மாணிக்கவாசகர் வேறு பெயர்கள்

manickavasagar veru peyargal in tamil

மாணிக்கவாசகரின் வரலாறு

மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் சிவபாதசரிதையருக்கும் சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திருவாதவூரர்.

இவர் தன்னுடைய இளமைக் காலத்திலேயே கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினார். அதனால் அப்போது பாண்டிய நாட்டு மன்னனான அரிமர்த்தன பாண்டியன் இவரைத்  தன்னுடைய அரச சபையில் அமைச்சராக்கினார்.

இவர் அரச சபையில் தன்னுடைய பொறுப்புக்களையும் கடமைகளையும் சரிவரச் செய்தமையால் இவருக்கு அரசனால் “தென்னவன் பிரமராயன்“ என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு, எல்லாம் இருந்த போதும் இவை வாழ்வின் இறுதி நோக்கம் அல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரர் சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.

மாணிக்கவாசகர் செய்த அற்புதங்கள்

  • சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது.
  • பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை.
  • தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.
  • எல்லாரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

மாணிக்கவாசகர் வேறு பெயர்கள்

  • அருள்வாசகர்
  • மணிவாசகர்
  • திருவாதவூரடிகள்
  • மணிமொழியார்
  • தென்னவன் பிரமராயன்
  • திருவாதவூரார்
  • அழுது அடியடைந்த அன்பர்
  • வாதவூர் அடிகள்
  • பெருந்துறைப் பிள்ளை

மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள்

  • 8 ஆம் திருமுறை (திருவாசகம், திருக்கோவையார்)
  • திருவெம்பாவை
  • போற்றித் திருவகவல்

திருவாசகம் வேறு பெயர்கள்

  • தமிழ் வேதம்
  • சைவ வேதம்

திருக்கோவையார் வேறு பெயர்கள்

  • திருசிற்றம்பலக்கோவை
  • ஆரணம்
  • ஏரணம்
  • காமநூல்
  • எழுத்து

திருவாசகத்தின் சிறப்பு

“திருவாசகத்திற்கு உருகார், ஒரு  வாசகத்திற்கும் உருகார்”

திருவாசகத்தை மெய்யன்புடன் ஓதுவார்கள், ஓதுவதைக் கேட்போர் அனைவரையும் திருவாசகம் பேரின்பத்தில் திளைக்கச் செய்ய வல்லது.

திருவாசகம் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, “உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை” என்று குறிப்பிடுகின்றார்.

இறைவன் மீது தீராத பற்றும் பக்தியும் கொண்ட. மணிவாசகர் ஆனிமக நன்னாளில் இறைவனடி சேர்ந்தார்.

You May Also Like:
ஆதி சங்கரர் வரலாறு
குமரகுருபரர் வாழ்க்கை வரலாறு