தமிழர்களின் வீர கலைகள் கட்டுரை

tamilargalin veera kalaigal katturai in tamil

தமிழர்கள் இன்று மட்டுமல்லாது என்றுமே வீரக் கலைகளில் சிறப்புமிக்கவர்களாகவே திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் தங்களை தற்காத்துக் கொள்ளும் கலைகளாக வீரக் கலைகள் திகழ்கின்றதோடு இன்று இக்கலைகள் வீர விளையாட்டாகவும் இடம்பெற்று வருகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

தமிழர்களின் வீர கலைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சிலம்பாட்டம்
  • மற்போர்
  • ஏறுதழுவுதல்
  • வில்வித்தை
  • முடிவுரை

முன்னுரை

தமிழர் பண்பாட்டினை இன்று இலக்கியங்கள் வாயிலாகவே அறிந்து கொள்கின்றோம். அந்த வகையில் ஏறுதழுவுதல், சிலம்பாட்டம், மற்போர், இளவட்டக்கல் தூக்குதல், வில்வித்தை என பல கலைகள் தமிழர்களின் வீரக் கலைகளின் அடையாளமாக திகழ்கின்றன. மேலும் இக்கலைகளினூடாக தன்னை தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

சிலம்பாட்டம்

தமிழர்களின் வீரக் கலைகளுள் ஒன்றாகவே சிலம்பம் காணப்படுகின்றது. இது ஓர் தற்காப்பு கலையாகும். இதனை வீர விளையாட்டாகவும் இன்று விளையாடி வருகின்றனர்.

சிலம்பம் என்பதனை கம்பு சுற்றல் என்றும் கூற முடியும். இந்த வீரக் கலையை கற்றுக் கொள்ள வேண்டுமாயின் குறைந்தது 6 மாத காலமாவது தேவையாகும். சிலம்பாட்டமானது பல்வேறு திருவிழா மற்றும் கோயில் நிகழ்ச்சிகளின் போது இடம் பெறக் கூடியதொரு வீரக் கலையாகும்.

இந்த சிலம்பம் முறையினை ஆரம்ப காலங்களில் தங்களை விலங்குகளிடம் இருந்து தற்காத்து கொள்ளவே பயன்படுத்தினர். இன்று இது சிலம்பாட்டமாக வளர்ச்சியுற்று மிகவும் சிறப்பு வாய்ந்ததொரு வீர விளையாட்டாகவும் திகழ்கின்றது.

மற்போர்

மற்போர் எனப்படுவது இரண்டு நபர்கள் ஆயுதங்களின்றி மேற்கொள்ளும் போர் அல்லது வீரக் கலையாகும். இது தமிழர்கள் மத்தியில் சிறப்புற்று விளங்கியதொரு கலையாகும்.

அதாவது பல்லவ மன்னன் மற்றும் முதலாம் நரசிம்ம பல்லவன் மற்போரில் சிறப்புற்று விளங்கியமையால் மாமல்லன் என்ற சிறப்பு பெயர் கொண்டே அழைக்கப்பட்டார்.

மேலும் மற்போரை குஸ்தி என்றும் அழைக்கின்றனர். இன்றும் தமிழர்களால் பின்பற்றப்படும் வீரக் கலைகளுள் ஒன்றாகவே மற்போர் காணப்படுகின்றது.

ஏறு தழுவுதல்

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் மற்றுமொரு விளையாட்டாக ஏறு தழுவுதலை குறிப்பிடலாம். அதாவது ஏறு என்பது காளை மாட்டையே குறித்து நிற்கின்றது. அந்த வகையில் ஏறு தழுவுதலானது காளை மாட்டின் வீரத்தை அடக்குவதனையே சுட்டி நிற்கின்றது.

வீர கலையானது இன்றும் இடம் பெற்று வருவதானது தமிழர்களின் வீரத்தினையே வெளிப்படுத்தி நிற்கின்றது. இதனை ஜல்லிக்கட்டு என்றும் அழைக்கின்றனர். மேலும் விளையாட்டில் காளையின் கொம்பை அடக்குவதனூடாகவே வீரமானது தீர்மானிக்கப்படுகின்றது.

வில்வித்தை

தமிழர்களின் வீரக் கலைகளும் மற்றுமொன்றாக வில்வித்தை காணப்படுகின்றது. அதாவது வில்லின் நாணில் அம்பை ஏற்றி எய்வதே வில்வித்தை கலையாகும். தற்காலத்தில் இதனை அம்பெய்தல் என அழைக்கின்றனர்.

மேலும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் ஒன்றாக வில்வித்தை கலை திகழ்வதானது தமிழர்களது வீரக் கலைகளின் சிறப்பினையே எடுத்துக்காட்டுகின்றது. அந்த வகையில் ஆரம்ப காலங்களில் தமிழர்கள் வில்வித்தையினூடாகவே விலங்குகளை வேட்டையாடினர்.

சங்க காலப்பகுதிகளில் வேட்டையாடும் கருவியாக வில்லே காணப்பட்டது என்பதினூடாக வில்வித்தை கலையிலும் சிறப்புற்று விளங்கியமை தமிழர்களின் பெருமையினையே பறை சாற்றுகின்றது.

முடிவுரை

ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை தமிழர்களது வீரக் கலையானது பின்பற்றப்பட்டு வருகின்றமையானது தமிழர்களின் வீரத்தினையே சுட்டி நிற்கின்றது.

இன்றும் தமிழர்களது மரபானது மாறுபடாது பின்பற்றப்பட்டு வருவதானது தமிழர்களது சிறப்பிற்குரியதாகும். அந்த வகையில் பாரம்பரிய ரீதியில் பல கலைகளில் சிறப்புற்று திகழ்ந்தவர்கள் தமிழர்களே ஆவார்.

You May Also Like:

தமிழர்களின் பண்பாடு கட்டுரை

தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கட்டுரை