சாலை விபத்து மற்றும் இறப்புகளை குறைத்தல் கட்டுரை

salai vibathukal katturai in tamil

இன்று சாலை விபத்து என்பது மிகவும் அரிதாக இடம்பெறும் ஒன்றாகவே மாறிவிட்டது. சாலை விதிகளை மீறுவதின் மூலமாக அதிகளாவான இறப்புக்கள் இடம்பெறுகின்றமையினை அண்மைக்காலத்தில் காணக்கூடியதாக உள்ளது.

சாலை விபத்து மற்றும் இறப்புகளை குறைத்தல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சாலை விபத்து
  • சாலை விபத்து ஏற்பட காரணங்கள்
  • சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்
  • இந்தியாவும் சாலை விபத்தும்
  • முடிவுரை

முன்னுரை

மனித வாழ்வில் பயணமானது இன்றியமையாததொன்றாகும். அந்த வகையில் மனிதனானவன் பல்வேறு தேவைக்காக பயணத்தினை மேற்கொள்கின்றான்.

இவ்வாறானதொரு சூழலில் சாலை விதிகளை பின்பற்றி பயணத்தினை மேற்கொள்வதன் மூலமாக விபத்துக்கள் மற்றும் இறப்புக்களை தவிர்த்துக் கொள்ள முடியும். இக்கட்டுரையில் சாலை விபத்து மற்றும் இறப்புகளை குறைத்தல் பற்றி நோக்கலாம்.

சாலை விபத்து

சாலை விபத்து என்பது இன்று அதிகமாக இடம்பெறக்கூடியதொரு விடயமாக மாறிவருகின்றது. சாலை விபத்து என்பது தரை வழிப்போக்குவரத்தில் தரைப் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட சாலைகளில் இடம்பெறக்கூடிய விபத்துக்களே சாலை விபத்துக்களாகும்.

இன்று சாலை விபத்தானது இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதன் காரணமாகவே அதிகளவில் இடம்பெறுகின்றன. இன்று சாலை விபத்துக்களால் தினமும் பலர் இறக்கும் நிலை அதிகரித்துக்கொண்டே காணப்படுகிறது.

சாலை விபத்து ஏற்பட காரணங்கள்

அதிவேகமாக வாகனத்தை செலுத்துதல், குடி போதையில் வாகனங்களை செலுத்துதல், தலைக்கவசம் அணியாது செல்லல், நடைபாதைகளை பின்பற்றாமல் செல்லுதல், சாலை சமிக்ஞைகளை பின்பற்றாது செல்லல்,

அவசர ஊர்திகளுக்கு வழிவிடாமல் வாகனங்களை செலுத்துதல், வேகக்கட்டுப்பாட்டை பின்பற்றாது செல்லல் போன்ற பல்வேறு காரணங்களால் சாலை விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்

சாலை விதிகளை பின்பற்றி முறையாக சாலைகளில் பயணிக்கும் போதே விபத்துக்களை குறைத்து உயிர்களை காத்துக்கொள்ள முடியும்.

அதாவது சாலை விதிகளை முறையாக பின்பற்றுதல், தீயணைப்பு வாகனம் மற்றும் அவசர ஊர்திகளுக்கு வழிவிடல், மஞ்சட் கோட்டினால் பாதையை தாண்டிச் செல்லல், அவதானத்துடன் வாகனத்தை செலுத்துதல்,

வாகனத்தில் ஏதும் பிரச்சினைகள் இருக்கின்றதா என்பதனை அவதானித்து வாகனத்தை சரி செய்த பின்னர் பயணித்தல் என முறையாக விதிகளை பின்பற்றி செல்லும்போது சாலை விபத்துக்கள் மற்றும் இறப்புக்களை தவிர்த்துக்கொள்ள முடியும்.

இந்தியாவும் சாலை விபத்தும்

இந்தியாவை பொறுத்தவரை சாலை விபத்துக்களின் தலைநகரம் என்று குறிப்பிடும் அளவிற்கு விபத்துக்கள் அதிகமாக இடம்பெறக்கூடியதொரு நாடாகவே திகழ்கின்றது.

அந்த வகையில் இந்தியாவில் சீட் பெல்ட்டுக்களை பயன்படுத்தாததன் காரணமாக பல உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றமை பிரதானமாக காணப்படுவதோடு அதிவேகம், தலைக்கவசம் அணியாமை போன்ற காரணங்களாலும் பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டிற்கும் சுமார் 4.5 இலட்சம் விபத்துக்கள் ஏற்படுவதோடு அதில் 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர் என்றும் உலக வங்கியானது தனது அறிக்ககையில் குறிப்பிட்டுள்ளது.

எனேவேதான் கவனயீனமாக வாகனங்களை செலுத்தாது முறையாக செலுத்துவதினூடாக இந்தியாவையும் சாலை விபத்துக்களிலிருந்து தவிர்த்து பல உயிர்களையும் காத்திட முடியும்.

முடிவுரை

பயணங்களை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் உயிரின் பெறுமதியை உணர்ந்து செயற்பட வேண்டும்.

மேலும் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி சாலை விபத்துகளிலிருந்து அனைவரையும் காப்போம்.

சாலை விதிகளை பேணுவோம்! உயிர்களை காப்போம்!

You May Also Like:

தொழிற்சாலை பாதுகாப்பு கட்டுரை

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை