இணைய வழி கல்வி கட்டுரை

inaya vazhi kalvi katturai

இந்த பதிவில் இன்றைய கல்வி துறையில் செல்வாக்கு செலுத்தும் “இணைய வழி கல்வி கட்டுரை” பதிவை காணலாம்.

இணையத்தளத்தைக் குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தாத வகையில் பெற்றோர் விழிப்புடன் மிகுந்த எச்சரிக்கைக் கொண்டு கண்காணிக்க வேண்டும்.

இணைய வழி கல்வி கட்டுரை

இணைய வழி கல்வி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இணைய வழிக் கல்வியின் நன்மைகள்
  3. பாதகம் தரும் இணைய வழிக் கல்வி
  4. குழந்தைகளைப் பாதிக்கும் இணைய வழிக் கல்வி
  5. இணைய வழிச் சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்குவது கல்வியாகும். கல்வியின் மூலமே அறிவார்ந்த சமுதாயம் உருவாகின்றது. கல்வி முறைகளில் காலந்தோறும் பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

இன்றைய நவீன உலகின் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கல்வியிலும் அதன் செல்வாக்கை அவதானிக்க முடிகின்றது.

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாத்தொற்று நோய் காரணமாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது.

இதனால் இணைய வழியின் ஊடாக கல்விச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று பல கல்வி நிறுவனங்கள் இணைய வழி கல்வியினூடாக உயர் கற்கைநெறிகளை முன்னெடுத்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.

இணைய வழிக் கல்வியின் நன்மைகள்

இணைய வழிக் கல்வி மாணவர்களுக்கு தகுந்த நேரத்தில் தகுந்தவாறு அமைத்துக் கொள்ள முடிகின்றது. ஒவ்வொரு பள்ளிகளும் ஒவ்வொரு விதமாக கல்வியையே நடத்தி வருகின்றனர்.

காணொளிப் பதிவின் மூலமும் மற்றும், புதிய புதிய செயலிகளின் மூலமாகவும் (Zoom, Meet) கற்கைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

காணொலிகளைப் பதிவிறக்கம் செய்து மீண்டும் பயிலவும் முடிகின்றது. எங்கிருந்து வேண்டுமானாலும் கல்வி பயில வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பாதகம் தரும் இணையவழிக் கல்வி

இணைய வழிக் கல்வியானது அனைத்து வகை மாணவர்களையும் சென்றடைவதில்லை. அனைத்து பெற்றோர்களிடமும் ஸ்மார்ட் போன்கள் அல்லது கணினிகள் கிடையாது. அதனால் பல மாணவர்களால் இணைய வழிக் கல்வியைத் தொடர முடிவதில்லை.

இணைய வழியில் கற்கும் மாணவர்கள் தங்களின் கற்றல் செயற்பாடுகளின் போது தொழில்நுட்பக் கோளாறுகளால் குறித்த நேரத்தில் குறித்த விடயங்களை கற்றுக் கொள்ள முடிவதில்லை.

குழந்தைகளைப் பாதிக்கும் இணையவழிக் கல்வி

ஆரம்பப் பருவ மாணவர்கள் தவறான வழிகளில் திறன் பேசியை பயன்படுத்துவதற்கும், இணையத்திற்கு அடிமை ஆவதற்கும் இணைய வழிக் கல்வி ஒரு காரணமாக உள்ளது. இதனை கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோரிடம் தான் உள்ளது.

சில ஆசிரியர்களும், பெற்றோர்களும் இணைய வழி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அனுபவமின்மையும், கையாள்வதில் சிக்கலும் காணப்படுகின்றது. இதனால் பலருக்கும் சில சமயங்களில் மன உளைச்சல் ஏற்படுகின்றது.

இணையவழிச் சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகள்

அனைத்துக் கிராமப் புறங்களிலும் இணையத்தள வசதிகளை அரசு உறுதி செய்ய வேண்டும். அனைத்து மணவர்களுக்கும் பாடத்துக்கான செயலியுடன் மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும்.

அனைத்துப் பாடங்களும் மின்புத்தகங்களாக வடிவமைக்கப்படல் வேண்டும்.

இணையத்தளத்தைக் குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தாத வகையில் பெற்றோர் விழிப்புடன் மிகுந்த எச்சரிக்கைக் கொண்டு கண்காணிக்க வேண்டும்.

முடிவுரை

கல்வி என்பது ஒரு மனிதனின் அறிவுத் திறனை வளர்க்க உதவும் மாபெரும் சக்தியாகும். அக்கல்வி பாடப் புத்தகத்தின் மூலம் மட்டுமே கிடைத்துவிடாது. எனவே நாம் நம் அறிவை விருத்தி செய்வதற்கு பல முயற்சிகளில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

கல்வி வளமே நாட்டின் மிகச்சிறந்த மனித வளமாகும். இன்றைய சூழலில் இணைய வழிக் கல்வி மிகமிகத் தேவையாகின்றது.

உலக வளர்ச்சிக்கு ஏற்ப நமது கல்வி வழிமுறைகளையும் மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எனவே தீமைகளை விலக்கி நன்மைகளை பெற்று கல்வியில் சிறந்து விளங்குவதே சிறந்தது.

You May Also Like :
தற்கால கல்வியில் அறிவியலின் தாக்கம்
மூன்றாவது கண் கல்வி கட்டுரை