தாய்மொழி கல்வியின் சிறப்பு கட்டுரை

thai mozhi vazhi kalviyin sirappugal katturai

ஒரு மனிதனுடைய தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்துவதாக காணப்படுவது அவருடைய தாய் மொழியாகும். தாய்மொழியில் சிறப்புற்று திகழும் ஒரு மனிதனால் தனது கற்றல் நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள முடியும். மேலும் தாய்மொழியானது எம் சிந்தனையை வலுப்படுத்தும் ஓர் ஊடகமாகும்.

தாய்மொழி கல்வியின் சிறப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தாய்மொழி கல்வி என்பது
  • தாய்மொழி கல்வியின் சிறப்பு
  • தாய்மொழி கல்வியும் சிந்தனைத் திறனும்
  • இன்றைய சமூகத்தில் தாய் மொழிக் கல்வி
  • முடிவுரை

முன்னுரை

தனது நாட்டினுடைய பன்முகத்தன்மையை சிறப்பாக காணப்பட வேண்டுமாயின் தாய்மொழி கல்வி அவசியமானதாகும். மேலும் சிந்தனைத் திறன் வளர்ச்சியடையவும் தனது கருத்தை சிறந்த முறையில் பிறருக்கு வெளிப்படுத்தவும் தாய்மொழியே உதவுகின்றது. தாய்மொழியை போற்றுவது எமது கடமையாகும்.

தாய்மொழிக் கல்வி என்பது

தாய்மொழிக் கல்வி என்பது யாதெனில் ஒரு தனிமனிதனானவன் தனது பிறப்போடு ஒன்றிய மொழியில் கல்வியை கற்றலே தாய்மொழிக் கல்வி ஆகும்.

அதாவது உலகில் காணப்படும் ஒவ்வொருவரும் வெவ்வேறு நாட்டை சார்ந்தவர்களாக இருப்பினும் தனது தாய்மொழியில் கல்வியை கற்கும் போதே அவர்களது கல்வியில் சிறந்து விளங்க முடியும். மேலும் சிறந்த குடிமகனாக திகழ வேண்டுமாயின் தாய்மொழிக் கல்வி கற்பதே சிறந்ததாகும்.

தாய்மொழிக் கல்வியின் சிறப்பு

எந்தவொரு நபராயினும் அவர் தனது தாய்மொழியில் சிறப்பு மிக்கவராகவே காணப்படுவர். தாய்மொழி கல்வியினை கற்பதனூடாக ஒருவரின் சிந்தனை விருத்தியானது சிறப்பாக காணப்படுகின்றது.

மேலும் அவரது கல்வியில் சிறந்து விளங்குவதற்கு தாய் மொழிக் கல்வியே அவசியமாகின்றது.

பல்வேறு புதுமையான படைப்புக்களை படைக்கவும், தனது கல்வி செயற்பாடுகளை இலகுவாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் தாய்மொழிக் கல்வியே சிறந்ததாகும். அதுபோன்று வாழ்வில் உயர்ந்த நிலைகளை சிறந்த முறையில் அடைந்து கொள்ளவும் தாய் மொழிக் கல்வியே துணை நிற்கின்றது.

தாய்மொழிக் கல்வியும் சிந்தனைத் திறனும்

ஒரு மனிதனானவன் தனது தாய்மொழியில் கல்வி பயிலும் போதே அவனால் தனது சிந்தனைத் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

ஒருவர் பிறக்கும் போது எம்முடனே இணைந்து வரும் மொழியே தாய்மொழி இத்தகைய மொழியின் மூலம் நாம் கல்வி கற்கின்ற போது இலகுவாக எம்மால் கற்க முடிவதோடு சிந்தனை மற்றும் கற்பனைத் திறனும் இலகுவாக மேம்படும்.

எமது சிந்தனையானது வலுப் பெற வேண்டுமாயின் தாய்மொழிக் கல்வியே அவசியமாகும். மேலும் எம்மால் உயர்ந்த படைப்புக்களை தாய்மொழிக் கல்வியை கற்பதனூடாகவே படைக்க முடியும்.

இன்றைய கால கட்டத்தில் தாய்மொழிக் கல்வி

இன்றைய கால கட்டத்தில் தாய்மொழிக் கல்வி கற்றலானது மிகவும் அருகியே வருகின்றது. அதாவது மேலேத்தேய கலாச்சாரங்களின் தாக்கத்தின் காரணமாக தாய்மொழியில் கல்வி கற்பதனை விட்டு விட்டு பிற மொழிகளில் கல்வியினை கற்கின்றனர்.

இதன் காரணமாக கல்வி நடவடிக்கைகளில் தேர்ச்சி பெறுவதானது அருகியே காணப்படுகின்றது. மேலும் இன்று சர்வதேச மொழியான ஆங்கில மொழியினுடைய வளர்ச்சியே அதிகரித்து காணப்படுகின்றதோடு கல்வியிலும் இதன் தாக்கமே காணப்படுகின்றது.

இன்று அநேகமானோர் தனது தாய்மொழியில் கல்வி கற்பதனை குறைவாக மதிப்பிடுவதோடு தனது பிள்ளைகளினதும் ஆரம்ப கல்வியை பிற மொழியிலேயே கற்க தூண்டுகின்றனர்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் சிறப்பாக தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையே உருவாகும். எனவே தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை அளித்து கல்வியில் முன்னேற்றம் காண்போம்.

முடிவுரை

எமது வாழ்வை நாம் சிறப்பாக வாழ தாய்மொழிக் கல்வியே சிறந்ததாகும் என்ற எண்ணத்தை நினைவிற் கொண்டு தாய்மொழியில் கல்வியினை கற்க அனைவரையும் தூண்டுவதோடு நின்றுவிடாமல் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை எடுத்தியம்பி தாய்மொழியையும் வளர்த்தல் வேண்டும்.

You May Also Like:

இணைய வழி கல்வி கட்டுரை

கேடில் விழுச்செல்வம் கல்வி கட்டுரை