பாரதத்தின் சிறப்புகள் கட்டுரை

bharatham sirappugal katturai in tamil

உலகில் காணப்படக்கூடிய பல்வேறு நாடுகளில் நாம் வாழக்கூடிய பாரத நாடு முக்கியமான ஒன்றாகவே காணப்படுகின்றது.

அதாவது வரலாற்று தொன்மையும், பல்வேறு சிறப்புகளையும் கொண்டதாகவே இந்திய நாடு விளங்குகின்றது. பல்வேறு கலைஞர்களளையும், அறிஞர்களையும் வளர்த்த பெருமையும் இந்த பாரதத்துக்கு உரியதாகும்.

பாரதத்தின் சிறப்புகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • புவியியல் அமைவிடம்
  • வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்
  • பாரதத்தின் அறிவியல்
  • தொழில்நுட்பத்தின் முன்னேற்றம்
  • முடிவுரை

முன்னுரை

உலகில் காணப்படக்கூடிய பெரிய நாடுகளில் பாரத நாடு ஒன்றாகும். பல்வேறு இன, மத, மொழி மற்றும் சமயங்களை பின்பற்றக்கூடிய பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடாகவே இது காணப்படுகின்றது.

அதாவது வேற்றுமையிலும் ஒற்றுமை என ஒரு தேசமாக மக்கள் வாழ்வதனை இங்கு காண முடியும். இந்த வகையில் நாம் வாழக்கூடிய பாரத தேசத்தின் சிறப்புகளை இக்கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

புவியியல் அமைவிடம்

உலகில் ஏழாவது பெரிய நாடாக விளங்கக்கூடிய இந்திய நாடானது ஆசிய கண்டத்தில் அமைந்துள்ளது.

வடக்கில் கம்பீரமான இமாலய மலைத்தொடர்களையும், தெற்கில் இயற்கை அழகு நிறைந்த கடற்கரையோரங்களையும், மேற்கில் இந்திய பாலைவனத்தையும், கிழக்கில் இயற்கை பாரம்பரியங்களை கொண்ட அமைந்ததாகவும் இந்த பாரத தேசம் விளங்குகின்றது.

மேலும் இந்நாட்டில் பல்வேறு மாநிலங்கள் காணப்படுவதோடு அம்மாநிலங்களும் பரப்பளவில் பெரிய அளவிலானதாகவே காணப்படுகின்றன.

வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்

ஆரம்ப காலங்களில் கட்டிடக்கலைக்கு பங்காற்றியவர்களுள் முக்கியமானவர்களாக பாரத நாட்டவர்கள் விளங்குகியுள்ளனர். இதன் வெளிப்பாடாக பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க தளங்களை நாம் காண முடியும்.

அந்த வகையில் உலக அதிசயங்களும் ஏழாவது அதிசயமான தாஜ்மஹால் இந்தியாவின் ஆக்ரா மாநிலத்தில் காணப்படும் புகழ்மிக்க ஓர் இடமாகும். ஹம்பி எனப்படும் கவர்ச்சிகரமான வரலாற்று புகழ்மிக்க இடமும் இன்று இடிபாடுகளுடன் காட்சியளிக்கின்றது.

அத்தோடு உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் போன்றன வரலாற்று சிறப்புமிக்க இடங்களாக நோக்கப்படுகின்றன.

பாரதத்தின் அறிவியல்

பாரத நாட்டின் அறிவியலானது தொன்மையானதாகவும், சிறப்புடையதாகவும் விளங்கியிருக்கின்றது.

அதாவது சமகாலங்களில் காணப்படக்கூடிய கதிரியக்க குறிப்புகளையும், அணுஅளவு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ரசவாத குறிப்புகளையும் சுமார் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றம் பெற்ற குறிப்புகளில் இருந்து கண்டறிய முடிகின்றது.

மேலும் 2500 வருடங்களுக்கு முன்பு ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்ட மருத்துவ கடவுளாகிய தன்வந்திரி பகவானின் கைகளில் காணப்பட்ட மருத்துவ உபகரணமே இன்று இரத்தம் ஒஉறிஞ்சும் அட்டைகள் என அடையாளப்படுத்தப்படுகின்றன.

இவ்வாறாக பாரதத்தின் அறிவியலானது பழமை வாய்ந்ததாகவும், அன்று தொடக்கம் இன்று வரைக்கும் வளர்ந்து வரக்கூடிய ஒன்றாகவுமே காணப்படுகின்றது.

தொழில்நுட்பத்தின் முன்னேற்றம்

இந்தியா சுதந்திரம் அடைந்ததன் பிற்பாடு தொழில்நுட்பமானது படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருவதனைக் காண முடியும்.

அந்த வகையில் தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல், செயற்கை கோள்களை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்புதல், அணு ஆராய்ச்சி மையங்களை அதிகமாக அமைத்தல், விண்வெளி தொடர்பான ஆய்வுகளை அதிகரித்தல், கல்வி நடவடிக்கைகளை இலத்திரமயமாக்குதல், நனோ தொழில்நுட்பம் மற்றும் ரோபோக்களின் உருவாக்கம் போன்றவாறனபல்வேறு தொழில்நுட்பம் சார் செயற்பாடுகளில் பாரததேசம் விருத்தி அடைந்து வருவதனைக் காணமுடியும்.

முடிவுரை

உலகில் ஏனைய நாடுகள் வியந்து பார்க்கும் அளவுக்கு பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டதாக பாரத தேசம் விளங்குகின்றது.

பாரதத்தின் பெருமைகளை தொடர்ந்தும் பேணுவது இளைஞர்களின் பொறுப்பாகும் என்பதையும் நாம் அறிந்து பொறுப்புணர்வுடன் செயல்படுதல் வேண்டும்.

You May Also Like:

ஊழலற்ற இந்தியா கட்டுரை

இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை