ஆலய வழிபாடு கட்டுரை

aalaya vazhipadu katturai in tamil

ஆலய வழிபாடு கட்டுரை

இந்த பதிவில் “ஆலய வழிபாடு கட்டுரை” பதிவை காணலாம்.

மனிதர்களின் மனங்கள் அமைதியின்றி தவிக்கும் போதெல்லாம் இறைவன் எனும் நாமத்தை பலர் வாயிலும் உச்சரிக்க காணலாம்.

ஆலய வழிபாடு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • யாவற்றுக்கும் மேலான இறைவன்
  • மன அமைதி
  • வாழ்வில் முன்னேற்றம்
  • கடைப்பிடிக்க கூடாதவை
  • முடிவுரை

முன்னுரை

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஒளவையாரின் வாக்காகும் மனிதர்களாக பிறந்த நாம் எமக்கு மேலான ஒரு ஆற்றல் மிக்க சக்தியான இறைவனுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

இந்த பரந்த இயற்கை இறைவனின் கொடை என்று கூறுவார்கள். அத்தகைய இறைவனை மனதார நினைத்து வழிபடுவதும் நன்றி செலுத்தவும் உகந்த இடங்களாக ஆலயங்கள் விளங்குகின்றன. இக்கட்டுரையில் ஆலய வழிபாடும் அதன் மகத்துவங்கள் பற்றியும் காண்போம்.

யாவற்றுக்கும் மேலான இறைவன்

மனிதன் எத்தகைய ஆற்றல்களை கொண்டவனாக இருப்பினும் இயற்கையினை அவனால் கட்டுப்படுத்த முடியாது காலத்துக்கு காலம் இயற்கையும் அதனோடு சேரந்த இந்த சர்வ படைப்புக்களும் மனிதனை சிறுமைப்படுத்தி கொண்டே இருக்கின்றன.

இவை எமக்கு மேலான இறைவனின் வல்லமையினையும் பெருமையினையும் நமக்கு புலப்படுத்துகின்றன.

வாழ்வின் பல இக்கட்டான நிலைகளில் நாம் இறைவனே கதி என்று வேண்டுவதன் வாயிலாக இது புலனாகின்றது.

மனிதர்களின் மனங்கள் அமைதியின்றி தவிக்கும் போதெல்லாம் இறைவன் எனும் நாமத்தை பலர் வாயிலும் உச்சரிக்க காணலாம்.

மன அமைதி

வாழ்வில் எத்தனை செல்வங்களை உடையவர்களாக இருந்தாலும். எத்தனை அதிகாரங்களை உடையவர்களாக இருந்தாலும் மனநிம்மதி என்ற ஒரு விடயம் ஆன்மீகத்துடன் தொடர்புடையது அது பலருக்கும் இங்கே கிடைப்பதில்லை.

நாம் எமது தேவைறற்ற ஆசைகளை துறந்து அன்போடும் அடக்கத்தோடும் இறைவனை மனதில் கொண்டு கீழ்ப்படிகின்ற போது மன அமைதி வாழ்வில் கிடைக்கின்றது.

திசை தெரியாமல் தவிக்கும் மனிதனை நல்வழிப்படுத்தும் ஒரு மார்க்கமாக இந்த ஆலய வழிபாடுகள் காணப்படுகின்றன.

வாழ்வில் முன்னேற்றம்

இறைவனிடமும் தன் பெற்றோர்களிடமும் தனக்கு கற்று தருபவர்களிடமும் பணிகின்றவன் வாழ்வில் உயர் நிலையை அடைவது திண்ணம்.

ஆலய வழிபாடுகள் மனித மனங்களில் நல்ல எண்ணங்களை உருவாக்குவதனால் அந்த நல்லெணங்கள் அவனை மகத்தான செயல்களை ஆற்ற தூண்டுகின்றது. இதன் மூலம் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் பல வழிகளிலும் முன்னேற்றம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

இறை நம்பிக்கையானது வாழ்வில் போராட ஒரு தெம்பினை தருவதனால் எளிதாக வாழ்வில் முன்னேற முடிகின்றது.

கடைப்பிடிக்க கூடாதது

பொதுவாக ஆலயங்களில் கடைப்பிடிக்க கூடாத விடயங்களாவன. மனிதநேயமற்ற சில எண்ணங்களும் கொள்கைகளையும் ஆலயங்களில் கடைப்பிடிக்க கூடாது.

இரக்கம் அற்ற பஞ்சமா பாதகங்கள் எனப்படுகின்ற செயல்களை ஒரு போதும் ஆலயங்களில் ஆற்ற கூடாது.

மற்றும் மும்மலங்கள் எனப்படும் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை இல்லாது ஒழித்து மனதாலும் உடலாலும் சுத்தமானவர்களாக நாம் ஆலயங்களில் ஒழுக வேண்டும்.

முடிவுரை

“கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். ஆலயங்கள் மக்களின் நல் ஒழுக்கத்துக்கும் முன்னேற்றத்துக்கும் அடிப்படையான நிலையங்களாக விளங்குகின்றன.

சமூக மாற்றங்களுக்கு மிகவும் முக்கியமான இடத்ததை இந்த ஆலயங்கள் வழங்க வேண்டும். மனிதனை மேன்மைப்படுத்தும் வழியாக நாம் இந்த ஆலய வழிபாடுகளை கைக்கொள்ள முடியும்.

You May Also Like :
சமயபுரம் மாரியம்மன் வரலாறு
குமரகுருபரர் வாழ்க்கை வரலாறு