தமிழ் மொழியின் பெருமைகள் கட்டுரை

Tamil Moliyin Perumaigal

பல தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழ் மொழியின் பெருமைகள் கட்டுரை பதிவை இங்கு காணலாம்.

தமிழ் மொழியின் பெருமைகளை ஒரு பதிவில் அடக்கி விட முடியாது. அதன் சிறப்பும் பெருமைகளும் எண்ணில் அடங்காதவை மட்டுமல்ல மொழி ஆராச்சியாளர்களை கூட வியக்க வைக்கின்றது.

சங்கம் வைத்து மொழி வளர்த்த ஒரு மொழியாக தமிழ் மொழியே இருக்கின்றது. நம் இனத்தவர்கள் தமிழ் மொழியை உயிருக்கு மேலாக நேசித்து வாழ்ந்தார்கள் தமிழ் மொழிக்காக பல தியாகங்களையும் அர்ப்பணிப்பையும் செய்திருக்கின்றார்கள்.

தமிழ் மொழியின் பெருமைகள் கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. உயர்தனிச் செம்மொழி
  3. தமிழ் மொழி இலக்கியங்கள்
  4. முச்சங்கம்
  5. தமிழ்மொழியின் பெருமை
  6. முடிவுரை

முன்னுரை

“கல் தோன்றி மண்தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த தமிழ்ˮ என்பது எல்லா மொழிகளிலுமே தொன்மையான மொழி தமிழ்மொழி என்பதனைப் புலப்படுத்துகின்றது.

பல மொழிகள் பூமியில் தோன்றி இன்று காணாமல் போய் உள்ளன. ஆனால் தமிழ்மொழி என்றும் இளமை மங்காது நிலைத்துள்ளது.

“தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்ˮ என்றார் பாரதியார். உயிருக்கும் மேலான தமிழ் மொழியின் பெருமைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உயர்தனிச் செம்மொழி

1856 ஆம் ஆண்டு கால்டுவெல் என்பவர் தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழி எனக் கூறினார். அமெரிக்காவில் உள்ள ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக்கழகம் உலகில் எம்மொழி செம்மொழி என ஆராய்ந்தது.

இவ்வாறு ஆராச்சியின் முடிவில் தமிழ் மொழிக்கு மட்டுமே செம்மொழிக்குரிய 11 வகையான தகுதிகள் இருக்கின்றன என அறிக்கையிட்டது. அத்தகுதிகளாக

  • தொன்மை
  • பிறமொழித் தாக்கம் இன்மை
  • தாய்மை
  • தனித்தன்மை
  • இலக்கிய இலக்கண வளம்
  • நடுவு நிலைமை
  • பொதுமைப் பண்பு
  • கலை இலக்கிய சிந்தனை வெளிப்பாடு
  • உயர் சிந்தனை
  • பட்டறிவு வெளிப்பாடு
  • மொழிக்கோட்பாடு

என்பனவே அவையாகும். உலகத் தமிழ் செம்மொழி மாநாடு 23.06.2010 தொடக்கம் 21.06.2010 வரை 5 நாட்கள் கோயம்புத்தூரில் நடைபெற்றது.

தமிழ் மொழி இலக்கியங்கள்

தமிழ் மொழியில் ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்துமே அறம் போற்றும் அரிய நூல்களாகும். ஐம்பெரும் காப்பியங்கள் தமிழ் இலக்கியச் சிறப்புகளாகும்.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்ˮ என சிலப்பதிகாரமும்⸴ “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேˮ என மணிமேகலையும் உரைக்கின்றனர்.

முச்சங்கம்

பண்டைய தமிழ் மன்னர்கள் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்தார்கள். முதற்சங்கம்⸴ இடைச்சங்கம்⸴ கடைச்சங்கம் என்பனவே அவையாகும். அகத்தியனார் போன்ற புலவர்கள் சங்க காலப் புலவர்கள் ஆவர்.

சங்கம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச்சாத்தனார். முச்சங்கம் பற்றி விரிவான செய்தியை கூறியவர் இறையனார் ஆவார்.

தமிழ்மொழியின் பெருமை

தமிழ் மொழியானது இனிமையான மொழியாகும். இயல்⸴ இசை⸴ நாடகம் என்பன முத்தமிழுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும். வேறு எந்த மொழியிலும் இல்லாத ஒலிச் சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. “ழˮ இதற்குச் சான்றாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரே இனத்தால் ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப் பெற்று வருகின்றது. இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழாகும். உலகின் பழம்பெரும் மொழி தமிழாகும்.

தமிழின் சிறப்பை உணர்ந்த மேலை நாட்டு அறிஞர் டாக்டர் கி.யூ. போப் தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தனது கல்லறையில் “ஒரு தமிழ் மாணவன்ˮ என்று பொறிக்கச் செய்தார். இதன்மூலம் தமிழ் மொழியின் பெருமையை அறிய முடிகின்றது.

முடிவுரை

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்ˮ என்றார் பாரதி. இன்று வேற்று மொழி பேசுபவர்களும் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுகின்றமை தமிழ் மொழியின் பெருமையே ஆகும்.

தமிழராய் பிறந்ததற்கு நாமும் பெருமை கொள்வோம். தமிழின் பெருமையை உணர்ந்து தமிழ் மொழியைப் பேற்றி வளர்த்திடுவோம்.

You May Also Like:

பாரதியார் பற்றிய கட்டுரை
தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்