அழகர் கோவில் வரலாறு

azhagar kovil history in tamil

இயற்கை, இலக்கியம், வரலாறு என்று எல்லா வகையிலும் பழமை வாய்ந்த மலையே அழகர் மலை ஆகும். இம் மலையிலேயே சிறப்பு வாய்ந்த விஷ்ணு கோயிலான அழகர் கோயில் உண்டு.

இந்த அழகர் மலை சங்க இலக்கியமான பரிபாடல், காப்பியமான சிலப்பதிகாரம், ‌இதிகாசமான இராமாயணம், மகாபாரதம் போன்ற இலக்கியங்களால் சிறப்பிக்கப்பட்ட மலையே அழகர் மலை அதில் விஸ்ணு ஆலயம் அமைந்து இருப்பது இன்னும் வியக்கத்தக்கது.

இறைவன்அழகர் அல்லது சுந்தரப் பெருமாள்
இறைவிசுந்தரவல்லி
தீர்த்தம்நுபுரகங்கை எனும் சிலம்பாறு
உற்சவர்கள்ளழகர்
வேறு பெயர்கள்சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம்

ஆலயம் அமைந்துள்ள இடம்

மதுரை நகரில் இருந்து 21 கி.மீ தொலைவில் அழகர் மலை அடிவாரத்தில் அழகர் கோவில் அமைந்து உள்ளது.

அழகர் கோவில் அருகில் அமைந்துள்ள ஆலயங்கள்

அழகர்மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் முருகனின் ஆறு படை வீடுகளில் ஆறாவதான பழமுதிர்ச் சோலை முருகன் கோயில் அமைந்துள்ளது.

பழமுதிர்ச் சோலை முருகன் கோயிலில் இருந்து ஒரு கி.மீ தூரத்தில் அமைந்த ராக்காயி அம்மன் கோயில் நுபுரகங்கை நீருற்று உள்ளது.

மூர்த்தி சிறப்பு

மூன்று ஆண்டுக்கு ஒருமுறை மூலவருக்கு இடம் பெறும் தைல பிரதிஷ்டை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த உற்சவம் தை மாதம் அமாவாசை அன்று தொடங்கி ஆடி அமாவாசை வரை ஆறு மாத காலத்திற்கு இடம்பெறும். இந்த நாட்களில் பக்தர்கள் மூலவரை மட்டும் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.

உற்சவ மூர்த்தியின் சிறப்பு

உற்சவ மூர்த்தி உலகிலேயே பழமையான அபரஞ்சி தங்கத்தால் ஆனது. இது எல்லா உலோகங்களும் கலந்த தூய்மையான தங்கம் ஆகும்.

சித்திரை மாத சுவாமி ஊர்வலத்தின் போது உற்சவ மூர்த்தி தங்ககுதிரையில் வலம் வருவார். இவருக்கான அபிசேகம் நுபுரகங்கை தீர்த்தத்தால் மட்டுமே இடம் பெற வேண்டும்.

அவ்வாறு இல்லாவிடின் அச்சிலை கறுத்துவிடும் என்பது ஐதீகம். அதனால் ஊர்வலம் செல்லும் போது நுபுர கங்கையின் நீரையும் எடுத்து வந்து விடுவர்.

தல அமைப்பு

மூலவர் இருக்கும் கருவரை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.

ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத்தூன்கள் உள்ளன. இசைத்தூன்களின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில் சுழழும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாத வகையில் ஒரு பந்து ஒன்று உள்ளது.

கல்யாண சுந்தர வல்லி தாயாரின் சந்நிதி கலைநயத்துடன் உள்ளது.

வசந்த மண்டபத்தில் இராமாயண, மகாபாரத நிகழ்வுகளை சித்தரிக்கும் அழகிய ஓவியங்கள் உள்ளன.

காவல் தெய்வமான பதினெட்டாம் படி கருப்பசாமியினுடைய கோபுரம் கலைநயமிக்கது.

கோயிலை சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டைகள் உள்ளன. அவையாவன

  • இரணியன் கோட்டை
  • அழகாபுரி கோட்டை

அழகர் கோவில் தல வரலாறு

சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள வருமுன் கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர்ப்பட்ட துர்வாசர் முனிவரைக் கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர் சுபதமுனிவரை மண்டூகமாக மாறும்படி சாபமிட்டார்.

சாபம் நீங்க சுபதமுனிவர் வைகை ஆற்றில் தவளை வடிவில் நீண்ட காலம் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும், அழகர் மாலிருஞ்சோலை நம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகின்றார்.

