கலைஞர் ஆட்சியில் பெண்ணுக்கு நீதி பேச்சு போட்டி

kalaignar aatchiyil pennukku neethi

அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழக முதலமைச்சர் மற்றும் கலைஞர் என்ற பட்டத்தினை பெற்று அனைவராலும் போற்றப்படக்கூடியவர் கருணாநிதி அவர்கள் ஆவார் என்றடிப்படையில் இன்று நான் கலைஞர் ஆட்சியில் பெண்ணுக்கு நீதி என்ற தலைப்பிலேயே பேசப்போகின்றேன்.

தமிழக முதல்வராக சிறந்து விளங்கிய கருணாநிதி அவர்கள் பெண்களுக்கான உரிமைகளை பேணுவதில் பல்வேறு நீதிகளை பெற்றுத்தருவதோடு நின்றுவிடாமல் பெண்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களையும் தனது ஆட்சியில் ஏற்படுத்தினார்.

பெண்ணியத்தில் நீதி பேணும் கலைஞர்

பெண்களை ஒரு பொருட்டாகவே கருதாமல் காணப்பட்ட சமூகத்திற்கு மத்தியில் பெண்களும் ஆண்களைப் போன்று சம உரிமைகள் உடையவர்கள் என்ற வகையில் பெண்களின் மறுமணத்திற்கு கலைஞரே ஆதரவளித்தார்.

இதனூடாக கணவனை இழந்த பெண்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி பெண்களுக்கு நீதியை பெற்றுத்தந்தவர் கலைஞர் ஆவார்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கென 33 சதவீத இட ஒதுக்கீட்டை 1996ம் ஆண்டில் கலைஞர் கொண்டு வந்தார். இதன் மூலம் பெண்களுக்கு கையெழுத்திடும் அதிகாரம் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு அரசியல் அதிகாரமும் வழங்கப்பட்டது.

அன்னை தெரசா நினைவுத் திட்டதை தனது ஆட்சியில் கொண்டு வந்து ஆதரவற்ற பெண்கள் மற்றும் தாய் தந்தையர் இல்லாத பெண்களுக்கு பொருளாதார ரீதியல் திருமணத்திற்கு உதவினார். மேலும் இத்திட்டத்தினூடாக பொருளாதார ரீதியல் வசதியற்ற பெண்களும் திருமணம் முடித்து வைக்கப்பட்டார்கள்.

பெண் குழந்தைகள் பிறந்தது முதல் இறுதிக்காலம் வரை சமூகப் பாதுகாப்புடனேயே வாழவேண்டும் என்ற நோக்கில் பல சமூகப் பாதுகாப்பு வழிகளை ஏற்படுத்தினார்.

பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் கலைஞர் துணை நின்றார். மேலும் 8ம் வகுப்பினை படித்த பெண்களுக்கான நிதி உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தி பெண்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்த மாமனிதரும் கலைஞரே ஆவார்.

காவல் நிலையத்திலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சலைத்தவர்கள் அல்ல என்ற நோக்கில் காவலர் பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட காரணமாக கலைஞரே திகழ்ந்தார்.

பல்வேறு மகளிர் காவல் நிலையங்கள் உருவாக வித்திட்டதோடு இன்று மகளிர் காவலர்கள் அதிகரித்துக் காணப்படவும் உறுதுணையாக நின்றவர் கலைஞர் கருணாநிதி அவர்களே.

தனது ஆட்சி முறைமையில் கலைஞர் அவர்கள் பெண்களுக்கென பல்வேறு சுய உதவிக் குழுக்களை அறிமுகம் செய்து வைத்ததோடு மாட்டுமல்லாது இதன் மூலமாக பெண்கள் இன்று சுயமாக பொருளாதாரத்தில் சிறந்து விளங்கவும் இந்த சுய உதவிக் குழுக்கள் பக்கபலமாக திகழ்ந்தது.

பெண்களுக்கான சொத்துரிமையை பெற்றுக் கொடுத்ததில் கலைஞரின் பங்கு

பெண்களை மதிக்காமல் அடக்கி வாழும் சமூகத்திற்கு மத்தியில் பெண்களுக்கும் செத்துரிமையில் பங்கு உள்ளது என்ற சட்டத்தை 1989ல் அறிமுகப்படுத்தியவர் கலைஞர் ஆவார்.

இவர் 1989ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போதிலே பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை சட்டமாக்கினார். மேலும் பல்வேறு மகளிர் திட்டங்களை கொண்டு வந்து பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார்.

கலைஞருடைய ஆட்சியானது பல்வேறுபட்ட வகையில் சிறந்து விளங்கிய போதிலும் பெண்களுக்கான நீதியை பெற்றுத்தந்த மாமனிதர் என்ற பெருமை இவரையே சாரும். இன்றைய தமிழகப் பெண்களின் வாழ்க்கை மிளிர கலைஞர் பெண்களுக்காக பெற்றுக் கொடுத்த வாய்ப்புக்களே காரணமாகும்.

You May Also Like:

அறிவே அழகு கட்டுரை

பாரதத்தின் சிறப்புகள் கட்டுரை