எந்திர மனிதனின் பயன்கள்

எந்திர மனிதன் பயன்கள்

எந்திர மனிதனின் பயன்கள்

எல்லாம் எந்திரமயமாகி வருகிற காலம் இது மனிதர்கள் தாங்கள் செய்யும் செயல்களை எந்திரங்களைக் கொண்டு செய்யும் வகையில் பலவற்றை உருவாக்கி வருகிறார்கள்.

மனிதர்களால் செய்ய முடியாத பணிகளை கூட எந்திரங்கள் செய்கின்றன. வீடு, அலுவலகம், தொழிற்சாலை, மருத்துவமனை என்று பல இடங்களிலும் எந்திரங்கள் பணியாற்றுகின்றன.

கணக்குப் போடும் எந்திரம், கற்றுத்தரும் எந்திரம், வேலை செய்யும் எந்திரம் என்று எங்கெங்கும் எந்திர மயமாகிவிட்டது.

ரோபோவின் வரலாறு

காரெல் கபெக் என்பவர் செக் நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் 1920ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார். இதில் ரோபோ எனும் சொல்லை முதன் முதலாக பயன்படுத்தினார்.

பொதுவாக ரோபோ என்பதற்கு மனிதன் இடும் கட்டளைகளை, நிறைவேற்றும் இயந்திர மனிதன் என இலகுவாக வரையறை செய்யலாம்.

1954ல் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் தேவோல் என்பவரே முதல் ரோபோவை வடிவமைத்தார். அந்த ரோபோவை அனைவரும் யுனிமேட் என அழைத்தனர். இந்த ரோபோ 1960ல் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இந்த ரோபோ வெப்பமான உலோகத் துண்டுகளைக் கையாளப் பயன்படுத்தப்பட்டது.

உலகின் முதன் முதலில் மனித உருவில் வடிவமைக்கப்பட்ட பெண் ரோபோவான சோபியா 2016.02.14 அன்று சவுதி தலைநகரான ரியாத்தில் நடந்த ஒரு பெரிய முதலீட்டு மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு உலகின் முதலாவது குடியுரிமையும் வழங்கப்பட்டது.

எந்திர மனிதனின் பயன்கள்

தொலைதூரம் செல்லும் ரோபோ

தொலைதூரம் செல்லும் ரோபோ விண்வெளி பயணங்கள், மனிதனால் செல்ல முடியாத இடங்கள் ஆகியவற்றுக்கு இந்த வகை ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வீடுகளில் ரோபோ

வீடுகளில் நாம் சாதாரணமாக நாள் முழுவதும் செய்யும் வேலைகளை இந்த வகை ரோபோக்கள் குறித்த சில மணி நேரங்களிலேயே செய்து முடிக்கும் திறமை படைத்தனவாக காணப்படுகின்றன.

இவை வீடுகளில் சமைத்தல், வீட்டைச் சுத்தப்படுத்தல், முதியோருக்கு உதவுதல், மரக்கறிகள் வெட்டுதல், அழுக்கு ஆடைகள் துவைத்தல், ஆடைகளை மடித்து வைத்தல் உள்ளிட்ட சகல வேலைகளையும் செய்து முடிப்பனவாக உள்ளன.

சுத்திகரிப்பு ரோபோ

மனிதன் செல்ல முடியாத கதிர்வீச்சு கூடிய, நச்சுவாயு வெளிவரும் ஆழ்குழாய், கால்வாய் ஆகிய இடங்களை சுத்திகரிக்க இந்தவகை ரோபோக்கள் பயன்படுகின்றன.

இராணுவ ரோபோ

இராணுவ பயன்பாட்டில் மனித உயிரிழப்புக்கள் வெகுவாகக் குறைக்கப்படும் என்பதால் எல்லா நாடுகளும் இராணுவ ரோபோ தயாரிப்பில் அதிகளவில் ஈடுபடுகின்றன.

எல்லைப் பாதுகாப்பு, வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்தல் போன்ற செயல்களுக்காக இராணுவத்தில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தொழிற்சாலைகளில் ரோபோ

தொழிற்சாலைகளில் மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக எந்திர ரோபோக்களைப் பயன்படுத்துவதால் குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தியை ஈட்ட முடிகிறது.

நச்சுக்காற்று நிறைந்த தொழிற்சாலைகளில் மனிதர்கள் பணி செய்ய முடியாது. ஆனால் அத்தகைய தொழிற்சாலைகளிலும் கூட ரோபோக்கள் எவ்வித களைப்பு, சோர்வின்றி மிகத் துல்லியமாக குறித்த வேலைகளை செய்து முடிக்கின்றன.

அத்துடன் தொழிற்சாலைகளில் உணவு இடைவேளை, விடுமுறை நாட்கள், நோய் வாய்ப்பட்ட விடுப்பு என எதுவும் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை.

தொழிலாளர்களால் குறுகிய நேரம் மட்டுமே குறித்த வேகம், திறமை, ஆற்றல்,  மகிழ்ச்சியுடன் வேலை செய்ய முடியும். ஆனால் எந்திர ரோபோக்கள் மேம்படுத்தப்பட்ட தர உத்தரவாதத்தைக் கொண்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் இவை அதிகரித்த உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளன. அபாயகரமான சூழலின் வேலை செய்யும் ஆற்றலையும் கொண்டிருக்கின்றன.

You May Also Like :

அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்கள்

அறிவியல் ஆக்கங்கள் கட்டுரை