ஆலயத்திற்கு கிடைத்த மன்னர் ஆதரவு

குலசேகர பாண்டியனின் மகனான மலையத்துவசப் பாண்டியனே இவ்வாலயத்தைக் கட்டினார். மலையத்துவசப் பாண்டியனின் மகளே மீனாட்சி என்ற கருத்தும் உண்டு. மலையத்துவசப் பாண்டியனே இக்கோயிலுக்கு திருப்பணி செய்து அழகர் மலையை கட்டிக்காத்தான்.

அதன் பின்பு மலையை கைப்பற்றிய முகம்மதியர்கள், விஜயநகர பேரரசு, பிரிட்டிஷ் கம்பனி வரை இக்கோயிலையும் மலையையும் முறையாக பராமரித்து வந்தனர்.

இந்த கோயிலுக்கு சொந்தமாக மன்னர்கள் காலத்திலே பல கிராமங்கள் தானமாக வழங்கப்பட்டன. இவ்வாறான மன்னர்களின் சேவையின் காரணமாக அழகர் சுவாமி கோயில் இன்றும் செழிப்பு மங்காமல் சிறப்பாக நிலைத்து நிற்கின்றது.

அழகர் மலையின் சிறப்புகள்

காப்பியங்கள், இதிகாசங்கள், பரிபாடல் போன்ற எல்லாவற்றினாலும் வர்ணிக்கப்பட்ட மலை.

பாண்டிய மன்னர்கள் பெரிய மதில்களை எழுப்பி தன்னுடைய படை சூழ இராணுவ தலம் அமைத்து இருந்த மலை.

மதுரையில் இருந்து வடக்கே 18 கி.மீ. நீளத்துடனும் 1049 அடி உயரத்தில் இயற்கை வளம் நிறைந்த பச்சை பசேளென கம்பீரமாக காட்சி அளிக்கும் மலையே இம்மலை.

இம்மலையானது திருமாளிருக்கும் சோலை, சோலை மலை, மாலிரும் குன்றம், வனகிரி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும்.

இம்மலையிலும் கோயிலிலும் 120 சாசனங்கள் உள்ளன. அவை பாண்டிய, சோழர், நாயக்கர் போன்றோரின் குறிப்புக்களை எடுத்துரைக்கின்றன. மற்றும் அவர்கள் செய்த திருப்பணியையும் எடுத்துரைக்கின்றன.

பஞ்ச பாண்டவர் மறைவாக வாழ்ந்த குகையும் இம்மலையில் காணப்படுகின்றது.

இங்கு 9 அடி கொண்ட கல் படுக்கைகளும்‌ காணப்படுகின்றன.

கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்குரிய வட்ட எழுத்துக்களும் இக்குகையில் காணப்படுகின்றது.

அழகர் ஆலயத்தின் சிறப்புக்கள்

ஆழ்வார்கள் காலத்தில் முதலில் பாடப்பட்டு மங்களாசனம்‌ செய்யப்பட்ட ஆலயம்.

சங்க காலத்திலிருந்து முதல் கட்டப்பட்ட வைணவ ஆலயம்.

அபரஞ்சி தங்கத்தாலான சிலை உள்ள ஆலயம்.

கருவரையின் மேல் வலைவான வடிவில் விமானம் உள்ள ஆலயம்.

இவ்வாலயத்தின் வாசலே சுற்றி உள்ள கிராமங்களுக்கு பஞ்சாயத்து தீர்ப்புகளை வழங்கும் ஆலயம்.

இங்கு காணப்படும் கருப்பணசாமி ஆலயத்தின் சிறப்புக்கள்

அழகரை காக்கும் தெய்வமாக காணப்படுகிறார் பதினெட்டுப் படி கருப்பணசாமி. இக் கோயிலின் முன் காணப்படும் கதவு எந்நேரமும் மூடப்பட்டே காணப்படுகின்றது.

சித்திரை திருவிழாக்கு அழகர் வெளியே வரும்பொழுது இயக்கத்தின் முன்பு நின்று உத்தரவு பெற்ற பின்பே வெளியே வரவேண்டும் என்பது ஐதீகம்.

இவ்வாறு அன்று முதல் இன்று வரை சிறப்பு பெற்ற அழகர் ஆலயத்தின் சிறப்புக்கள் என்றும் மங்கா முத்துக்கள். எனவே இவ்வாறு சிறப்பு வாய்ந்த அழியாமல் வீற்றிருக்கும் விஷ்ணுவை வழிபட்டு பயனடைவோம்.

You May Also Like :
மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு
பாகம்பிரியாள் கோயில் வரலாறு