கூட்டுறவு பற்றிய கட்டுரை

kooturavu katturai in tamil

ஒரு மனிதனானவன் கூட்டாக ஒரு விடயத்தை மேற்கொள்கின்ற போதே அந்த விடயத்தில் சிறந்த முறையில் வெற்றி பெறுகின்றான். கூட்டுறவானது ஒரு தனிமனிதனின் நலத்தில் பிரதான பங்கினை வகிக்கின்றது. அந்தவகையில் இந்தியாவின் வளர்ச்சியில் கூட்டுறவு பாரிய பங்காற்றுகின்றது.

கூட்டுறவு பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கூட்டுறவு என்பது
  • கூட்டுறவின் அவசியம்
  • இந்தியாவும் கூட்டுறவு சங்கமும்
  • கூட்டுறவின் நன்மைகள்
  • முடிவுரை

முன்னுரை

மனிதனானவன் தனித்து வாழ முடியாது ஏனெனில் மனிதன் ஒரு சமூக பிராணி ஆவான். மனிதனால் தனித்து வாழமுடியாது என்ற அடிப்படையில் கூட்டுறவு கொள்கையையே பின்பற்றி வருகின்றான்.

அதாவது மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படும் கொள்கையாக கூட்டுறவு காணப்படுகின்றது. சமத்துவத்தின் முதல் படியே கூட்டுறவு முறைமையாகும்.

கூட்டுறவு என்பது

கூட்டுறவு பற்றி பல்வேறு வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் கூட்டுறவு என்பதனை பொதுவாக நோக்கினால் சேவை செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டதொரு கொள்கை அமைப்பாகும். அந்த வகையில் கூட்டுறவு பற்றி சில தலைவர்கள் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர்.

ஒவ்வொருவரும் தமக்காகவும், பிறருக்காகவும் தமது திறன் மற்றும் கருவிகளை தம்முடைய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து அதனால் ஏற்படும் இலாபமோ நட்டமோ எதுவானாலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளும் முறையே கூட்டுறவு என ஹெரிக் கூறுகிறார்.

அதே போன்று கல்வெர்ட் என்பவர் மக்கள் தங்கள் பொருளாதார தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு எவ்வித கட்டாயமும் இன்றி தாமாகவே முன் வந்து மனிதர்கள் என்ற வகையில் சமத்துவத்துடன் ஒருங்கிணைந்து செயற்படும் முறையே கூட்டுறவு என குறிப்பிட்டுள்ளார்.

கூட்டுறவின் அவசியம்

கூட்டுறவானது நாம் ஒரு விடயத்தை சிறந்த முறையில் மேற்கொள்ளவும் சமத்துவத்தை பேணவும் அவசியமானதாகும்.

கூட்டுறவு முறைமையானது கூட்டுறவு கொள்கையில் காணப்படும் அனைவருடைய நலனை பேண துணைபுரிகின்றதோடு பாகுபாடுகளின்றி அனைவரும் கூட்டுறவில் ஒருங்கிணைந்து பொருளாதார விடயங்களை மேற்கொள்ள அவசியமாகின்றது. மேலும் சிறந்த முறையில் தமது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவும் அவசியமாகும்.

இந்தியாவும் கூட்டுறவு சங்கமும்

கூட்டுறவு சங்கங்களானவை இந்தியாவில் 1940ம் ஆண்டு தோற்றம் பெற்றது. இது இந்திய தேசத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற நோக்கில் தோற்றம் பெற்றதாகும்.

அதாவது ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது இந்தியாவில் தொழிலாளிகள், உழவர்கள் என பல்வேறுபட்டவர்கள் பொருளாதார ரீதியில் துன்பத்திற்குள்ளாகினர். இவர்களது துன்பத்தினை போக்குவதாகவே கூட்டுறவு முறைமையானது காணப்பட்டது.

இந்தியாவில் 1904ம் ஆண்டு கூட்டுறவு நாணய சங்கம் உருவாகின. மேலும் 1919ம் காலப்பகுதிகளில் கூட்டுறவு சங்கமானது மாநிலங்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததோடு சிறப்பான முறையில் இயங்கி வந்தன.

இவ்வாறாக மக்கள் மத்தியில் சிறப்பிடம் பெறுவதோடு மக்கள் நலன் பேணுபவையாக கூட்டுறவு சங்கங்கள் காணப்படுகின்றன.

கூட்டுறவின் நன்மைகள்

கூட்டுறவு முறைமையானது செலவில்லாத முறைமையாகவும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் முறைமையாகவும் காணப்படுகின்றது. மேலும் சேவையை அடிப்படையாக கொண்டதாகவே கூட்டுறவு முறைமை காணப்படுகின்றது.

சமத்தும் பேணப்படல், நிரந்தரமான சட்டத்தினை உடையதாக காணப்படல், நிறுவனங்களின் வருவாய்க்கு வருமான வரி விதிக்கப்படாமை, உறுப்பினர்களிடையே சேமிப்பு பழக்கம் மற்றும் சமூக நீதி போன்ற நல் விடயங்கள் உருவாதல், உற்பத்தியாளர் விலை மற்றும் நுகர்வோர் விலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை குறைத்தல் என பல்வேறு நன்மைகளை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது.

முடிவரை

கூட்டுறவு கொள்கை முறைமையானது சமூகத்திற்கு மத்தியில் ஓர் சேவையினை நோக்காக கொண்டு காணப்படினும் சில குறைபாடுகளையும் தன்னகத்தே கொண்டே தான் செயற்பட்டு வருகின்றது.

அந்தவகையில் லஞ்சம், ஊழல் போன்ற விடயங்களை தவிர்த்து சிறந்த நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுவதன் மூலமே நாட்டினை வளர்ச்சியடையச் செய்ய முடியும்.

You May Also Like:

லஞ்ச ஒழிப்பு கட்டுரை

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் கட்டுரை