நான் ஒரு கிளி கட்டுரை

நான் கூண்டில் வாழும் கிளி கட்டுரை

பல வர்ணங்களில் காணப்படும் அழகிய பறவையான “நான் ஒரு கிளி கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு கட்டுரைகளை இந்த பதிவில் நோக்கலாம்.

பார்ப்பதற்கு மிக அழகாக காணப்படும் இவை அதிக கோப குணம் கொண்டவை ஆகும். கூர்மையான அலகையையும் சிறந்த புத்தி கூர்மையும் கொண்ட இவற்றின் ஆயுட்காலம் 50 வருடங்கள் ஆகும்.

அனைத்து வெப்பமண்டல நாடுகளிலும் வாழும் இவை பயிற்சி கொடுத்தால் மனிதர்களை போலவே ஒலி எழுப்பும் தன்மை கொண்டவை.

தலையை திருப்பாமலே பின்புறம் பார்க்கும் திறமை கிளிகளுக்கு உண்டு. நட்பு பறவையாக பல நாடுகளில் அதிகமாக மனிதர்களால் விரும்பி வளர்க்கப்படும் செல்லப்பிராணியாக விளக்குகிறது.

நான் ஒரு கிளி

நான் ஒரு கிளி கட்டுரை

மனிதர்களை விட பறவைகள் சுகந்திரமானவை. காற்றிலே சிறகை அடித்துக் கொண்டு உயர உயரப் பறந்து தூரதேசங்களுற்கு பயணம் செய்து விரும்பியவற்றை கண்டுகளிக்கும் பெரும்பேறு வாய்க்கப் பெற்றவை அவை.

அத்தனை சிறப்பு வாய்ந்த பறவைகளுள் நான் ஒரு கிளியாவேன். பச்சை நிறத்தில் இரு சிறகுகளை கொண்ட உடலமைப்பையும், அழகிய சிவந்த அலகுகளையும் கொண்ட என்னுடைய கழுத்தில் அழகான சிவந்த வளையம் ஒன்று காணப்படுகிறது.

பார்ப்பதற்கு அனைவரையும் கொள்ளை கொள்ளும் அழகுடன் நான் காணப்படுகிறேன். கீக்கீ என சத்தமாக குரலெழுப்பி பாடியபடி வலம்வரும் என்னை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. மனிதர்களைப்போல் ஒருநாளும் நான் சோம்பியிருந்ததும் இல்லை. சோர்வை உணர்ந்ததும் இல்லை.

சூரியன் மேலெழுந்து புதுக்காலை புலர்வதற்கு முன்னரே துயிலெழுந்து உணவை தேடுவதற்கு தூரப்பறந்திடுவேன். போகும் இடங்களிலெல்லாம் உரத்து குரலெழுப்பி மனிதர்களை துயிலெழுப்பிடுவேன்.

அரையிருள் சூழ்ந்த அந்த அதிகாலை பொழுதிலே பனிமூட்டங்களில் உள்நுழைந்து, குளிர்காற்று முகத்தில் வந்து மோத, மேகங்களைக் கிழித்துக் கொண்டு சிறகடித்து பறப்பது எனக்கு பிடித்த பயணம்.

நீல வானத்தையும், பச்சை பசேலென்ற புல்வெளிகளையும், அடர்ந்த காடுகளையும், உயர்ந்த மலைகளையும், வளைந்து நெளிந்து ஓடுகின்ற ஆறுகளையும், நீர்வீழ்ச்சிகளையும், முடிவற்ற சமுத்திரப் பரப்புக்களை இரசித்துக் கொண்டு பயணம் செய்வேன்.

அங்காங்கே அலைந்து திரியும் மனிதர்களையும் அவர்களின் அவசரமான வாழ்க்கையும் கண்டு இரக்கமுற்றவனாக அவர்களிற்காக வருந்தும் குணம் உடையவன். சில சமயங்களில் துள்ளித்திரியும் சிறார்களையும் அவர்களின் மகிழ்ச்சியான முகங்களையும் பார்த்து நானும் சிறுவனாக மாறிட ஏக்கம் கொள்வேன்.

மாலைவரை இரைதேடி கூடு திரும்புகையில் ஆரவாரமற்ற அமைதியான வாழ்க்கையை தந்ததற்காக இறைவனிற்கு நன்றி உடையவனாக வாழ்ந்து வருகின்றேன்.

நான் கூண்டில் வாழும் கிளி கட்டுரை

அனைவருக்கும் இவ்வுலகில் சுதந்திரமாக வாழ்ந்திட உரிமையுண்டு. அந்த சுதந்திரம் மறுக்கப்பட்டு சிறைக்கைதியான நான் ஒரு கிளியாவேன். முப்பொழுதும் என்னுடைய விடுதலையை எதிர்பர்த்து கூட்டுக்குள் வாடும் என் கோரிக்கையை செவிமடுப்போர் யாருமில்லை.

யாரும் கேட்டிராத என் சோகக் கதையை உங்களுக்குக் கூறுகின்றேன். எல்லைகளற்ற வானவீதியில் சிறகுகளை படபடவென அடித்து பறந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். ஒருநாள் எதிர்பாராத விதமாக இரைதேடும் போது வேடர்கள் விரித்த வலையில் மாட்டிக் கொண்டேன்.

அதிலிருந்து தப்புவதற்கு எவ்வளவு முயன்றும் என்னால் முடியவில்லை. கால்கள் இரண்டும் நன்றாக மாட்டிக் கொண்டன. அடுத்து என்ன நடக்கப் போகின்றதோ என பயந்து போயிருந்த என்னை என்னுடைய அழகில் கவரப்பட்ட அந்த மனிதன் என்னை ஒரு கூட்டிலடைத்து வளர்க்கத் தொடங்கினான்.

அந்த கூட்டிற்குள் வாழ்வது எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. நல்ல உணவுகளைத் தந்து நன்றாக பார்த்துக் கொண்டாலும் என்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பிட ஒவ்வொரு நிமிடமும் துடித்துக் கொண்டிருந்தேன்.

தூரத்தில் என் நண்பர்களின் குரல் கேட்கும் போதேல்லாம் அவர்களுடன் இணைந்துவிட ஆசை கொண்டேன். பெருங்குரலெடுத்து சத்தமிட்டு நான் இருக்கும் இடத்தை உணர்த்திட முயல்வேன். இவ்வாறு நகர்ந்து கொண்டிருந்த என் வாழ்க்கையில் அந்த அதியம் நிகழ்ந்தது.

அவர்கள் வீட்டிற்கு வந்திருந்த சிறுவன் என்னை பார்த்து பரிதாபமுற்று என்னை விடுவிக்க முடிவுசெய்த அவன், ஒருநாள் யாரும் இல்லாத போது கூட்டைத் திறந்து என்னை விடுவித்தான்.

அளவற்ற மகிழ்ச்சியோடு நானும் சிறகடிக்கத் தொடங்கினேன். இந்த உலகத்தில் நல்ல மனிதர்களும் வாழ்கின்றார்கள் என்ற நன்றி உணர்வோடு வாழ்ந்து வருகின்றேன்.

நான் ஒரு பறவையானால் கட்டுரை

நான் ஒரு வானூர்தி கட்டுரை