பசுமை நகரம் கட்டுரை

pasumai nagaram katturai in tamil

இந்த பதிவில் இயற்கையை காக்கும் “பசுமை நகரம் கட்டுரை” பதிவை காணலாம்.

பசுமை நகரத்தைச் செயல்படுத்தப்படுவதன் மூலம் மனித குலத்திற்கும், இயற்கைக்கும் மகத்தான நன்மைகளை கொண்டு வர முடியும்.

பசுமை நகரம் கட்டுரை

பசுமை நகரம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பசுமை நகரின் முக்கியத்துவம்
  3. நகரமயமாக்கலின் பாதிப்புக்கள்
  4. பசுமை நகரின் நன்மைகள்
  5. உலகின் பசுமையான நகரங்கள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகின் தீவிர வளர்ச்சி இயற்கையையும், அதன் முக்கிய கூறுகளையும் மாற்றியுள்ளது. தற்கால உலகம் அதிவேகத்துடன் பயணித்து வருகின்றது. இது மனித வாழ்க்கையை எளிதாக்கும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் மற்றும் சாதனங்களை உருவாக்கக் காரணமாகவுள்ளது.

நகரங்கள் வாழ்வதற்கு மிகவும் வசதியான இடங்களாக மாறிவிட்டன. அதிகமான மக்கள் தங்கள் வசதிக்காக நகரங்களை நாடுகின்றனர். இது பல தீவிர பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றது. இக்கட்டுரையில் பசுமை நகரம் பற்றி நோக்கலாம்.

பசுமை நகரின் முக்கியத்துவம்

உலகளாவிய ரீதியில் நகரமயமாக்கல் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான மாற்று வழிகளை வழங்குவது பெரும் சவாலாகவுள்ள நிலையில் பசுமை நகரங்களின் வளர்ச்சியே இதற்கான போதுமான பாதுகாப்பு வழிமுறையாகவுள்ளன.

இது பூமியை அபாயகரமான இடிப்பிலிருந்து காப்பாற்றவும், இயற்கை வளங்களிலிருந்து பலன்களைப் பெறவும் உதவும்.

பசுமை நகரத்தைச் செயல்படுத்தப்படுவதன் மூலம் மனித குலத்திற்கும், இயற்கைக்கும் மகத்தான நன்மைகளை கொண்டு வர முடியும்.

இந்த பசுமை நகர திட்டத்தின் ஆரம்ப நோக்கம் பூஜ்ஜிய கழிவு மற்றும் புதைபடிவ எரிபொருள் கழிவுகள் இல்லாத நகரத்தை மேம்படுத்துவதாகும்.

மேலும் போக்குவரத்து, வளங்களின் பயன்பாடு மற்றும் மறுசுழற்சித் தொழில்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது.

நகரமயமாக்கலின் பாதிப்புக்கள்

நகரமயமாக்கல் குற்ற விகிதங்கள் மற்றும் சமத்துவமின்மையை அதிகரிக்கிறது. இது உள்ளூர் மற்றும் உலகளாவிய சூழலின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நகரமயமாக்கல் காரணமாக, சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இது சமகால உலக மக்களிடையே அதிகரித்து வரும் கொடிய நோய்களிற்கு முக்கிய காரணமாகவுள்ளது. மேலும் மிகப் பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல்கள் நகரமயமாக்கலினாலேயே ஏற்படுகின்றது.

பசுமை நகரின் நன்மைகள்

பசுமை நகரின் அடிப்படை இலக்கு மனித உயிர்களைப் பாதுகாப்பதும், இயற்கையைக் காப்பதும் ஆகும். சுற்றுச்சூழல் கொள்கைகளின் அடிப்படையில் நகரம் கட்டப்படும்.

தீங்கு விளைவிக்கும் போக்குவரத்தை குறைத்தல், மாற்று வளங்களின் பயன்பாடு மற்றும் மறுசுழற்சி தொழில்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும்.

பசுமை நகரங்கள் கழிவுகளை சேகரிக்கும் மற்றும் அதை மறுசுழற்சிக்காக பயன்படுத்தும் திட்டங்களை ஊக்குவிக்கின்றன. ஒரு நபரால் வெளியேற்றப்படும் கழிவுகளின் அளவைக் கணக்கிடுவது தொடர்பான சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

கழிவுகள் குறித்த அளவை விட அதிகரிக்கும் போது அந்த நபர் அபராதப் பணத்தை செலுத்த வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளால் குடிமக்களுக்கு தங்கள் சொந்த நகரங்களில் கழிவு பொருட்களின் அளவைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொடுப்பதுடன், மறுசுழற்சியும் வளர்ச்சியடையும்.

உலகின் பசுமையான நகரங்கள்

உலகின் முதலிடத்திலுள்ள பசுமையான நகரம் கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் உள்ளது. கனடாவின் மற்றுமொரு நகரமான ஒட்டாவாவும் பசுமை நகராக அறியப்படுகின்றது.

அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயின் தலைநகரமான ஹோனலுலு மற்றும் மின்கபோலிஸ் போன்றனவும், பின்லாந்தின் ஹெல்சின்கி, நார்வேயின் ஒஸ்லோ, சுவிடனின் ஸ்டாக்ஹோம், சுவிஸ்சர்லாந்தின் சூரிச் மற்றும் ஐப்பானின் கட்ஷீயாமா போன்ற நகரங்களும் உலகின் பசுமையான நகரங்களாக சிறப்புப் பெறுகின்றன.

முடிவுரை

உலகளாவிய நகரமயமாக்கலின் பிரச்சினை மிகவும் சர்ச்சைக்குரியது. ஒருபுறம், நீடித்த நகரமயமாக்கல் புதுமையான முன்னேற்றத்தையும், உலகின் செழுமையையும் ஊக்குவிக்கிறது.

மறுபுறம், இது மிகப்பெரிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

நகரமயமாக்கலின் பாதிப்புக்களிலிருந்து இயற்கையையும் மனித குலத்தையும் காக்க பசுமை நகரமே ஒரேயொரு சிறந்த வழியாகும். பசுமை நகரங்கள் எதிர்காலத்திற்கு சிறந்த வழிமுறை என்பதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

You May Also Like :
இயற்கை பாதுகாப்பு கட்டுரை
இயற்கையின் நன்மைகள் கட்டுரை