நான் ஒரு ஓவியர் ஆனால் கட்டுரை

நான் ஒரு ஓவியரானால் கட்டுரை

இந்த உலகில் பல கலைகள் இருக்கின்றன அவ்வாறே நான் மிகவும் விரும்பி நேசிக்கும் ஓவிய கலையில் “நான் ஒரு ஓவியர் ஆனால் கட்டுரை” பதிவை இங்கு நோக்கலாம்.

பலருக்கும் சிறு வயதில் இருந்தே ஓவியங்கள் மீதான ஈர்ப்பு இருக்கும். ஏனென்றால் ஓவியங்கள் பார்ப்பவர்களை உடனே ஈர்க்கும் தன்மை கொண்டவை.

ஓவியக் கலையானது ஒவ்வொரு ஓவியருக்கும் இடையில் வேறுபாடு காணப்படும். சிறப்பான ஓவியம் என்பது ஓவியர்களின் திறமையிலே தங்கியிருக்கின்றது.

நான் ஒரு ஓவியர் ஆனால் கட்டுரை

சிறுவயது முதலே என்னுள் ஓவியங்கள் மீதும் ஓவியக்கலை மீதும் மிகுந்த ஈடுபாடு காணப்பட்டது. காணும் ஓவியங்களை இரசிப்பது மட்டுமின்றி அவை கூறும் கருத்துக்களை விளங்கிக் கொள்ளவும் பெருமுயற்சி எடுப்பேன்.

ஒரு நாள் நான் எங்கள் கிராமத்தில் நடைபெற்ற ஓர் ஓவியக்கண்காட்சிக்கு சென்றிருந்தேன். மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த அந்த கண்காட்சியில் பல்வேறு ஓவியர்கள் வரைந்த ஓவியங்களில் இயற்கை காட்சிகள், ஆழ்கடல் அதிசயங்கள், அடர்காடு, வானமண்டலம் மற்றும் சமூக அவலங்களை எடுத்தக்கூறும் தத்ரூபமான ஓவியங்களால் அரங்கம் நிறைந்து காணப்பட்டதோடு, என் கண்களுக்கு அந்த ஓவியங்கள் கண்கொள்ளாக்காட்சி அளித்தன.

அதுமட்டுமன்றி அரங்கத்தில் ஓவியர்களிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் இருந்தன. அப்போது என் மனதிலும் ஒரு ஓவியராக வரவேண்டுமென்ற ஆசை தோன்றியது. நான் ஓர் ஓவியரானால் மக்களை எளிதில் கவரக்கூடியவகையிலும் பல விநோதமானமுறையிலும் ஓவியங்களைத் தீட்டுவேன்.

மக்களின் இரசனையை தூண்டக் கூடியவகையில் பல வகையான ஓவியங்களை வரைவேன். அனைவரையும் ஈர்க்கும் தன்மையை கொண்டிருக்கும் என் ஓவியங்கள் மக்களின் பாரம்பரிய மற்றும் நடைமுறை பிரச்சினைகளை எடுத்தியம்பக் கூடியதாக இருக்கும்.

இதனூடாக மனக்குழப்பம், மனகவலை, மனஅழுத்தம் போன்றவற்றில் இருப்பவர்கள் என் ஓவியங்களை பார்த்தவுடன் தங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியானவராக மாற்றமடைவர்

உலகப் புகழ்பெற்ற ஓவியர்களான லியோனோ டாவின்சி, பிகாசோ போன்று புகழ்பெற்ற ஓவியனாக வலம்வர முழுமுயற்சியுடன் செயற்படுவேன். நான் ஒரு ஓவியரனால் சமூகப் பொறுப்பு வாய்ந்த ஓவியங்களை வரைந்து மனிதநேயத்துடன் செயற்படுவேன்.

நான் எதிர்காலத்தில் ஓவியராக வரவேண்டும் என்ற ஆசை “சிலை மேல் எழுத்து போல” என் மனதில் மிக ஆழமாக பதிந்துள்ளது.

நான் ஒரு ஓவியர் ஆனால்

நான் ஒரு ஓவியரானால் கட்டுரை

எனது தந்தை புகழ்பெற்ற ஓவியராக விளங்கியமையினால், நான் சிறுவயது முதலே ஓவியம் வரையவதில் ஈடுபாடு கொண்டவனாக விளங்கினேன். சிறு பராயத்திலிருந்தே புகழ் பெற்ற ஓவியராக வரவேண்டும் என்பதே என் கனவாகும்.

ஓவியங்கள் மனதிற்கு ஆழ்ந்த அமைதியும் மகிழ்ச்சியையும் தரவல்லன. நல்ல ஓவியங்களை பார்க்கும் போது மனதிலுள்ள கவலைகள் மறைந்து மனமகிழ்வு பெருகும். நான் ஒரு ஓவியரானால் மற்றவர்களிற்கு மனநிறைவை தரும் ஓவியங்களை மட்டுமே வரைவேன்.

நான் தீட்டும் ஓவியங்கள் மனநலம் பாதிப்புற்றோர், செவிப்புலனற்றோர் போன்றவர்களுக்கு ஒரு மருந்தாக உதவும். அவர்கள் எனது வியப்புட்டும் ஓவியங்களை பார்த்து தமது துன்பவேதனைகளை மறந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.

நான் ஒரு ஓவியரானால் எனது வருமானத்தின் மூலம் ஓர் பெரிய ஓவியப் பள்ளியை உருவாக்குவேன். அப்பள்ளியில் என்னைப்போல ஓவியக்கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நான் அறிந்த ஓவியக்கலை நுட்பங்களை கற்றுத்தருவேன்.

பெரியவர்களிற்கு மட்டுமின்றி சிறுவர்களிற்கும் கற்றுத் தருவேன். சிறுவர்கள் எளிதாக கற்றுக்கொள்வது மட்டுமன்றி, இதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் ஓவியக்கலையின் ஊடாக சுயகாலில் நிற்க முடியும்.

அடுத்து நான் ஓர் ஓவியரானால் நான் வரைந்த ஓவியங்கள் அனைத்தையும் திரட்டி ஒரு மாபெரும் ஓவியக்கண்காட்சி நடத்துவேன். இதன்மூலம் வரும் வருமானம் மூலம் வறுமையினால் பாதிக்கப்பட்ட ஏழை எளியவருக்கு உதவி செய்வேன்.

ஏழை மாணவர்களிற்கு இலவசமாக ஓவிய வகுப்புக்கள் நடாத்துவதோடு, எனக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து அவர்களின் கல்விக்கும் உதவுவேன்.

அனைவராலும் போற்றப்படுகின்ற உயர்ந்த கலையாகிய ஓவியக் கலையை திறம்பட கற்று, அனைவருக்கும் பயனுள்ள வகையில் அதனை பயன்படுத்தி உயர்ந்தவனாக விளங்குவேன்.

You May Also Like:

எனது எதிர்கால கனவு

நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை