புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை

Puthinam Thotram Valarchi In Tamil

மக்களால் பரவலாக விரும்பப்படும் “புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை” பற்றி இதில் காணலாம்.

இன்று பொழுதுபோக்கிற்காக பல வழிகளும் பல கருவிகள் வந்துவிட்டன. ஆனாலும் முன்னைய காலத்தில் புதினம் வாசித்தல் என்பது சிறந்த பொழுதுபோக்காக இருந்தது.

புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. புதினம் – விளக்கம்
  3. புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
  4. தமிழில் புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
  5. நாவல்களுக்கும் சிறுகதைக்குமான வேறுபாடுகள்
  6. முடிவுரை

முன்னுரை

மனித மனமானது கதைகளிலும்,வரலாற்றிலும் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் விளங்குகின்றது. அவ்வகையில் மக்களால் பரவலாக விரும்பப்படுவது புதினங்களாகும். வாழ்க்கையும் நிகழ்வுகளும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுகின்றன.

புதினத்தை நாவல் என்றும் அழைப்பர். இன்று பல வடிவங்களைக் கொண்டு புதினம் வளர்ச்சி அடைந்து வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது.

தமிழ் இலக்கிய மரபில் புதினத்திற்கென தனித்துவமான இடமுண்டு. அவ்வகையில் புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

புதினம் – விளக்கம்

உரைநடையில் எழுதப்பட்ட நெடும் கதையை ஆங்கிலேயர் நாவல் என்பர். நாவெல்ஸ் என்ற இலத்தின் சொல்லிருந்து வடிவம் பெற்றது நாவலாகும்.

தமிழர் ஆரம்பத்தில் நாவல் என்றே அழைத்தனர். பின்பு வடமொழி பெயரால் நவீனம் என்றனர். பின்னர் புதினம் எள்றும் தமிழ்ப்படுத்தி வழங்கி வருகின்றனர்.

புதினமெனும் சொல்லானது புதுமை என்று பொருளில் வழங்கப்படுகின்றது.சிறுகதை தான் நாவலின்அடிப்படையாகும்.

புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

கிபி 1350 போக்காசிஸ் எழுதிய டெகாமெரன் கதையே உலகின் முதலாவது புதினமாக கருதப்படுகின்றது. இப் புத்திலக்கிய வகையானது ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது.

எனினும் 10ஆம் நூற்றாண்டிலேயே சீனாவில் நாவல்கள் இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனையே சீனப்பெருநாவல் மரபு என்பர்.

நாவலின் தோற்றமானது இலக்கிய உலகில் ஒரு புதிய விடிவெள்ளியென அறிஞர்கள் கருதுகின்றனர். ஏனெனில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும்⸴ சமூக சிந்தனைகளை முன்வைப்பதற்கும் நாவல்கள் பெரும் உதவியாக அமைந்துள்ளன.

இந்திய மொழிகளில் முதலில் வங்க மொழியும் அதனை அடுத்து தமிழிலும் அதிகளவில் புதினங்கள் தோற்றம் பெற்றன.

தமிழில் புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

முதலில் மாயவரம் வேதநாயகம் பிள்ளையே தமிழில் புதின வரலாற்றைத் தொடங்கி வைத்தார். இவரே தமிழ் புதினத்தின் தந்தை எனப்படுகின்றார். இவர் 1879 இல் பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார்.

இவரது இன்னொரு புதினம் சுகுணசுந்தரி ஆகும்.1875 இல் வெளியான சேஷையங்கார் எழுதிய ஆதியூர் அவதானி சரித்திரமே தமிழ் புதினம் என்பர்.எனினும் இது கவிதை நடையில் இருப்பதால் புதினமாக ஏற்பதில்லை.

அதன் பின் தமிழில் ஏராளமான புதினங்கள் தோன்றத் தொடங்கின.

நாவல்களுக்கும் சிறுகதைக்குமான வேறுபாடுகள்

சிறுகதைகளை நாவலின் முதல் வளர்ச்சி நிலை என்றும் அதிலிருந்து புதினங்கள் வளர்ச்சி பெற்றிருக்கலாம் என்றும் ஹட்சன் குறிப்பிடுகின்றார். சிறுகதை ஒரு வட்டத்துக்குள் சுழல்வதாகும்.

ஆனால் நாவல் அவ்வாறு இல்லை. நாவல்கள் மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டு இயங்குபவையாகும். சிறுகதையை விட அதிகளவான கதாபாத்திரங்கள்⸴ கற்பனைகள் மற்றும்⸴ வர்ணனைகளைக் கொண்டதாகும்.

முடிவுரை

இன்றைய நவீன உலகில் நமது பொழுதுபோக்கினை மேற்கொள்ள பல வழிகளும் பல கருவிகள் வந்துவிட்டன. ஆனாலும் முன்னைய காலத்தில் புதினம் வாசித்தல் என்பது சிறந்த பொழுதுபோக்காக இருந்தது. எனினும் இவ்வழக்கம் இன்றுவரை பலராலும் தொடரப்பட்டு வருகின்றமை புதினத்தின் ஆதிக்கத்தை எடுத்தியம்புகின்றது எனலாம்.

You May Also Like:

நூலகம் பற்றிய கட்டுரை
ஆறுமுக நாவலர் பற்றிய கட்டுரை