நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை

naan oru aasiriyar aanal katturai

இந்த பதிவில் “நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரை பதிவை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை உள்ளடக்கி காணப்படுகின்றன.

நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை – 1

நான் ஒரு ஆசிரியரானால் வருங்கால சமுதாயத்தை உருவாக்க போகின்ற மாணவர்களுக்காக அர்ப்பணிப்போடு கல்வி கற்பிப்பேன். என்னை நம்பி வருகின்ற மாணவர்களுடைய உயர்வுக்காக நான் போராடுவேன்.

ஒரு ஆசிரியர் தான் நல்லதொரு சமூகத்தை உருவாக்கும் சிற்பி என்பதை நான் நன்கறிவேன் ஒரு சிறந்த ஆசிரியரை தான் மாணவர்கள் தமது முன்னோடியாக கொள்வார்கள் ஆகவே நான் அவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்வேன்.

ஒரு வகுப்பில் பல வகையான திறமை உடைய மாணவர்கள் இருப்பார்கள். அவர்களது திறமைக்கு ஏற்ப அவர்களுக்கு தெளிவாகவும் இரசனையோடும் நான் பாடங்களை கற்பிப்பேன். பாரபட்சமின்றி அனைத்து மாணவர்களையும் எனது குழந்தைகள் போலவே நான் நடாத்துவேன்.

எனது கற்பித்தல் முறைகளினால் அவர்களை கல்வியில் நாட்டம் கொள்ள செய்ய முயல்வேன். எனது மாணவர்களுக்கு வெறுமனே கல்வியை மாத்திரம் கற்பிக்காமல் ஒழுக்க விழுமியங்களை முதன்மையாக சொல்லி கொடுப்பேன்.

தவறு செய்கின்ற மாணவர்கள் மீது மிகவும் கண்டிப்பான ஆசிரியனாக நான் இருப்பேன். என்னுடைய மாணவர்களுக்கு கல்வி தவிர்ந்த ஏனைய திறன்களான கலை, விளையாட்டு, தொழில்நுட்பம் என அவர்களுக்கு மிகவும் பிடித்த துறைகளில் அவர்கள் முன்னேறி செல்ல நான் ஒரு ஆசிரியராக உறுதுணையாக இருப்பேன்.

வறுமையான குடும்ப பின்னணியில் இருந்து வருகின்ற மாணவர்கள் மீது நான் அதிக கவனம் எடுத்து அவர்களது முன்னேற்றத்துக்கு உதவுவேன். ஒரு சிறந்த ஆசிரியனாக எனது சேவையை நான் இந்த சமூகத்துக்கு வழங்குவேன்.

நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை – 2

இந்த சமூகத்தில் உயர்ந்த தொழிலாக கருதப்படும் ஆசிரிய தொழில் எனக்கு கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியோடு மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பேன். கல்வி தான் இந்த சமூகத்தின் கலங்கரை விளக்கு என்பதனால் ஒரு ஆசிரியனாக இந்த சமூகத்தை முன்னின்று நடாத்தி செல்வதில் நான் பெருமையடைவேன்.

என்னை போலவே சிறந்த மனிதர்கள் இந்த சமூகத்தில் உருவாக நான் கற்பிப்பேன். மாணவர்களுக்கு நல்லறிவும் சிறந்த ஆளுமைகளும் பழக்கவழக்கங்களையும் உருவாகும் படியாக கற்பிப்பேன்.

இன்று ஒரு சில ஆசிரியர்கள் ஆசிரிய தொழிலை பணம் உழைக்கும் ஒரு வியாபாரமாக எண்ணுகிறார்கள். ஆசிரிய தொழிலின் மகத்துவத்தை நான் நன்கு அறிவேன். ஆசிரிய தொழிலை ஒரு சேவையாக எண்ணி அதன் உன்னதத்தை நன்கு உணர்ந்து சேவையாற்றுவேன்.

ஒரு மாணவனுக்கு கல்வி அறிவோடு சேர்த்து அவன் எதிர்காலத்தில் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க கூடிய அறிவுரையை நான் எந்த நேரங்களிலும் வழங்குவேன்.

என்னிடம் கல்வி கற்கின்ற மாணவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையும் படியாகவும் ஒரு சமூக அக்கறையுள்ள மாணவனாகவும் உருவாக எனது கற்பித்தலை வழங்குவேன்.

வறிய நிலையில் இருந்து கல்வி கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இலவசமாக கற்பிக்க வேண்டும் அத்துடன் என்னால் முடிந்த மேலதிக உதவிகளையும் அவர்களுக்கு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

அர்ப்பணிப்பு மிக்க எனது கற்பித்தலினால் ஒரு மிக சிறந்த சமுதாயம் ஒன்றினை உருவாக்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

You May Also Like:

எனது எதிர்கால கனவு கட்டுரை