உலக வெண்புள்ளி தினம்

வெண்புள்ளி தினம்

உலக வெண்புள்ளி தினம்ஜூன் 25
World Vitiligo DayJune 25

வெண்புள்ளி என்பது தொற்று நோயோ, உயிர்கொல்லி நோயோ அல்ல இது ஒருவகை ஓமோன் குறைபாட்டினால் தோல் தனது நிறத்தை இழந்து விடுவதால் வெண்புள்ளிகள் தோன்றுகின்றன.

ஆனால் பலர் இதனைத் தொற்று நோயாகக் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி இதனை தீவிர நோயாக கருதி பலரும் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் செல்ல தயங்குகின்றனர். இந்நோய் குறித்த தெளிவு இன்றளவும் பொதுமக்களிடம் இல்லாமல் உள்ளது.

உலக வெண்புள்ளி தினம் எப்போது

சர்வதேச ரீதியாக உலக வெண்புள்ளி தினம் ஜூன் 25 கொண்டாடப்படுகின்றது.

உலக வெண்புள்ளி தினம் வரலாறு

ஜூன் 25 உலக வெண்புள்ளி தினம் கொண்டாடப்படக் காரணம். உலகின் பிரபல பொப் இசை மன்னனான மைக்கேல் ஜாக்சன் மறைந்த தினம் ஜூன் 25 ஆகும்.

உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன் வெண்புள்ளி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் யூன் 25 உலக வெண்புள்ளி தினமாக பிரகடனம் செய்யப்பட்டது.

உலக வெண்புள்ளி தினம் நோக்கம்

வெண்புள்ளி என்பது ஓமொன் குறைபாடே தவிர இது ஒரு தொற்று நோய் அல்ல அத்துடன் அடைவரிடமும் சமனாக நடக்க வேண்டும். நாம் இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தவோ சமுகத்திலிருந்து ஒதுக்கவோ கூடாது என்பதனை வலியுறுத்தி இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

இயற்கைத் தீர்வுகள்

செயற்கை இரசாயன மருந்துகளை பயன்படுத்துவதை விட இயற்கை முறையிலான மருத்துவம் செய்வது உடலுக்கு பக்கவிளைவுகள் அற்ற ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.

பப்பாசிப்பழ சதையுடன் மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து வெண்புள்ளிகள் மீது தடவுவதன் மூலம் சிறந்த பலனை பெற முடியும்.

செம்பு பாத்திரங்களில் உள்ள நீரைக் குடிப்பதன் மூலம் மெலனின் அதிகளவு சுரக்கும். இதனால் வெண்புள்ளிகள் உருவாகும் தன்மை குறையும்.

காலை நேர சூரிய வெயிலில் நடப்பது நன்று. விற்றமின் D தோலிற்கு மிக முக்கியமானது. அத்துடன் விற்றமின் C, விற்றமின் B12 அதிகளவு நிறைந்துள்ள உணவுப் பொருட்கள் உண்ணுதல் ஆரோக்கியமானது.

You May Also Like :
உலக இசை தினம்
உலக பூமி தினம்