ஓசோன் படலம் கட்டுரை தமிழ்

Ozone Padalam Katturai In Tamil

இந்த பதிவில் “ஓசோன் படலம் கட்டுரை தமிழ்” பதிவை காணலாம்.

ஓசோன் படலம் என்பது எம்மையும் உலகையும் பாதுகாக்கும் கவசம் என்பதனை ஒவ்வொரு தனி மனிதனும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

ஓசோன் படலம் கட்டுரை தமிழ்

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. ஓசோன் படலத்தின் முக்கியத்துவம்
  3. ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்
  4. ஓசோன் படலம் பாதிப்படைவதனால் ஏற்படும் விளைவுகள்
  5. ஓசோன் படலத்தின் பாதுகாப்பு
  6. முடிவுரை

முன்னுரை

ஓசோன் படலம் என்பது பூமிக்கு மேல் சில கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தின் மேல் வாயு நிலையில் காணப்படும் இலகுவாக சிதையும் தன்மை கொண்டது. சூரியனின் தீங்கான புற ஊதா கதிர்வீச்சினைக் கட்டுப்படுத்தும் ஒரு படலமே ஓசோன் எனப்படும்.

இந்த ஓசோன் படலம் அழிவடைந்தால் உலகின் சமநிலை பாதிக்கப்பட்டு பெரும் அழிவை சந்திக்க நேரிடும். ஓசோன் படலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த “செப்டம்பர் 16” அன்று சர்வேதேச ஓசோன் தினம் கொண்டாடப்படுகின்றது.

இக்கட்டுரையில் ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக நோக்கலாம்.

ஓசோன் படலத்தின் முக்கியத்துவம்

சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பூமியைக் காப்பதற்கு ஓசோன் படலம் முக்கியமானதாகும். இவை இல்லையென்றால் தீங்கான கதிர்வீச்சுகள் நேரடியாக பூமியை தாக்கும்.

தாவரங்கள் செழிப்பாக வளர்வதற்கும் நல்ல விளைச்சல்களைத் தருவதற்கும், உயிரினங்கள் ஆரோக்கியமாக உயிர் வாழ்வதற்கும் ஓசோன் படலம் முக்கியமானதாகும். உலகின் சமநிலை பேணுவதில் ஓசோன் படலம் முக்கிய பங்காற்றுகின்றது.

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்

இன்று ஓசோன் படலம்அழிவடைந்து வருகின்றது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

  • பசுமை குறைந்து காற்றில் வெப்பம் பெருகியதால் ஓசோன் படலம் பாதிப்படைகின்றது.
  • வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டி இதனை பெரிதும் பாதிப்படையச் செய்கின்றது. இவை வெளியிடும் குளோரோ புளோரோ கார்பன் பெருமளவில் ஓசோனைப் பாதிக்கின்றது. குளிரூட்டி மட்டுமன்றி நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், தீயணைப்பு கருவி போன்றவற்றிலும் குளோரோ புளோரோ கார்பன் (CFC) பயன்படுத்தப்படுகின்றது.
  • உரங்களில் பயன்படுத்தப்படும் உரோமைக், ஜெட் விமானங்களிலிருந்து வெளியிடப்படும் நைட்ரிக் ஆக்சைடு போன்றனவும் ஓசோன் மண்டலத்தைப் பாதிப்படையச் செய்கின்றன.
  • பிளாஸ்டிக் எரிப்பு செய்வதாலும் ஓசோன் படலம் பாதிப்படைகின்றது.

ஓசோன் படலம் பாதிப்படைவதனால் ஏற்படும் விளைவுகள்

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால் பூமியில் பல்வேறுபட்ட விளைவுகள் நிகழ்கின்றன.

  • பனிக்கட்டி உருகி கடல் மட்டம் உயருகின்றது.
  • அதிக வெப்பம் காரணமாக வரட்சி அதிகரித்துள்ளது.
  • சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக மனிதர்களையும், விலங்குகளையும் தாக்குவதனால் தோல் புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு வகையான நோய்கள் உண்டாகின்றது. கண்களில் சதை வளர்தல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.
  • மனிதன் மட்டுமன்றி தாவரங்களும் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்குகின்றன. தாவரங்களின் உற்பத்தித் திறன் குறைந்துவடைகின்றது.
  • பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களை இழக்கும் நிலை ஏற்படும்.

ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

மக்களுக்கு ஓசோன் படலத்தை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். உலகில் வாழும் அனைத்து மக்களும் ஓசோன் படலத்தை பாதிக்கும் பொருட்களைத் தவிர்த்தல் வேண்டும்.

சூழலைப் பாதிக்கும் பொருட்களை பாவிப்பதை தவிர்த்தல் வேண்டும். குளோரோ புளோரோ காபனை வெளியேற்றும் குளிர்சாதனப் பெட்டியின் பயன்பாட்டினைக் குறைக்க வேண்டும்.

காற்று மாசுபாடுப் பொருட்களையும் தவிர்த்தல் வேண்டும். இவை மட்டுமன்றி ஓசோன் படலம் எம்மைப் பாதுகாக்கும் கவசம் என்பதனை ஒவ்வொரு தனி மனிதனும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

முடிவுரை

பூமியில் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு வளி மண்டலத்திலிருந்து நன்மை செய்யும் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறையாமல் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொரும் நினைவில் வைத்துக்கொண்டு செயற்படவேண்டும்.