கேடில் விழுச்செல்வம் கல்வி கட்டுரை

kedil viluchelvam kalvi in tamil

இந்த பதிவில் “கேடில் விழுச்செல்வம் கல்வி கட்டுரை” பதிவை காணலாம்.

கல்வி செல்வத்தை உடையவர்கள் பிறரை காட்டிலும் மேன்மை தங்கியவர்களாக அனைவராலும் போற்றப்படுவார்கள்.

கேடில் விழுச்செல்வம் கல்வி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • அழியாச்செல்வம்
  • பிற நிலையற்ற செல்வங்கள்
  • கல்லாரின் இழிவு
  • கல்வியின் பயன்கள்
  • முடிவுரை

முன்னுரை

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்று பிற” என்கிறார் திருவள்ளுவர்.

அதாவது இந்த உலகில் கல்வியினை போன்ற ஒரு உயர்ந்த செல்வம் வேறெதுவும் இல்லை என்பது இதன் கருத்து.

இந்த உலகிலே மனிதர்களாக பிறந்தவர்களை பிற ஐந்தறிவு ஜீவன்களிடம் இருந்து பிரித்து காட்டுவது இந்த கல்வியறிவு ஒன்றேயாகும்.

இதனால் தான் நாம் அனைவரும் கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து இந்த பிறவியின் உச்ச பயனை அடைந்து கொள்ள விளைய வேண்டும். இக்கட்டுரையில் கல்வியின் சிறப்புக்கள் பற்றி நாம் காண்போம்.

அழியாச்செல்வம்

“வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது கள்வராலும் கொள்ளத்தான் முடியாது” என்ற பாடல் அடிகள் கல்வி செல்வத்தின் அழியாத்தன்மையினை எடுத்து காட்டுகிறது.

கல்வி செல்வம் ஒன்றே கொடுக்க கொடுக்க குறைவின்றி பெருகும் செல்வமாகும். நாம் எப்போதும் நிலையான செல்வத்தையே பெற ஆர்வம் காட்ட வேண்டும்.

மேலும் இந்த கல்வி செல்வத்தை உடையவர்கள் பிறரை காட்டிலும் மேன்மை தங்கியவர்களாக அனைவராலும் போற்றப்படுவார்கள். இதனால் தான் எமது ஆன்றோர்கள் கல்வியின் சிறப்பை எடுத்து கூறி சென்றிருக்கிறார்கள்.

பிற நிலையற்ற செல்வங்கள்

இந்த உலகத்தின் நிலையாமைக்கு எடுத்துக்காட்டாக நாம் பிற நிலையற்ற செல்வங்களை உதாரணமாக எடுத்து கொள்ளலாம்.

பணம், பொருள், சொத்து எனும் பொருட்கள் மீது தான் மனிதர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் இவை நிலையற்றவை மனிதனுக்கு நிம்மதியும் கொடுக்காதவை ஆபத்தையும் மன சஞ்சலத்தையும் தோற்றுவிக்க கூடியன. அத்தோடு நிலையற்றவையாகும்.

ஒரு பணக்காரன் பணத்தை இழந்தால் ஏழையாகலாம். ஆனால் ஒரு கற்றவன் அவ்வாறில்லை.

கல்லாரின் இழிவு

கல்வி கற்றவர்கள் இந்த சமூகத்தில் உயர்ந்த நிலையினை அடைகிறார்கள் காரணம் கல்வி மனிதனுக்கு நல்லறிவையும் நற்குணங்களையும் போதிக்கின்றது.

இதன் மூலம் அவர்களது வாழ்வில் அறியாமை இருளை நீக்கி வெளிச்சத்தினை உருவாக்குகின்றது. ஆனால் கல்வி அறிவு இல்லாதவர்களை இழிவாகவே இந்த உலகம் பார்க்கின்றது.

இதனை திருவள்ளுவர் “கற்றார் என்போர் கண்ணுடையார் கல்லாதோ முகத்திரண்டு புண்ணுடையார்” என்று கற்றவர்களே கண்களை உயைவர்கள் என்று கல்லாமையின் இழிமையை எடுத்து காட்டுகின்றார்.

கல்வியின் பயன்கள்

கல்வியினால் விளையும் நன்மைகள் ஏராளம் இதனை ஒளவையார் பின்வருமாறு கூறுகிறார்.

“மன்னனும் மாசறகற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையன் மன்னற்கு தன்தேசம் அல்லாமற் சிறப்பில்லை. கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு”

கற்றலின் பலன் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும் ஆகையால் நாம் விருப்பத்தோடு கற்று கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் அனைத்து விடயங்களையும் பகுத்தறிந்து கொள்ள கல்வியே நமக்கு துணை புரிகின்றது.

முடிவுரை

இந்த உலகினையே மாற்றியமைக்க கூடிய ஒரு பலமான ஆயுதம் கல்வியாகும். இதனை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எம்மையும் எமது சமூகத்தையும் நல்வழிபடுத்த கூடிய இந்த கல்வியினை நாம் நமது நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க செய்ய வேண்டும்.

படிப்பால் மட்டுமே பாரதத்தை பாராள செய்ய முடியும் என்ற டாக்டர் அப்துல்கலாமின் கனவை கல்வியினால் தான் சாத்தியமாக்கி காட்ட முடியும்.

You May Also Like:
இளமையில் கல்வி கட்டுரை
மூன்றாவது கண் கல்வி கட்டுரை