வாசிப்பை நேசிப்போம் கட்டுரை

vasippai nesippom katturai in tamil

வாசிப்பே ஒரு மனிதனை பூரணப்படுத்தும் என்பதினூடாக மனிதானனவன் சிறந்து விளங்குவதில் பிரதான பங்கினை வாசிப்பே பெற்றுள்ளது. அந்த வகையில் வாசிப்பதினூடாக எம் அறிவின் வளர்ச்சியானது மேம்படுவதோடு பல்வேறு தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். நல்ல புத்தகங்களை வாசிப்பதானது எம்மை சிறந்த மனிதனாக்கும்.

வாசிப்பை நேசிப்போம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வாசிப்பின் அவசியம்
  • அறிவுத்திறன் வளர்ச்சியில் வாசிப்பு
  • வாசிப்பால் உயர்ந்த தலைவர்களும் அவர்களது கூற்றும்
  • இன்றைய சமூகத்தில் வாசிப்பு பழக்கம்
  • முடிவுரை

முன்னுரை

புத்தகங்களை வாசிப்பவர்களே தனது பொழுதுபோக்கை சிறந்த முறையில் கழிக்கின்றனர். ஏனெனில் வாசிப்பதினூடாகவே எம்மால் பல்வேறுபட்ட புதிய விடயங்களை, நாட்டு நடப்புக்களை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் வாசிப்பினை நேசிக்க வேண்டும். வாசிப்பை நேசிக்கும் போது நாம் பல நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.

வாசிப்பின் அவசியம்

எம்முடைய வாசிப்பு பழக்கமானது எமக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்த துணைபுரிகின்றன. அதாவது நாம் நல்ல புத்தகங்களை வாசிப்பதன் ஊடாக எமக்கு நல்ல சிந்தனைகள் மற்றும் அறிவாற்றல் விருத்தியடைகின்றன.

ஒளவையாரின் “ஓதுவது ஒழியேல்” என்ற கூற்றானது வாசிப்பின் அவசியத்தை எமக்கு எடுத்துரைக்கின்றது. மேலும் சிறந்த பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ளவும் வாசிப்பானது முக்கியமான பங்காற்றுகின்றது.

அறிவுத்திறன் வளர்ச்சியில் வாசிப்பு

மனிதனது அறிவுத்திறனானது வளர்சியடைய வேண்டுமாயின் வாசிப்பு மிகவும் அவசியமாகும்.

வாசிப்பதன் மூலமாக ஞாபகசக்கி அதிகரித்தல், பகுத்தறிவாற்றல் வளர்சியடைதல், எழுத்துதிறன் மற்றும் பேச்சுதிறன் வளர்ச்சி என எம்மை முன்னேற்றுவதற்கான ஊக்குவிப்பு கருவியாகவே வாசிப்பானது காணப்படுகிறது. மேலும் மனிதனுக்குரிய பகுத்தறிவினை சிறந்த சிந்தனையுள்ள அறிவாக மாற்றுவதற்கு வாசிப்பே உதவுகிறது.

வாசிப்பால் உயர்ந்த தலைவர்களும் அவர்களது கூற்றும்

வாசிப்பதன் காரணமாக இன்று உயர்ந்த நிலையை அடைந்த தலைவர்களை நோக்குவோமேயானல் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசு தலைவராக இருந்தவரே “ஆப்ரகாம் லிங்கன்” ஆவார். இவர் சுயமாக படித்து சட்ட அறிஞரானவராவர் இதற்கு வாசிப்பானது பிரதான பங்கினை வகிக்கிறது.

அந்த வகையில் இவர் “தான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன்” என்று கூறியுள்ளார். இதனூடாக வாசிப்பின் பெருமை எடுத்துக்காட்டப்படுகிறது.

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் எனக்கு அனுமதியுங்கள் என்று கூறியவரே நெல்சன் மண்டேலா ஆவார். இவர் உலகில் மதிக்கப்படும் சிறந்த தலைவர்களுள் ஒருவராக காணப்படுகின்றார்.

புத்தகங்கள் என் தனிப்பட்ட வாழ்வின் சுதந்திரத்திற்கான நுலைவாயிலாக இருந்தன. கொள்ளையர்கள் புதையல் தீவில் கொள்ளை கொண்டதை விட புத்தகங்களில் அதிக புதையல் உள்ளது என குறிப்பிட்டவரே உலகப் புகழ் பெற்ற ஓவியர் வோல்டடிஸ்னி ஆவார். இவர் உலகில் மிகப் பெரிய திரைப்பட தாயரிப்பாளராகவும் திகழ்கின்றார்.

மனிதனை நல்வழிப்படுத்த புத்தகம் சிறந்த வழிகாட்டியாகவும் நண்பனாகவும் திகழ்கின்றது. அதனால் தான் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம் என பிரித்தானியா பிரதமாராகவும், வரலாற்றியலாளராகவும் காணப்பட்ட வின்ஸ்டன் சேச்சில் குறிப்பிடுகின்றார்.

மேலும் ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் என சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார். இவ்வாறாக இன்று தலை சிறந்த தலைவர்களாக திகழ்ந்தவர்கள் பலர் வாசிப்பினை நேசித்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

இன்றைய சமூகத்தில் வாசிப்பு பழக்கம்

இன்றைய சமூகத்தில் வாசிப்பு பழக்கமானது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. அதாவது இன்றைய இளைஞர்கள் இணையம் மற்றும் தொலைபேசியுடனேயே தனது பொழுதுபோக்கை கழிக்கின்றனர். இதன் காரணமாக வாசிப்பு என்பது இல்லாமலே போய்விட்டது.

நாம் எமது பொழுதுபோக்கை சிறப்பாக மாற்றுவதற்கான சிறந்த வழி வாசிப்பாகும் இதனூடாகவே சிறந்த எதிர்காலத்தை எமக்கு ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

முடிவுரை

மனிதனுக்கு வழி காட்டும் சிறந்த ஆசானாகவும் புத்தகங்களே காணப்படும். அந்த வகையில் சிறு வயதிலிருந்தே தங்களுடைய சிறு பிள்ளைகளுக்கு வாசிப்பை கற்றுக்கொடுத்து வாசிக்க தூண்டுவது பெற்றோர்களுடைய கடமையாகும். வாசிப்பே ஒரு மனிதனின் சிறந்த பாதைக்கான வழிகாட்டியாகும்.

You May Also Like:

வாசிப்பின் பயன்கள் கட்டுரை

அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு கட்டுரை