய் சேர்ப்பதை என் முக்கிய கடமையாக கருதுகின்றேன்.

உயர்கல்வி கற்கவும் நல்ல வேலைகளை தேடவும் தமக்கு பிடித்த இடங்களை சுற்றி பார்க்கவும் விரும்புகின்றவர்களை நானே சுமந்து சென்று அவர்களது கனவை நிஜமாக்குகின்றேன். நான் பணக்காரர் ஏழைகள் என்ற பாரபட்சமின்றி எல்லா மக்களையும் சுமந்து இந்த உலகத்தை வலம் வருவேன்.

என்னை பயன்படுத்தி சிலர் யுத்தங்களை நடாத்தி உயிர்களை கொல்வதை நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். வானத்தில் பறக்கும் பறவைகள் போல நானும் மனிதர்களை உயர பறக்க செய்வேன்.

நான் ஒரு வானூர்தி கட்டுரை – 2

நான் ஒரு வானூர்தி நீண்ட தூர பயணங்களை மிகவும் குறுகிய காலத்தில் சாத்தியமாக்குவேன். இந்த உலகத்தில் மனிதர்கள் காண நினைக்கின்ற ஆச்சரியங்களை காண செய்வேன். மிக சிறந்த புதிய இடங்களையும் மனிதர்களையும் காண நான் உதவியாக இருப்பேன்.

நெருக்கடி நிறைந்த இந்த வாழ்வில் மகிழ்ச்சியை நோக்கி மனிதர்களை நான் பறக்க செய்வேன். நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களுக்கு சென்று வர நான் துணையாக இருப்பேன்.

வானத்திலே பறக்க நினைக்கின்ற மனிதர்களுக்கு இந்த இயற்கையின் அழகையும் அதிசயங்களையும் காட்டி பாதுகாப்பாக கொண்டு போய் சேர்ப்பேன். நினைத்து பார்க்க முடியாத உயரங்களை மனிதர்கள் அடைய நான் காரணமாக இருப்பேன்.

பறந்த படியே உண்ணவும் உறங்கவும் ஓய்வெடுக்கவும் திரைப்படங்களை கண்டு கழிக்கவும் தேவையான ஏற்பாடுகள் என்னிடம் உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எந்த வித அச்சமின்றி வானத்தில் பறக்க முடியும்.

வானம் உங்கள் வசமாகும் என்பதனை நான் நிஜமாக்கி காட்டுவேன். இன்று மனிதர்கள் அதிகமாக விரைவான தூர தேச பயணங்களுக்கு அதிகம் என்னை தான் விரும்புவார்கள்.

மேலும் சிறந்த வசதிகளுடனும் பாதுகாப்புடனும் மிக விரைவாக நான் பயணிப்பேன் உலகத்தின் சிறந்த நகரங்களை நான் ஆகாய மார்க்கமாக வலம் வருவேன். வளிமண்டல தட்ப வெப்பநிலைகளுக்கு ஏற்றாற் போல எனது பயணத்தை நான் தகவமைத்து கொள்வேன்.

என்னோடு பயணிக்கும் மனிதர்களுக்கு வாழ்வின் மிகச் சிறந்த பறக்கும் அனுபவத்தை நான் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது குறிக்கோளாகும்.

You May Also Like:

நான் ஒரு கதைப்புத்தகம் கட்டுரை