தாய்மையின் சிறப்பு கட்டுரை

thaimaiyin sirappu katturai in tamil

அன்பு என்ற சொல்லிற்கு அர்த்தமாய் திகழ்வதே தாய்தான். அதேபோன்று இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடையே தாய்மையாகும். தாய்மையை நேசிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் தாயின் அன்பை மதித்து நடப்பதும் எம் அனைவரதும் கடமையாகும்.

தாய்மையின் சிறப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தாய்மையின் சிறப்பு
  • குழந்தை வளர்ப்பதில் தாயின் பங்கு
  • தாயன்பு
  • இன்றைய சமூகத்தில் தாய்மை
  • முடிவுரை

முன்னுரை

“தாயில் சிறந்த கோயிலும் இல்லை” என்ற ஒளவையாரின் கூற்றானது தாயினுடைய பெருமையினை சுட்டுகின்றது. அதாவது ஒரு பெண்ணாணவள் மறுபிறவி எடுக்கும் உணர்வே தாய்மையாகும். தாய்மை என்ற உயரிய குணம் மூலமே ஒரு பெண்ணாணவள் சிறப்பு பெறுகின்றாள்.

தாய்மையின் சிறப்பு

உலகில் தாய்மைக்கு நிகரான அன்பை எவராலும் கொடுத்திட முடியாது என்றளவிற்கு சிறப்புமிக்க அன்பே தாயன்பாகும். அந்தவகையில் ஓர் குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான மிகவும் நெருக்கமான உறவுமுறையே தாய்மை உறவாகும்.

பெண்ணாணவள் ஆசிரியையாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என பல கதாப்பாத்திரங்களை வகுத்த போதிலும் இன்று அனைவராலும் மதிக்கக்கூடியதொன்றே தாய் என்ற உறவாகும். தாய்மை என்பது ஒரு பெண்ணிண் வாழ்வில் கிடைக்கப்பெற்ற அற்புதமானதொரு உறவாகும்.

குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு

ஓர் குழந்தை சரியாக வளர்கின்றது என்றால் அதற்கான பிரதானமான காரணம் தாயாகும். ஏனெனில் தாயானவளே தன் குழந்தையை பத்து மாதம் சுமந்து பெற்றதோடு நின்றுவிடாமல் தனது இறுதி மூச்சு வரையும் தன் குழந்தையை சுமக்கின்றாள்.

தனது பசியினையும் பாராது தன் பிள்ளையின் பசியினை போக்குபவளே தாயாவாள். குழந்தை பிறந்ததும் முதல் கற்றுக்கொள்ளும் வார்த்தை “அம்மா” என்ற வார்த்தையாகும்.

குழந்தைக்கு முதல் ஆசானாக தாயே காணப்படுகின்றார். அத்தோடு தன் குழந்தையை பாதுகப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ப்பதில் தாயின் பங்கு அளப்பரியதாகும்.

தாயன்பு

இவ்வுலகில் எமக்காக எத்தனை உறவுகள் காணப்பட்டாலும் தாய்க்கு ஈடாகாது என்றே கூறமுடியும். ஏனெனில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் உறவுகளே நம்மை விட்டுச்செல்லும் நிலை உருவாகினாலும் எம்மோடு எந்த சந்தர்ப்பத்திலும் துணையாய் நிற்கும் அன்பே தாயன்பாகும்.

பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டு பிள்ளைகளுக்காக தனது விருப்பம், ஆசைகளை தியாகம் செய்யும் உறவாகவே தாயன்பு காணப்படுகின்றது.

அது மாத்திரமல்லாமல் எவ்வித எதிர்பார்புமின்றி எமக்கு அன்பு காட்டும் உறவாகவும் தாயே விளங்குகின்றார் தாயன்பானது இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களிடமும் காணப்படுகின்றது.

இன்றைய சமூகத்தில தாய்மை

இன்றைய சமூகத்தில் தாய்மையை மதித்தலானது அருகியே காணப்படுகின்றது. அதாவது இன்று தாய்மையை மதிக்காது தாயை முதியோர் இல்லங்களில் விடும் நிலை உருவகியுள்ளது.

தன்னை வளர்த்து நல்ல நிலைக்கு ஆளாக்கிய தாயை மதிக்க நேரமில்லாது பணம் ஈட்டும் நடவடிக்கையினையே பலர் மேற்கொள்கின்றனர். இன்னும் சிலர் வயதான தாயை கொடுமைப்படுத்துகின்றனர்.

எமக்காக பல வலிகளை தாங்கி மறுபிறவி எடுத்து தம்மை ஈன்றெடுத்த தாயை இவ்வாறு செய்தல் தவறானதாகும்.

சிறுபராயத்தில் நாம் செய்த துன்பங்கள், குறும்புத்தனங்கள் என அனைத்தையும் தாங்கிக்கொண்ட தாயை நாம் மதித்து நடப்பது அவசியமானதாகும்.

இன்று நாம் எம்முடைய தாயை மதிக்கும்போதே நம் பிள்ளை நாளை எம்மை மதிக்கும். தாய் என்பவளை அவரது முதுமை வயதிலும் மதித்து நடப்பது அனைவருடைய கடமையாகும்.

முடிவுரை

உறவுகளில் சிறந்த உறவு தாய் என்ற உறவேயாகும் என்றடிப்படையில் தாய்மையை மதித்தல் வேண்டும். மேலும் தாயின் அன்பை உணர்ந்து தாய் என்ற சொல்லை தட்டாது செயற்படுதல் அவசியமாகும் என்ற வகையில் எம் வாழ்வை எமக்களித்த தாயை போற்றுவோம்.

You May Also Like:

தாய் பற்றிய கட்டுரை

தாய்ப்பால் பற்றிய கட்டுரை