விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனை கட்டுரை

vinveli araichi katturai in tamil

நாம் வாழுகின்ற பூமி மற்றும் பிற கோள்கள் அனைத்துமே விண்வெளியிலேயே அமைந்துள்ளன.

அதாவது இந்த விண்வெளியானது மனிதனின் கண்ணுக்கும், மூளைக்கும் அப்பாற்பட்ட பல்வேறு மர்மமான அம்சங்களையும், விந்தையான செயற்பாடுகளையும் கொண்டதாகவே காணப்படுகின்றது.

இவற்றினை ஆராயும் பொருட்டே விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இவ்வாறான விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளில் இந்தியாவும் முதன்மையாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆரம்ப கட்ட சாதனை
  • செயற்கை கோள்களின் வளர்ச்சி
  • ஏவுகணை வாகனங்களின் வளர்ச்சி
  • மனித விண்வெளி பயணங்கள்
  • முடிவுரை

முன்னுரை

1960கள் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கான படிமுறைகள் படிப்படியாக ஆரம்பிக்க தொடங்கின.

இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட விண்வெளி ஆய்வுகள் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிறுவப்பட்ட பின்னரே, உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முழுமையான விண்வெளி திட்டமாக அவதானிக்கப்படுகின்றது.

ஆரம்ப கட்ட சாதனை

1975இல் இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோளான “ஆர்யப்பட்டா” சோவியத் யூனியனால் அனுப்பப்பட்ட போதும் 1980 களில் இஸ்ரோ தன்னுடைய முதல் உருவாக்கமான ரோகினியை செயற்கைக்கோளை சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தியமையானது, இந்தியாவுக்கு ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது.

அதாவது தங்களுடைய சொந்த செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தும் திறன் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சாதனை கொள்வதற்கு இது ஏதுவாகவே அமைந்தது.

செயற்கை கோள்களின் வளர்ச்சி

இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பானது 1980 களில் அமைக்கப்பட்டது. இதன் பின்னர் பல்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டமையைக் காணலாம்.

இந்தியாவில் தகவல் தொடர்பு, வானிலை, ஒளிபரப்பு மற்றும் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் என்பவற்றை கண்காணிப்பதற்கும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்பட்டு வருவதனை காணலாம்.

அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்தியாவின் சந்திராயன்-1 திட்டமானது, சந்திரனின் நீர் மூலக்கூறுகள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளது.

அதேபோல 2013 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் ஆசிய விண்கலமாகவும் காணப்படுகின்றமையானது இந்தியாவுக்குரிய சாதனையாகும்.

ஏவுகணை வாகனங்களின் வளர்ச்சி

செயற்கைக்கோள்களின் வளர்ச்சியினை போன்றே இந்தியாவில் ஏவுகணை வாகனங்களின் வளர்ச்சியும் அதிகமாகியுள்ளது.

அதாவது இஸ்ரோவின் துருவ செயற்கைக்கோள் வாகனம் வெற்றிகரமான ஏவுதல்களில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.

அதேபோல போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் மற்றும் ஜியோசின்க்ரோனஸ் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் ஆகியவற்றின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.

GSLV மார்க் III இன் வெற்றிகரமான சோதனை, அதிக எடையுள்ள சுமைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாக கொள்ளப்படுகின்றது. இவ்வாறாக இந்தியாவில் ஏவுகணை வாகனங்களில் வளர்ச்சிகளை நாம் நோக்கலாம்.

மனித விண்வெளி பயணங்கள்

விண்வெளி ஆராய்ச்சி நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக மனிதர்களினால் பல்வேறு விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் இந்தியா நாட்டின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்த விண்வெளி வீரர்களாக கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், ராகேஷ் சர்மா போன்றவர்களை குறிப்பிடலாம்.

உலக அளவில் அறியப்படும் இவர்களும் இந்தியாவின் விண்வெளி சார் சாதனையில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களாகவே கருதப்படுகின்றனர்.

முடிவுரை

விண்வெளியை பொருத்தவரை இந்தியாவின் சாதனை குறிப்பிடத்தக்க அளவு நிகழ்ந்த வண்ணமே உள்ளது எனலாம்.

அந்த வகையில் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் புதிய உபகரணங்களின் கண்டுபிடிப்பு ஆகியன மேலும் இந்த விண்வெளி துறையில் இந்தியாவின் செல்வாக்கினை அதிகப்படுத்தலாம்.

You May Also Like :

ஊழலற்ற இந்தியா கட்டுரை

எனது பார்வையில் சுதந்திர இந்தியா கட்டுரை