நான் கண்ட கனவு கட்டுரை

Naan Kanda Kanavu Tamil Katturai

இந்த பதிவில் “நான் கண்ட கனவு கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.

நான் கண்ட வினோத கனவு கட்டுரை – 1

அன்று ஒரு வெள்ளிக்கிழமை நானும் எனது அம்மாவும் கோயிலுக்கு சென்றிருந்தோம். கோயிலில் வழிபட்டு முடிந்து வீடு திரும்பும்போது கோயில் வாசலில் முதியவர் ஒருவர் அதிஸ்ட இலாப சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அதை கண்ட நான் அம்மாவிடம் எனக்கு ஒரு சீட்டினை வாங்கி தருமாறு கூறினேன். ஆரம்பத்தில் என்னை கடிந்து கொண்டாலும் நான் அடம்பிடித்தமையால் வாங்கித் தந்தார்.

அன்றிரவு தூங்கும் பொழுது தலையணையின் அடியில் அதை கவனமாக வைத்துக் கொண்டேன்.

சற்று நேரத்தில் தூங்கிய உடன் கனவில் என் பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருப்பதையும் அவர் கையில் செய்தி பத்திரிக்கை வைத்திருப்பதை பார்த்த நான் அதில் அன்றைய நாளுக்கான அதிஸ்ட இலாப சீட்டுக்களில் வெற்றி பெற்ற சீட்டுக்களின் இலக்கங்கள் பிரசுரமாகியிருப்பதை கண்டேன்.

அதை உற்று நோக்கிய போது அதில் நான் வாங்கியிருந்த சீட்டினுடைய இலக்கமும் பிரசுரமாகி இருப்பகை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசினை வெற்றிபெற்றதை நினைத்து மிகவும் பூரிப்படைந்திருந்தேன்.

வெற்றிப் பெற்ற பணத்தினை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக எல்லாம் என்னுடைய சிந்தனை விரிவடைய தொடங்கியது.

நான் அவ்வாறு சிந்தித்து கொண்டிருக்கும் போது தான் ஒரு குரல் என்னை அதட்டும் தொனியில் “ பாடசாலைக்கு நேரமாகிவிட்டது எழும்பு” என்றது

திடுக்கிட்டு பார்த்த போது தான் புரிந்தது நான் கண்டவை அனைத்தும் கனவென்று. கனவு கலைந்த விரக்தியுடனும் ஏமாற்றத்துடனும் பாடசலை செல்வதற்கு தயாராகினேன்.

நான் கண்ட கனவு கட்டுரை – 2

“தூக்கத்தில் வருவது அல்ல கனவு. மாறாக உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு ஆகும்” என ஐயா அப்துல் கலாம் அவர்கள் கூறியுள்ளார். இக்கருத்திற்கு ஏற்றவாறு என் வாழ்க்கை பாதையினை மாற்றியமைத்தது ஒரு கனவு தான்.

ஒரு நாள் வெயிலில் அதிக நேரம் விளையாடியதன் விளைவாக நேரத்திற்கே தூங்கிவிட்டேன். பின்னர் ஒரு கனவு கண்டேன். மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள ஒரு இடத்தில் நான் ஒரு மேடையில் அமர்ந்துள்ளேன்.

எனக்கு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. ஆம் நான் செய்த சாதனைகளுக்காக எனக்கு நடைபெறும் பராட்டு விழாவிலே நான் அமர்ந்திருக்கின்றேன. அங்குள்ள மேடையிலே பேசுகின்ற அனைவரும் என்னை பராட்டி மகிழ்வித்து பேசுகின்றனர்.

ஏனெனில் நான் ஒரு அரசியல்வாதியாக நேர்மையுடனும் கடமை உணர்வுடனும் செய்த செயல்களுக்காக என்னை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். என் பெற்றோரும் உறவினர்களும் கூட இந்த கூட்டத்தில் இருக்கின்றனர்.

என்னை நினைத்து அவர்கள் பெருமை படுவதனை என்னால் அவதானிக்க கூடியதாக இருந்தது. அந்த விழா நடைபெற்று முடியும் தருணத்தில் என்னுடைய கனவும் கலைந்து நான் விழித்துக் கொண்டேன்.

நான் கண்ட கனவு தொடர்பாக என் பெற்றோரிடம் நான் கூறிய போது அவர்கள் கனவில் வந்தது போலவே நான் நிஜத்திலும் சிறந்த ஒரு அரசியல்வாதியாக வர வேண்டும் என்று கூறினர்.

அதற்காக நான் நன்றாக கல்வி கற்க வேண்டும் எனவும் கூறினர். அன்றிலிருந்து சிறந்த அரசியல் வாதியாக வர வேண்டும் என்பதை என் இலட்சியமாக்கிக் கொண்டேன்.

You May Also Like:
பெண்கள் பாதுகாப்பு கட்டுரை
போக்குவரத்து விதிமுறைகள் கட்டுரை