வாசிப்பின் பயன்கள் கட்டுரை

puthaga vasippu katturai in tamil

வாசிப்பின் பயன்கள் கட்டுரை

இந்த பதிவில் “வாசிப்பின் பயன்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

ஒரு மனிதனும் ஒரு மொழிப்புலமை பெற வேண்டுமாயின் அவர்களுக்கு அந்த மொழிசார்ந்த வாசிப்பு என்பது மிகவும் அவசியமானதாகும்.

வாசிப்பின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மொழிப்புலமை
  • பகுத்தறிவு
  • பொது அறிவு
  • சிறந்த தலைவர்கள்
  • முடிவுரை

முன்னுரை

“நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்கிறார் ஒளவை பிராட்டியார்.

அந்த வகையில் ஒரு மனிதன் எந்தளவிற்கு வாசிப்பு பழக்கம் உடையவனாக இருக்கிறானோ அந்தளவிற்கு அவனது அறிவும் வாழ்க்கை மீதான புரிதலும் இருக்கும் என பலரும் கூறுகின்றனர்.

ஆதலால் தான் வாசித்தல் பண்பானது மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் மனிதர்களுக்கு கிடைக்க கூடிய பலன்கள் ஏராளம் இருக்கின்றன இவை பற்றி இக்கட்டுரையில் நாம் நோக்கலாம்.

மொழிப்புலமை

ஒவ்வாரு மனிதர்களும் தங்களுடைய மொழிசார்ந்த வாசிப்பினையே முதலில் செய்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலமாக அவர்களுக்கு மொழிசார்ந்த அறிவானது வளர்ச்சி அடைகின்றது.

உதாரணமாக நாம் குழந்தை பராயத்தில் தமிழ் புத்தகங்களை படித்தமையின் விளைவாகவே எங்களுக்கு தாய்மொழியான தமிழ்மொழி வாய்த்தது.

எனவே எந்த ஒரு மனிதனும் ஒரு மொழிப்புலமை பெற வேண்டுமாயின் அவர்களுக்கு அந்த மொழிசார்ந்த வாசிப்பு என்பது மிகவும் அவசியமானதாகும்.

பகுத்தறிவு

பொதுவாகவே கல்வி அறிவானது ஒரு மனிதனுக்கு அறிவினை கொடுக்கிறது. இது மனிதனுக்கான வாழ்க்கை அனுபவங்களை கொடுப்பதில்லை.

மாறாக புத்தகங்கள் மனிதனை சிந்திக்க தூண்டுகின்றன. மனிதனிடத்து இருக்கின்ற அறியாமை எனும் காரிருளை விலக்கி அறிவொளியினை ஊட்டுகின்றன. சில தலைசிறந்த புத்தகங்கள் மனிதர்களுடைய வாழ்வையே மாற்றி மகத்தானவையாக மாற்றுகின்றன.

உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்கள் சிறந்த புத்தக வாசிப்பு உடையவர்களாகவே இருப்பார்கள். மனிதனுக்கு வாழ்க்கை தொடர்பான புரிதலை வாசிப்பானது ஏற்படுத்துகின்றது.

பொது அறிவு

சில மனிதர்கள் ஆக சிறந்த கல்வியாளர்களாக இல்லாத போதும் மிகச்சிறந்த உலக ஞானமும் தீர்க்க தரிசனமும் உடையவர்களாக இருப்பார்கள். இதற்கு வாசிப்பு ஒரு அடிப்படையான விடயமாகும்.

புத்தகங்கள் அந்தவகையில் மிகச்சிறந்த நண்பர்கள் உலகத்தில் இடம்பெற்ற அத்தனை வரலாறுகள், சரித்திரங்கள் போன்ற உலக விடயங்களை காட்சி படிமமாக நமக்கு விபரிக்க வல்லன ஆதலால் தான் உலக அறிவு பெற வாசிப்பு மிகவும் அவசியமாகும்.

சிறந்த தலைவர்கள்

இந்த உலகத்தில் சிறந்த தலைவர்களாக இருந்த மனிதர்கள் மிகச்சிறந்த வாசிப்பு பழக்கம் உடையவர்களாகவே உள்ளனர்.

அந்த வரிசையில் “நெல்சன்மண்டேலா, அப்துல்கலாம், ஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, கார்ல்மாக்ஸ், சே-குவேரா” போன்ற புகழ்பூத்த தலைவர்களை நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்.

ஒரு காலணி தைக்கும் தொழிலாளியின் மகன் அமெரிக்க ஜனாதிபதியாக மாறியது அவரது கடின முயற்சியும் மிகச்சிறந்த வாசிப்பு பழக்கமுமே காரணமாக இருந்தது.

முடிவுரை

பொதுவாகவே உலகத்தில் தலைசிறந்த நல்ல பழக்க வழக்கங்களில் வாசிப்பு என்பது முதன்மையானதாகும்.

வாசிப்பதனால் தான் ஒரு மனிதன் பூரணம் அடைகிறான் என்பது போல ஒரு சமூகத்தில் தவறான பாதையில் வெல்பவர்களை நல்வழிப்படுத்த சிறந்த நூல்களே சிறந்த வழிகாட்டிகளாக இருக்க முடியம்.

இதனால் தான் ஓர் ஊரில் நூலகம் திறக்கப்பட்டால் பல சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என சொல்லப்படுகின்றது.

You May Also Like:
புத்தகம் பற்றிய கட்டுரை
மாணவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்