தாய்மொழிப் பற்று கட்டுரை

thai mozhi patru katturai in tamil

உலகில் பல மொழிகள் காணப்பட்டாலும் தம்முடைய பிறப்பிலிருந்து கற்றுக்கொண்ட தாய்மொழியே ஒவ்வொருவருக்கும் சிறப்பானதொரு மொழியாகும். தாய்மொழியானது ஒருவரின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் ஓர் மொழியாக திகழ்கின்றது.

தாய்மொழிப் பற்று கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தாய்மொழி
  • தாய்மொழிப் பற்றின் முக்கியத்துவம்
  • தாய்மொழிக் கல்வி
  • இன்றய சமூகத்தில் தாய்மொழி கல்வியின் நிலை
  • முடிவுரை

முன்னுரை

ஒரு மனிதனானவன் பிறரிடம் தன்னை வெளிப்படுத்துவதற்காக சிறுவயதிலிருந்தே தாய்மொழியின் ஊடாகவே தனது எண்ணங்கள் மற்றும் அணுபவங்களை பகிர்ந்து கொள்கின்றான். ஒவ்வொரு மளிதனும் தன்னுடைய கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ள தாய்மொழியே சக்கிவாய்ந்ததொரு கருவியாகும். இக்கட்டுரையில் தாய்மொழிப் பற்று பற்றி நோக்கலாம்.

தாய்மொழி

தாய்மொழி என்பது தன் சிறுபராயத்திலிருந்து கற்கப்பட்டு பின்னர் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறையினருக்கு கடத்தப்படும் ஒரு மொழியே தாய்மொழியாகும்.

உலகில் வாழும் ஒவ்வொருவரினதும் தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்துவதே அவர்களுடைய தாய்மொழியாகும். தாய்மொழியானது ஒருவருடைய அறிவாற்றல் மற்றும் வளர்ச்சி போன்றவற்றில் தாக்கம் செலுத்தக்கூடியதாகவே காணப்படுகிறது.

தாய்மொழிப் பற்றின் முக்கியத்துவம்

தன்னுடைய தாய்மொழி மீது பற்று கொண்ட ஒருவரே கல்வியில் சிறந்து விளங்குபவராக காணப்படுவார். ஏனெனில் தனக்கானதொரு அடையாளத்தை உருவாக்கும் தாய்மொழியின் மீது பற்று இருப்பது அனைவரினதும் கடமையாகும்.

அந்த வகையில் தாய்மொழி மீதான பற்றானது பன்முக காலாச்சாரங்களுக்கு மத்தியில் எமக்கு மதிப்பளிக்கக்கூடியதாக காணப்படுகிறது.

தாய்மொழி மீதான பற்றானது எமது அறிவை பெருக்கி வாழ்வில் சிறந்த இலக்குகளை அடைய வழிவகுப்பதோடு மனிதனானவன் முதன் முதலாக கற்றுக்கொள்ளும் மொழியாக தாய்மொழி காணப்படுவதால் அம்மொழி மீதாhன பற்றானது எம்மை எழுத்தறிவுள்ளவராக மாற்றுவதற்கு துணைபுரிகிகின்றது.

மேலும் கம்பர், ஒளவையார், கபிலர், திருவள்ளுவர் போன்றோர் தனது தாய்மொழியான தமிழ் மீது அதிக பற்றுக்கொண்டவர்களாகவே காணப்பட்டமை சிறப்பிற்குரியதொரு விடயமாகும்.

தாய்மொழிக் கல்வி

ஒருவர் தனக்கு பரிச்சயமான மொழியில் கல்வி கற்கும் போதே சிறந்ததொரு கல்வி அறிவை பெற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொருவருக்கும் சிறந்த மொழியாக திகழ்வது அவர்களுடைய தாய்மொழியாகும். அந்த வகையில் தாய்மொழியில் தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதே சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும்.

மனிதனுடைய சிந்தனைத்திறனை மேம்படுத்தும் ஓர் மொழியாக தாய்மொழி கல்வியே காணப்படுகிறது. எனவேதான் தாய்மொழியினூடாக கல்வியை கற்றுக்கொள்ளும் போதே சிறந்த சிந்தனை திறன் உருவாகின்றது.

இன்றைய சமூகத்தில் தாய்மொழிக் கல்வியின் நிலை

இன்றைய சமூகத்தில் தனது தாய்மொழிக்கல்வி கற்பதானது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. மேலும் தாய்மொழியில் கல்வி கற்பதனை விரும்பாது ஏனைய மொழிகளில் கல்வியினை கற்கின்றனர்.

இதன் காரணமாக தனது நாட்டை சேர்ந்தவர்களுக்கு தனது கருத்தை தன்னுடைய தாய்மொழியில் கூறமுடியாத ஒரு நிலையே காணப்படுகிறது.

தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தாய்மொழியில் கல்வியை கற்பதனூடகவே தனது கல்வி அறிவில் சிறந்து விளங்க முடியும் என்பதனை நாம் அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

முடிவுரை

மொழியானது ஒவ்வொருவரினதும் தனித்துவமான அடையாளத்தை எடுத்துக்காட்டும் ஒரு கருவியாகும்.

அந்தவகையில் அனைவரும் தமது தாய்மொழியின் மீதான பற்றுடன் இருப்பதோடு மட்டுமல்லாது தனது தாய்மொழியின் ஊடாக கல்வி கற்பதனை பெருமையாக நினைத்து செயற்பட வேண்டும்.

எனவேதான் தாய்மொழி எமது தாய்க்கு நிகரான ஒரு மொழி என்பதனை மனதில் நிறுத்தி தாய்மொழியை போற்றுதல் எம் அனைவரினதும் கடமையே.

You May Also Like:

தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை

தமிழ் மொழி வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு