பெண்கள் பாதுகாப்பு கட்டுரை

Pengal Pathukappu Katturai In Tamil

இந்த பதிவில் “பெண்கள் பாதுகாப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

பெண் பிள்ளைகளை தைரியமானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும் பெற்றோர்கள் வளர்த்தெடுக்க வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பெண்களின் சிறப்புக்கள்
  3. பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்
  4. இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனைப் பெண்கள்
  5. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகில் மனிதனைப் படைக்கும் சக்தி சொரூபமாகவும், கண்ணில்பட்ட தெய்வமாகவும், வாழும் கடவுளாகவும் நம் முன் பெண்கள் இருக்கின்றார்கள்.

பெண்களே நாட்டின் கண்கள், நம்மை பெற்றவள் பெண், நமது சந்ததியை பெற்றுக்கொடுப்பவள் பெண், நமக்கு சகோதரியாய் நல்ல உறவாக இருப்பவளும் பெண்.

இத்தகைய பெண்கள் இன்று சாதிக்காத துறைகளே இல்லை எனக் கூறும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை அழைத்து செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். பெண் பாதுகாப்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பெண்களின் சிறப்புக்கள்

ஒளவையார் முதல் கல்பனா சாவ்லா வரை இந்தியாவில் பெண்கள் அரியதொரு சாதனைகள் படைத்து மாதர்குல மாணிக்கங்களாக திகழ்கின்றனர்.

இவ்வுலகிற்கு ஒவ்வொரு பெண்களும் ஆணின் வளர்ச்சிக்கும், அவனது வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள். சாதனைப் பெண்கள் ஏனைய பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூட சிறந்த முன்மாதிரிகளாகவே உள்ளனர்.

இன்று விவசாயம், தொழிற்சாலை, ஏற்றுமதி, அழகுதுறை, அரசியல், நகை வடிவமைப்பு, சமூக வலைதளம், கார்ப்பரேட் உலகம், விமானம், விளையாட்டு, சினிமா, விண்வெளி, ராணுவம், காவல்துறை, கப்பல்துறை, போன்ற எல்லாவகைத் துறையிலும் பெண்களின் பங்களிப்பு அளப்பெரியதாகும்.

இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனைப் பெண்கள்

பல பெண்கள் இந்திய வரலாற்றில் வியக்க வைக்கும் பல்வேறு செயல்களை புரிந்துள்ளனர்.

அந்த வகையில் ராணி லக்ஷ்மிபாய், சாவித்ரிபாய் பூலே, ஆனந்திபாய் ஜோஷிசரோஜினி, நாயுடு விஜய லட்சுமி பண்டிட்கமலா தேவிசட்டோபாத்யாய், நீதிபதி அன்னா சாண்டி, சுசேத்தா கிரிப்லானி, கிட்டுர் சென்னம்மா, இந்திராகாந்தி, கல்பனா சாவ்லா என சாதனைப் பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது என்றால் அது மிகையல்ல.

பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்

ஆயிரம் கவிஞர்கள் பெண்ணியம் பேசினாலும், பல்வேறு தடைகளைத் தாண்டியே பெண்கள் சமனிலை பெற வேண்டியிருக்கிறது. சீரும், சிறப்போடும் நடத்தப்பட வேண்டிய பெண்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு இலக்காவது கொடுமையானது.

உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். பள்ளி செல்லாமல் வேலைக்கு செல்லும் பெண் குழந்தைகள் அதிகமாக உள்ளனர்.

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் வழிமுறைகள்

பெண்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அதிலிருந்து தப்பிப்பதற்கு வழியாக தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கல்வி அறிவினை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

கல்வியை தவிர வேறு எல்லா விதமான உபாயமும் சிறிதும் பயன்படாது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அதாவது பெண்கள் பாதுகாப்புச் சட்டம், போக்சோ சட்டம் போன்ற சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

பெண் பிள்ளைகளை தைரியமானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும் பெற்றோர்கள் வளர்த்தெடுக்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற மனப்பாங்கை ஆண் பிள்ளைகளுக்கு கூறி வளர்க்க வேண்டும்.

முடிவுரை

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான முக்கியத்துவம் மற்றும் அவசியம் பற்றி உணர்ந்ததால் தான் தமிழக அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் நாளினை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் என்று அறிவித்துள்ளது.

எனினும் இன்று வரை பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமே உள்ளன. எனவே பெண்கள் துணிச்சலுடனும், தைரியத்துடனும் செயற்படும்போது பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும்.

You May Also Like:
உலக மகளிர் தினம் கட்டுரை
சாதனைப் பெண்கள் பற்றிய கட்டுரை