போக்குவரத்து விதிமுறைகள் கட்டுரை

Pokkuvarathu Vithigal Katturai

அனைவரும் கடைப்பிடித்து நடக்க வேண்டிய போக்குவரத்து விதிமுறைகள் கட்டுரை பதிவை இக்கட்டுரையில் காண்போம்.

இன்று சாலைகளில் உண்டாகும் விபத்துக்களுக்கான முக்கிய காரணமாக சாலை விதிகளை முறையாக பின்பற்றாமையே உள்ளது. அனைவரும் சாலைகளில் பயணிக்கும் போது சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

போக்குவரத்து விதிமுறைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. போக்குவரத்து விதிமுறைகள்
  3. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள்
  4. வான்வழி போக்குவரத்துக்கள்
  5. நீர்வழி போக்குவரத்துக்கள்
  6. முடிவுரை

முன்னுரை

பயணமானது நம் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த நிகழ்வாகும். இன்று பயணங்களை இலகுபடுத்துவதற்காக பல போக்குவரத்துச் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தரைவழி⸴ கடல்வழி⸴ வான்வழி ஆகிய மூன்று வழிகளிலும் மனிதன் பயணித்துக் கொண்டிருக்கிறான்.

போக்குவரத்தின் போது பல விபத்துக்கள் இடம் பெறுவதைக் காணலாம். இதனை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே போக்குவரத்து விதிமுறைகளாகும். இக்கட்டுரையில் போக்குவரத்து விதிமுறைகள் பற்றிக் காண்போம்.

போக்குவரத்து விதிமுறைகள்

விபத்துக்கள் ஏற்படா வண்ணம் இருக்க போக்குவரத்து காவல்துறையினர் ஒவ்வொரு நாளும் பணி செய்கின்றனர்.

பல இடங்களில் வண்ண விளக்குகளால் சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் நெறிப்படுத்தப்படுகின்றது. சிவப்பு⸴ மஞ்சள்⸴ பச்சை என விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை முறையே நில்⸴ தயாராக இரு⸴ புறப்படு என்ற கட்டளைகளை தருகின்றன. எப்போதும் பாதசாரிகள் நடைபாதையில் செல்ல வேண்டும் என்பது விதியாகும்.

வாகன ஓட்டுனர் பத்திரம் கட்டாயமானதாகும். தலைக்கவசம் அணிய வேண்டும். எனப் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள்

தரைவழி மற்றும் கடல்வழி போக்குவரத்துக்களில் விபத்துக்கள் பெரும்பாலாக இயற்கை அனர்த்தங்களினாலேயே நிகழ்கின்றன. ஆனால் சாலைப் போக்குவரத்து விபத்துக்கள் அதிகம் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் இடம்பெறுகின்றன.

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் போது பெரும்பாலான விபத்துகள் நேர்கின்றன. இதனால் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. உடல் அவயவங்கள் இழப்பு ஏற்படுகின்றன.

ஓட்டிச் செல்பவர்கள் மட்டும் ஆபத்தை சந்திக்க நேரிடாது. கூட இருப்பவர்கள்⸴ எதிரில் வருபவர்கள் எனப் பலரும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். வாகனங்கள் சேதம் ஆக்கப்படுகின்றன.

ஒரு வாகனத்தை இன்னொரு வாகனம் முந்துவதற்கு முயற்சிக்கும் போது அதிகபடியான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

வான்வழி போக்குவரத்துக்கள்

இது பயணிகளையும்⸴ சரக்குகளையும் ஏற்றிச் செல்லப் பயன்படும் போக்குவரத்துச் சேவையாகும். இப்போக்குவரத்து சர்வதேச அளவில் நாடுகளுக்கிடையிலான பயணங்களுக்குப் பெரிதும் துணை புரிகின்றன.

நீண்ட தூரப் பயணங்களுக்கு வான்வழி போக்குவரத்து பயன்படுத்தப்படுகின்றது. கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விமான நிலையங்களிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் அந்தப் பகுதி வழியாக செல்ல முயற்சிக்கும் விமானங்களும் கட்டுப்பாட்டுக் கோபுரத்தை தொடர்பு கொண்டு விதிமுறைகளை பெறும்.

நீர்வழி போக்குவரத்துக்கள்

கடல்⸴ ஏரி⸴ கால்வாய் மற்றும் நதி போன்ற நீர் வழிகளில் நீர் ஊர்திகள் மூலம் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்வதே நீர்வழிப் போக்குவரத்தாகும்.

கப்பல்⸴ படகு⸴ பரிசல்⸴ பாய் மரப்படகு போன்றன போக்குவரத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பயணம் மெதுவாக இருப்பினும் பெருமளவிலான பொருட்களைச் சுமந்து செல்வதற்குச் சிறந்த போக்குவரத்து முறையாகும்.

முடிவுரை

உலகிலுள்ள அனைத்து வாகனங்களில் இந்தியாவிலுள்ளது 1% மட்டுமே. ஆனால் உலக அளவிலுள்ள விபத்துகளில் இந்தியாவில் 15% நடக்கின்றன. இதில் தமிழகம் முதலிடம் பெறுகின்றது.

இதன் காரணம் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமையேயாகும். எனவே போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நம் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும். போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்போம் விபத்துக்களை தவிர்ப்போம்.

You May Also Like:

காற்று மாசுபாடு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை