சாதனை பெண்கள் கட்டுரை

sathanai pengal katturai in tamil

இந்த பதிவில் “சாதனை பெண்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

இன்றைய உலகில் பெண்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் இன்று பெண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

சாதனை பெண்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பெண்களின் ஆளுமை
  3. தடைகளை தாண்டிய சாதனைகள்
  4. முன்னுதாரணமானவர்கள்
  5. இன்றைய உலகில் பெண்கள்
  6. முடிவுரை

முன்னுரை

வரலாற்றினை புரட்டி பாரக்கையில் ஆணாதிக்க கோட்பாட்டின் விளைவாக பெண்கள் சமுதாயமானது பல இன்னல்களையும் அடக்குமுறைகளையும் காலந்தோறும் அனுபவித்து வந்துள்ளது.

இதன் விளைவால் பெண்கள் தமது சுநந்திரத்தையும் கனவுகளையும் தொலைக்கும் நிலையானது காணப்பட்டது.

ஆனால் இன்று அந்த நிலை மாறி பெண்கள் சகல துறைகளிலும் மிகச்சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தி இந்த சமூகத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர். இக்கட்டுரையில் சாதனை பெண்கள் பற்றி காண்போம்.

பெண்களின் ஆளுமை

பொதுவாகவே பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் மென்மையானவர்கள் என்ற கருத்தினை பொய்யாக்கி பெண்கள் சாதித்து வருவது அவர்களது ஆளுமை வெளிப்பாட்டை உலகுக்கு காட்டுகின்றது.

மிகச்சிறந்த தலைவர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், விளையாட்டு வீராங்கனைகள் என பிரகாசித்து வருகின்ற பல வீரமங்கைகள் எமது சமூகத்திலும் நாட்டிலும் உள்ளார்கள். குடும்ப தலமைத்துவம் பெண்களின் ஆளுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தடைகளை தாண்டிய சாதனைகள்

ஆரம்ப காலங்களில் சமூக கட்டமைப்புக்கள் மிகவும் இறுக்கமாக காணப்பட்டது. பெண்கள் கல்வி கற்க கூடாது. வெளியில் சுதந்திரமாக நடமாட கூடாது என்றெல்லாம் பல அடக்குமுறைகளால் பெண்கள் வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்க நேர்ந்தது.

புரட்சிகரமான சமூக மாற்றங்கள் பெண்களை பல வழிகளிலும் சாதிக்க வழிவகுத்தது என கூறலாம். இதனை “வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை குனிந்தார்” என்று பெண்விடுதலை பற்றி பாரதியார் பாடுகின்றார்.

முன்னுதாரணமானவர்கள்

இந்திய அளவிலும் உலக அளவிலும் பல வழிகளிலும் சாதித்து காட்டி பலருக்கும் முன்னுதாரணமாகவும் உத்வேகமாகவும் விளங்கும் பலமான பெண்கள் பலர் உள்ளனர்.

உதாரணமாக இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பட்டேல் மற்றும் இந்திராகாந்தி அவர்களோடு இந்தியாவின் முதல் விண்வெளி வீரமங்கை கல்பனா சௌலா மற்றும் தியாகத்தின் உருவமான அன்னை திரேசா போன்ற சாதனை பெண்களை குறிப்பிட்டு கொள்ள முடியும்.

இன்றைய உலகில் பெண்கள்

இன்றைய உலகில் பெண்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் இன்று பெண்கள் வேலை பாரக்கின்றனர்.

இந்த வளர்ச்சி மேலை நாடுகளில் பாலின சமத்துவம் என்ற புதிய எண்ணக்கருவை மலர செய்திருக்கின்றது. இதன் வாயிலாக சமூக பிரச்சனைகள் வெகுவாக குறைந்து மக்களது நலவாழ்வு மேம்பட ஆரம்பித்துள்ளது. இது ஒரு முற்போக்காக கருதப்படுகின்றது.

முடிவுரை

மனித சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சமாதானம் என்பன மலர பெண்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதும் அவர்களது சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுவதும் மிகவும் அவசியமானதாக உள்ளது.

இந்த உயர்வான கொள்கைகளை எமது நாடுகளும் பின்பற்றுவதன் வாயிலாக ஒருங்கிணைந்த சமூகத்தின் நிலையான விருத்தி நிலையினை அடைந்து கொள்ள முடியும் என்பது வெளிப்படையாகும்.

You May Also Like :
எரிபொருள் பயன்பாடு கட்டுரை
பாரதியின் விடுதலை உணர்வு கட்டுரை