இயற்கையை நேசிப்போம் கட்டுரை

iyarkaiyai nesippom katturai in tamil

இயற்கையை நேசிப்போம் உயிர்களை காப்போம் என்ற வரியினூடாக நாம் இப்பூமியில் உயிர்வாழ்வதற்கு காரணமே இயற்கை தான் அத்தகையை இயற்கையை நேசிப்பது அனைவரதும் கடமையாகும். அந்தவகையில் எமது அனைத்து வகையான செயற்பாடுகளும் இயற்கையோடு ஒன்றியதாகவே காணப்படுகின்றது.

இயற்கையை நேசிப்போம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இயற்கையின் சிறப்பு
  • இயற்கையை நேசித்தல்
  • இயற்கை மாசடைவும் அதற்கான காரணங்களும்
  • இயற்கையை பாதுகாத்தல்
  • முடிவுரை

முன்னுரை

நாம் வாழும் பூமியானது இயற்கைiயான அருட்கொடைகளை கொண்டே அமைந்துள்ளது. அந்த வகையில் நம்முடைய அனைத்து செயற்பாடுகளும் இயற்கையோடு ஒன்றியதாகவே காணப்படுகின்றன. எனவே இத்தகையை இயற்கையை நேசிப்பதோடு நின்றுவிடாமல் பாதுகாப்பதும் அவசியமானதாகும்.

இயற்கையின் சிறப்பு

அனைத்து உயிர்களும் இப்பூமியில் நிலை பெற்று வாழ்வதற்கு நிலம், நீர், காற்று, மழை, தீ போன்ற பஞ்சபூதங்களே காரணமாகும். மேலும் இயற்கையின் மூலமாகவே மனிதனது அன்றாட செயற்பாடுகள் தீர்க்கப்படுகின்றது.

அதாவது உணவு உற்பத்தி தேவைகளானவை இயற்கை இல்லாமல் இடம்பெறுவதில்லை என்ற வகையில் இயற்கையை நேசிப்பது முக்கியமானதாகும். இயற்கையின்றேல் மனிதர்களே இல்லை என்றளவிற்கு இயற்கையானது முக்கியத்துவமிக்கதாகும்.

இயற்கையை நேசித்தல்

இயற்கைய நேசிப்பது இவ் உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனதும் கடமையாகும். ஏனெனில் நாம் இன்று சிறந்த வாழ்கையை வாழ்கின்றோம் என்றால் அது இயற்கை எமக்களித்த அருட்கொடையாகும்.

உதாரணமாக நீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் விதமாக மழை என்பது இயற்கையின் கொடையாக கிடைக்கின்றது. மேலும் இயற்கையான உணவுகள் எம்மை பல நோய்களிலிருந்து எம்மை காத்து வலிமையை தந்து ஆரோக்கியமாக வாழ உதவுகின்றது. இத்தகைய சிறப்பு மிக்க இயற்கையினை நேசிப்பது அனைவருடைய கடமையாகும்.

நாம் இயற்கையை நேசிப்பதன் மூலமே இயற்கையும் எம்மை நேசிக்கும். அவ்வாறல்லாது இயற்கையில் அக்கரையற்று செயற்பட்டோமேயானால் இயற்கையின் சீற்றத்திற்கே ஆளாகும் நிலையே உருவாகும். இதன் காரணமாக பல்வேறு துன்பங்களே எமக்கு ஏற்படும் என கூறமுடியும்.

இயற்கை மாசடைவும் அதற்கான காரணங்களும்

எமக்கு இறைவனால் கிடைக்கப்பெற்ற அருட்கொடையான இயற்கை இன்று பல்வேறு காரணங்களால் மாசடைந்து கொண்டே வருகின்றது. இதற்கு பிரதானமான காரணம் மனிதர்களது செயற்பாடுகளே ஆகும்.

கழிவுகளை நீர் நிலைகளில் இடல், பொலித்தீன் பாவனையின் அதிகரித்த பயன்பாடு, தொழிற்சாலை கழிவுகள் நீருடன் கலத்தல் வாகனங்களின் புகைகள், மண்வளத்தினை சுரண்டல் என பல காரணங்களால் இயற்கை சூழலானது மாசுபடுகின்றது.

இவ்வாறு மாசடைவதன் மூலம் பல்வேறு பாரிய விளைவுகள் ஏற்படுகின்றன. அதாவது வறட்சி, நோய்கள் ஏற்படல், பருவநிலை மாற்றம், ஓசோன் படையில் தாக்கம் என பல்வேறுபட்ட விளைவுகள் எம்மை ஆட்கொள்ளும் நிலையே உருவாகும் என்பதனை உணர்ந்து இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதினூடாக இயற்கையை நேசிப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

இயற்கையை பாதுகாத்தல்

மகத்துவமிக்க இயற்கையை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். அதாவது இன்று இயற்கை வளங்களானவை பல்வேறு வகையில் அழிவுக்குட்பட்டே வருகின்றது. இதனை அழிவடையச் செய்யாது சிறப்பாக காப்பது அனைவருடைய கடமையாகும்.

மனிதர்களாகிய நாம் காடுகளை அழிக்காது பல மரங்களை நட்டு இயற்கை பாதுகாக்க வேண்டும். மேலும் நெகிழி பயன்பாட்டை இயன்றளவு தடுத்தல் அதுபோன்று இயற்கையை அழிவுக்குட்படுத்தும் செயற்பாடுகளை தவிர்த்து அதனை பாதுகாத்தல் வேண்டும். இயற்கையை பாதுகாப்பதன் மூலமே அது எம்மை காக்கும்.

முடிவுரை

இன்று நாம் பல்வேறு இயற்கை சீற்றங்களிற்கு உட்பட்டு வருகின்றோம். இதற்கு பிரதானமான காரணம் எம்முடைய பல்வேறுபட்ட செயற்பாடுகள்தான் எனவே இத்தகைய சூழலை மாற்றி இயற்கையை நேசிப்பதற்கு கற்று கொள்ள வேண்டும். இயற்கையை அழிவுக்குட்படுத்தினால் எம் மனித இனமே அழிந்து விடும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

You May Also Like:

இயற்கையின் நன்மைகள் கட்டுரை

இயற்கை பாதுகாப்பு கட்டுரை தமிழ்