விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை

Vivasayam Andrum Indrum Katturai

இந்த பதிவில் “விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை” பதிவை காணலாம்.

இன்றைய நவீன தொழில் நுட்பமானது விவசாய துறை உட்பட அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்தி வருகின்றது.

விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வரலாறு
  3. விவசாயத்தின் முக்கியத்துவம்
  4. இன்று விவசாயத்தில் தொழில்நுட்பம்
  5. விவசாயம் எதிர் நோக்கும் பிரச்சினைகள்
  6. முடிவுரை

முன்னுரை

விவசாயம் “கமம்” என்றும் அழைக்கப்படுகின்றது. ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயமாகும். உணவு இல்லையேல் மனிதன் இல்லை. மனிதன் உணவை உண்டு உயிர் வாழ்கிறான். இத்தகைய உணவை அள்ளித் தருவது விவசாயமே.

விவசாயத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்ததால் தான் நம் முன்னோர்கள் விவசாயத்தைப் பேணிப் பாதுகாத்தனர். வாழ்வோடு ஒன்றிணைந்த பண்டிகையாக தமிழர்கள் விவசாயத்தை கொண்டாடி வருகின்றனர்.

நாகரிகங்களுக்கு வழிவகுத்த சிறப்பான மானுடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். மனித சமூகங்கள் பல்லாயிரக் கணக்கான வருடங்கள் வேளாண்மை செய்து வந்துள்ளனர். இன்றும் செய்து வருகின்றனர். இதனை இக்கட்டுரையின் மூலம் காண்போம்.

வரலாறு

விவசாயத்தின் வரலாறானது உலகளாவிய சமூக-பொருளாதார மாற்றத்திற்கு ஒரு முக்கியமான காரணியாகும். அதுமட்டுமன்றி நாகரீகத்தின் மாற்றத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளது.

வேளாண்மை தொழிலானது சுமார் 10000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இது பல்வேறு காலகட்டங்களில் வளர்ச்சி கண்டது. இதன் விளைவே பல புதிய பயிர்களின் உருவாக்கமாகும்.

எகிப்து மத்தியப் பகுதியில் மற்றும் இந்தியா ஆகியவற்றில் முற்காலத்தில் காட்டிலிருந்து பெறப்பட்ட தாவரங்களை திட்டமிட்டு விதைத்து மற்றும்⸴ சாகுபடி செய்தனர்.

கிபி 7000 ஆண்டுகளிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்தில் கோதுமை மற்றும்⸴ பார்லி ஆகியவை பயிரிடப்பட்டு வந்தது. இன்று விவசாயம் இல்லாத நாடில்லை என்னும் அளவிற்கு விவசாயம் முக்கியம் பெற்றுள்ளது.

விவசாயத்தின் முக்கியத்துவம்

விவசாயத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டதால் தான் அன்று தொட்டு இன்றுவரை பல நூற்றாண்டுகள் கடந்தும் போற்றப்பட்டு வருகின்றது. மனித சமூகத்தின் உயிர் வாழ்க்கைக்கு விவசாயம் முக்கியமானதாகும்.

உடலுக்குத் தேவையான சக்தியினை ஊட்டச்சத்துக்களே வழங்குகின்றன. இதனை எமக்கு அளிக்கும் உணவுகளான பழங்கள்⸴ கிழங்கு வகைகள்⸴ கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை பெற விவசாயமே முக்கிய பங்காற்றுகின்றது.

ஊட்டச்சத்துள்ள பயிர்களை விவசாயமே நமக்கு வழங்குகின்றன. பலரது வாழ்வாதாரம்⸴ பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விவசாயம் முக்கியம் பெறுகின்றது.

இன்று விவசாயத்தில் தொழில்நுட்பம்

இன்றைய நவீன தொழில் நுட்பமானது அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்தி வருகின்றது. அவ்வகையில் விவசாயத்திலும் தொழில்நுட்பப் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

இன்று விவசாயத்தில் தொழில்நுட்ப வசதி ஏற்பட்டதன் விளைவாக பல புதிய பயிர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இலகுவாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிகின்றது.

பயிர்களைப் பயிரிடவும்⸴ கிருமிகளிடமிருந்து பாதுகாக்கவும் தொழில்நுட்பம் பங்களிப்பு செய்கிறது. தொழில்நுட்பத்தின் பலனை பல நாடுகள் அனுபவித்து வருகின்றன.

உதாரணமாக நிலப்பரப்பு குறைந்த நாடுகளான அரேபியா⸴ ஜப்பான் போன்றன நீரின்மேல் விவசாயத்தை மேற்கொள்கின்றன.

விவசாயம் எதிர் நோக்கும் பிரச்சினைகள்

இன்று பண்டைய விவசாயம் பெரிதும் அருகிப் போய்விட்டது. குறிப்பாக தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் புதிய விவசாய உற்பத்திகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பண்டைய விவசாயம் மறைந்து வருகின்றது.

தரமற்ற உரங்களின் பயன்பாட்டால் பயிர்கள் அழிவடைகின்றன. பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் விவசாய குடும்பங்கள் தங்கள் விளைநிலங்களை செல்வந்தர்களுக்கு விற்பனை செய்வதை காண முடிகின்றது. விளைநிலங்கள் விவசாயம் தவிர வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

முடிவுரை

அன்றும் இன்றும் மனிதனை காப்பது விவசாயமாகும். காலங்கள் கடந்தாலும் நவீன கலாச்சாரம் வளர்ந்தாலும் விவசாயத்தை என்றும் பேணிக்காக்க வேண்டும்.

விவசாயிகளைத் தெய்வமாக மதிக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கும் விவசாயத்தின் பயன்களை கற்றுக்கொடுத்து வேளாண்மையைச் சிறப்பிப்போம்.

You May Also Like:
நாட்டின் முதுகெலும்பு விவசாயம்
நீர் மேலாண்மை கட்டுரை