திருமால் புகழ் பாடியவர்கள்

thirumal pugal padiyavargal

வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வம் திருமால். திருமாலைப் போற்றித் தமிழ் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவார். இவர்கள் பாடிய செய்யுள் தொகுப்பு நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஆகும்.

திருமால் புகழ் பாடியவர்கள்

  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசையாழ்வார்
  5. நம்மாழ்வார்
  6. மதுரகவி ஆழ்வார்
  7. குலசேகர ஆழ்வார்
  8. பெரியாழ்வார்
  9. ஆண்டாள்
  10. தொண்டரடிப்பொடியாழ்வார்
  11. திருப்பாணாழ்வார்
  12. திருமங்கையாழ்வார்

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வாரின் சொந்த ஊர் காஞ்சிபுரம். இவர் ஒரு அந்தணர் ஆவார். திருமாலின் சங்கின் அம்சத்தில் தாமரை மலரில் அவதரித்தவர் என்பது நம்பிக்கை. இவர் எழுதிய நூல் 1ம் திருவந்தாதி ஆகும். இந்த நூல் 100 வெண்பாக்களைக் கொண்டது. திருமாலினுடைய 10 அவதாரங்களையும் முதன்முதலாகப் பாடியவர் இவர் ஆவார்.

பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் மகாவலிபுரத்தை சொந்த இடமாகக் கொண்டவர். இவர் திருமாலின் கதாயுத அம்சத்தில் குறுக்கத்திப்பூவில் அவதரித்தார். இவர் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் ஆவார். இதில் 100 வெண்பாக்கள் உள்ளன. பூதத்தாழ்வார் பெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக் கொள்வார்.

பேயாழ்வார்

பேயாழ்வார் மயிலாப்பூரை சேர்ந்தவர். இவர் திருமாலின் வாள் அம்சத்தில் செவ்வல்லிப்பூவில் அவதரித்தார். பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியை இயற்றியவர் ஆவார். இதில் 100 வெண்பாக்கள் உள்ளன. பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் ஏற்றிய விளக்கில் இறைவனைக் கண்டவர் ஆவார்.

திருமழிசையாழ்வார்

இவர் திருமழிசை எனும் ஊரைச் சேர்ந்தவர். இந்த ஆழ்வார் திருமாலின் சக்கர அம்ணத்தில் தோன்றியவர் ஆவார். திருமழிசையாழ்வாருக்கு சக்கரத்தாழ்வார், பக்தி சாகரர் போன்ற மறு பெயர்கள் உண்டு. இவர் நான்காம் திருவந்தாதியை இயற்றியவர் ஆவார். நான்காம் திருவந்தாதி நான்முகன் திருவந்தாதி என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரியாழ்வார்

ஸ்ரீ வல்லிபுத்தூரைச் சேர்ந்தவர். இவர் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் திருமாலின் கருடாழ்வாரின் அம்சம் ஆவார். இவருடைய இயற்பெயர் விஸ்ணுசித்தர்.

பெரியாழ்வார் பட்டர்பிரான், கிழியறுத்த ஆழ்வார் போன்ற மறுபெயர்களால் அழைக்கப்படுகின்றார். இவருடைய வளர்ப்பு மகள் ஆண்டாள் ஆவார். பெரியாழ்வார் திருப்பல்லாண்டு, திழுமொழி போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

ஆண்டாள்

ஸ்ரீ வில்லிபுத்தூரை சேர்ந்தவர். இவர் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஆண்டாள் பூமகளின் அம்சமாக அவதரித்தார். திருவரங்கத்தில் இறைவனுக்கு மனைவியானதால்  நாச்சியார் என்று அழைக்கப்பட்டார். இவர் திருப்பாவை, திருமொழி போன்றவற்றை எழுதியுள்ளார்.

குலசேகராழ்வார்

குலசேகராழ்வார் திருவஞ்சைக்களம் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் கௌத்துவமணி அம்சத்தைச் சேர்ந்தவர். இவர் சேரமரபை சார்ந்தவர்.

இவருக்கு கொல்லிக்காவலன், கூடல் நாயகன், கோழிக்கோன் போன்ற மறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. குலசேகராழ்வார் இராமனுக்கு தாலாட்டுப் பாடிய சிறப்புக்கு உரியவர்.

தொண்டரடிப் பொடியாழ்வார்

இவர் திருமண்டலக்குடியைச் சேர்ந்தவர். வனமாலை என்னும் திருமாலின் அம்சத்தைச் சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் விப்ரநாராயணன் ஆகும். தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி போன்ற நூல்களைப் பாடியுள்ளார்.

திருமங்கையாழ்வார்

திருக்குறையலூர் என்ற ஊரைச் சேர்ந்த இவர் 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். இவருடைய இயற்பெயர் கலியன் ஆகும். திருமாலின் வில் அவதாரமாக தோன்றியவர் ஆவார்.

திருமங்கையாழ்வார் களிநாடன், கலிகன்றி, அருள்மாரி, பரகலன்,  குறையாளி, மங்கையர்க்கோன், மங்கை வேந்தன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டார். மடல் என்ற சிற்றிலக்கிய வகை, தாண்டகம், நாட்டுப்புற பாடல்கள் போன்றவற்றைப் பாடியவர் ஆவார்.

நம்மாழ்வார்

நம்மாழ்வார் திருக்குருக்கூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆவார். திருமாலின் இறைவன் அம்சமாக தோன்றியவர் ஆவார்.

இவர் சடகோபர், பராங்குசர், மாறன் போன்ற வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார். இவர் திருவாய்மொழி எனும் நூலை இயற்றியவர் ஆவார். இந்த நூல் திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிறது.

திருப்பாணாழ்வார்

உறையூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திருமாலின் ஸ்ரீவத்சம் அம்சத்தில் தோன்றியவர் ஆவார். இவர் பான்குடி இனத்தைச் சேர்ந்தவர்.

திருப்பாணாழ்வாருக்கு பாணர், முனிவாகனர், யோகிவாகனர், கவீசுவரர் போன்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றார். இவர் அமலனாதிபிரான் என்ற நூலை இயற்றியுள்ளார்.

மதுரகவி ஆழ்வார்

இவரது காலம் 9ஆம் நூற்றாண்டு. பெரியாழ்வாரோடு சேர்த்து இவரும் திருமாலின் வாகனமாக இருக்கும் கருடனின் அம்சமாகக் கருதப்படுபவர். “கண்ணிநுன் சிறுதாம்பு” என்ற நூலினை இயற்றியவர் ஆவார்.

You May Also Like:

அழகர் கோவில் வரலாறு

மாவீரன் அழகுமுத்துக்கோன் வரலாறு