பக்ரீத் பண்டிகை வரலாறு

bakrid festival history in tamil

உலகளவில் இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக பக்ரீத் பண்டிகை காணப்படுகிறது.

இஸ்லாமியர்கள் அவர்களது இறைவனது தூதரான இப்ராஹீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12ம் மாதம் (அரபி மாதம்) துல்ஹஜ் 10 நாள் கொண்டாடப்படுகிறது.

வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் என்பது அவர்களது கடமைகளில் ஐந்தாவதாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மக்கா செல்வது ஆகும். இப்புனித பயணத்தின் கடைசியாக இறைவனுக்காக பலியிடல் செய்யப்படுகிறது. இந்நிகழ்வு ஹஜ் மாதம் பத்தாம் நாள் இடம்பெறும்.

தமிழ்நாட்டில் ஆட்டை பலியிடுதலை அடிப்படையாக கொண்டே பக்ரீத் பண்டிகை உருவாகியது என உருது பதங்கள் கூறுகின்றன.

மறு பெயர்கள்தியாகத்திருநாள், பக்ரீத் பண்டிகை,
ஹஜ் பெருநாள், ஈகைத் திருநாள்
தொடக்க நாள்துல்ஹஜ் 10
முடிவு நாள்துல்ஹஜ் 13
பக்ரீத் பண்டிகை வரலாறு

பக்ரீத் பண்டிகை வரலாறு

இஸ்லாமிய இறைவனின் தூதர்களாக காணப்படுபவர்களுள் இப்ராஹீம் நபிகளாரும் ஒருவராக காணப்படுகிறார். இவர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக் நாடாக காணப்படும் பிரதேசத்தில் வாழ்ந்து வந்தார்.

நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இன்மையால் பெரும் துன்பங்களை அனுபவித்தார். இறுதியில் இவருக்கு அவரது இரண்டாவது மனைவி ஆஷாரா மூலம் ஒரு ஆண்மகவு கிட்டியது.

அக்குழந்தைக்கு ‘ இஸ்மாயில் ‘ என பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தனர். இக்குழந்தையின் வழி வந்தவர்களே இக்கால அராபியர்கள் ஆவார்கள்.

இஸ்மாயில் பால்யப் பருவத்தை எட்டியிருந்தபோது, இஸ்மாயிலை தனக்கு பலியிடுமாறு இப்ராஹீமுக்கு அவரது கனவில் இறைவன் வந்து கட்டளை இட்டார்.

இதனைப் பற்றி இப்ராஹீம் இஸ்மாயிலிடம், “இறைவன் உன்னை தனக்கு அறுத்து பலியிடுமாறு எனது கனவில் வந்து கூறுகின்றார்.” என்று கூற, இஸ்மாயில் “இறைவன் கட்டளை அதுவே என்றால் அதை நிறைவேற்றுங்கள்.” என்று கூறுகின்றார்.

பின்னர் இஸ்மாயிலின் அனுமதியிடம் அவரை இப்ராஹிம் பலியிட துணிந்து தனது ஆசை மகனை பலியிட முயன்றார்.

ஆனால் இஸ்மாயினை பலியிட முடியவில்லை. இப்ராஹீம் நபிகள் இறைவனின் சொல்லுக்கு முழுமையாக கட்டுப்பட்டார் என்பதை ஏற்றுக்கொண்டு, ஜிப்ரில் எனும் வானவரை அனுப்பி அந்நிகழ்வை இறைவன் தடுத்தார்.

மேலும் ஒரு ஆட்டை இறக்கி வைத்த இறைவன் இஸ்மாயிலுக்கு பதிலாக அந்த ஆட்டை பலியிடுமாறு இப்ராஹீமுக்கு கட்டளையிட்டார்.

இப்ராஹீமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இஸ்லாமிய மக்கள் தமது இல்லங்களில் ஆடுகளை பலியிட்டு, இந்தப் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

உணவு பகிர்தல்

பக்ரீத் நாளில்தான், ‘இயன்றதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவுக’ என்ற கோட்பாடு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பலியிடல் என்பது பக்ரீத் பண்டிகையின் சிறப்பம்சமாகும்.

சிறப்புத் தொழுகைகள் இடம்பெற்று முடிந்த பின்னர், ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் என இஸ்லாமியர்கள் தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு இவைகளைப் பலியிட்டு அவற்றை மூன்று சமபங்குகளாக பிரித்து ஒரு பங்கை அயல் வீட்டார்க்கும், மற்றைய பங்கை ஏழைகளுக்கும் பகிர்ந்தளிக்கின்றனர்.

மூன்றாவது பங்கையே தங்களது தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனாலேயே இந்நாள் ஈகைத் திருநாள் என அழைக்கப்படுகிறது.

இவ்வாறு பலியிடப்படும் விலங்குகள் ஊனமில்லாமலும் குறைந்த பட்சம் ஒரு வயது பூர்த்தியானதாகவும் இருக்குமாறு பார்த்து பலியிடுகின்றனர்.

அத்துடன் இந்நாளில் புத்தாடை அணிந்து உறவினர் இல்லங்கள் சென்று ஒன்று கூடி மகிழ்ச்சியான நாளாகவும் கொண்டாடுகின்றனர்.

You May Also Like :
சூயஸ் கால்வாய் வரலாறு
மருதநாயகம் வாழ்க்கை வரலாறு