தென்னை மரத்தின் பயன்கள் கட்டுரை

thennai maram katturai in tamil

இலங்கை மற்றும் இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புக்களில் அதிகம் வளரும் மரங்களுள் ஒன்றே தென்னை மரமாகும். அந்த வகையில் தென்னிந்திய சமையலில் முக்கிய பங்கை வகிக்கின்றது. தென்னை மரத்தினால் எமக்கு கிடைக்கும் பயன்கள் அளப்பரியதாகவே திகழ்கின்றன.

தென்னை மரத்தின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தென்னை மரத்தின் பயன்கள்
  • மருத்துவத்திற்கு உதவும் தென்னை
  • தென்னிந்திய உணவுகளில் தேங்காயின் பயன்பாடு
  • தாகத்தை தணிக்கும் இளநீர்
  • முடிவுரை

முன்னுரை

தென்னை மரங்கள் ஊடாக பெரும் பயன்கள் எம்மை வந்தடைந்த வண்ணமே உள்ளன. இன்று உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் தென்னை மரங்கள் வளர்க்கப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

அந்த வகையில் இலங்கை மற்றும் இந்தியாவில் தமிழகம், கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் தென்னை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. பல பயன்களை தரும் தென்னை மரம் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

தென்னை மரத்தின் பயன்கள்

தென்னை மரத்தின் பயன்களானவை எண்ணிலடங்காதவை என்றே கூறலாம். தென்னையிலிருந்து கிடைக்கப் பெறும் பிரதானமான பயனாக இளநீர் கிடைக்கப் பெறுகின்றது. இளநீரானது எமது தாகத்தை தனிப்பது மாத்திரமன்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகின்றது.

அதே போன்று தேங்காய் மட்டையை உடைத்து கிடைக்கப் பெறும் சிரட்டை மூலமாக அகப்பை செய்து கொள்ள முடியும். தென்னை ஓலைகள் குடிசை வீடுகளின் கூரைகளாக பயன்படுத்தப்படுகின்றது.

மேலும் சமயல் தேவைகளுக்கும், கைப்பேணி, கயிறு, துடைப்பம் போன்ற பொருட்கள் செய்யவும், தேங்காய் எண்ணெய்யினை பெற்றுக் கொள்ளவும் தென்னை மரம் துணைபுரிகின்றது.

மருத்துவத்திற்கு உதவும் தென்னை

தென்னை மரத்திலிருந்து கிடைக்கப் பெறும் தேங்காய் முதல் இளநீர் வரையான அனைத்தும் உடலிற்கு மருத்துவ ரீதியான பலன்களை தரக்கூடியனவாகும். தேங்காயில் உள்ள பேட்டி ஆசிட் என்ற நொதியமானது எமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகின்றது.

தேங்காயில் விற்றமின் சி சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றது. எமது உடலில் தீயால் ஏற்பட்ட காயங்களுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்தாகும். தீக்காயம் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெய்யை பூசி வருவதன் மூலம் அதனை குணப்படுத்த முடியும்.

அத்தோடு தேங்காய் பாலானது உடல் வலிமையை ஏற்படுத்துவதாக அமைவதோடு மாதவிலக்கின் போது அதிகரித்த உதிரப்போக்கு ஏற்படுமாயின் தென்னையின் வேரிலிருந்து கிடைக்கப் பெறும் சாறு இதனை கட்டுப்படுத்த உதவுகின்றது. இவ்வாறாக பல்வேறு மருத்துவ தன்மைகளை கொண்டதொரு மரமாகவே தென்னை காணப்படுகின்றது.

தென்னிந்திய உணவுகளில் தேங்காயின் பயன்பாடு

இந்திய தேசத்தில் அதிகளவான தென்னை மரங்கள் காணப்படுவதோடு மட்டுமல்லாமல் அதிகளவு தேங்காய் சாகுபடி உள்ள மாநிலமாக கேரளா மாநிலம் திகழ்கின்றது.

இந்தியாவில் தென்னையில் இருந்து கிடைக்கப் பெறும் தேங்காயிற்கு பிரதான இடமே வழங்கப்படுகின்றது. மேலும் பூஜைகளிலும் பிரதானமானதாக தேங்காய் திகழ்வதானது தென்னையின் முக்கியத்துவத்தினையே எடுத்தியம்புகின்றது.

தாகம் தீர்க்கும் இளநீர்

தென்னையில் இருந்து கிடைக்கப் பெறும் பயன்களுள் ஒன்றாகவே இளநீர் காணப்படுகின்றது. தேங்காயானது இளசாக காணப்படுகின்ற போதே அதனை நாம் இளநீராக கருதுவோம். எமது தாகத்தை தணிக்கும் நீராகவே இளநீர் விளங்குகின்றது.

இளநீர் அருந்துவதன் மூலம் எமது வயிற்றில் காணப்படும் தீய புழுக்கள் அழிக்கப்படுகின்றது. மேலும் குடல் நோய்களும் எம்மை அண்டாது. அதேபோன்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் வழங்குவதனூடாக நல்ல சக்தி கிடைக்கப் பெறுகின்றது.

முடிவுரை

தென்னை மரத்தின் மகத்துவத்தை அறிந்தவர்கள் வீட்டிற்கொரு தென்னை மரத்தினையாவது நடல் வேண்டும். பல பலனை கொண்ட தென்னை மரத்தினூடாக பல்வேறு நன்மைகள் வந்தடைவதானது சிறப்பிற்குரியதாகும்.

You May Also Like:

புயல் பற்றிய கட்டுரை

மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை