மணிமேகலை பாத்திரம் பெற்ற காதை கட்டுரை

manimegalai pathiram petra kaathai katturai in tamil

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகவே மணிமேகலை காப்பியமானது காணப்படுவதோடு இரட்டை காப்பியங்களுள் ஒன்றாகவும் மணிமேகலையானது சிறப்பு பெற்று விளங்குகின்றது.

அந்தவகையில் மணிமேகலை காப்பியத்தை சீத்தலைச் சாத்தனார் இயற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

மணிமேகலை பாத்திரம் பெற்ற காதை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பாத்திரம் பெற்ற காதை
  • மனித வாழ்வில் இறைநம்பிக்கை
  • தாய் மகள் மீது கொண்ட அன்பு வெளிப்படும் விதம்
  • மணிமேகலை காப்பியத்தின் சிறப்பு
  • முடிவுரை

முன்னுரை

மணிமேகலை காப்பியமானது பல்வேறு அறக் கருத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள காப்பியமாக காணப்படுகிறது.

அந்த வகையில் மணிமேகலை காப்பியத்தில் இடம்பெற்ற காதைகளில் ஒன்றாகவே பாத்திரம் பெற்ற காதையானது இடம்பெறுகின்றது. இக்காதையானது பல வாழ்வியல் அம்சங்களை கொண்டமைந்துள்ளது.

பாத்திரம் பெற்ற காதை

பாத்திரம் பெற்ற காதையானது மணிமேகலையில் இடம்பெறும் 30 காதைகளில் 11வதாக இடம்பெறும் காதையாகும்.

இக்காதையில் மணிமேகலை, தீவதிலகை, மணிமேகலையின் தாய் மாதவி, மாதவியன் தோழி சுதமதி போன்றோர் இடம்பெறுகின்றனர். பாத்திரம் பெற்ற காதையின் கதைக்களமாக மணிபல்லவதீவு காணப்படுகிறது.

இக்கதையானது மணிமேகலை கையில் எவ்வாறு அமுத சுரபி கிடைக்கிறது, யார் மூலமாக அமுத சுரபியை பெறுகின்றாள் என்பது தொடர்பாகவே அமைந்துள்ளது. மேலும் இக்காதையானது பல அறக் கருத்துக்களை கூறியுள்ளமை இதன் சிறப்பினையே வெளிப்படுத்துகின்றது.

மனித வாழ்வில் இறை நம்பிக்கை

மணிமேகலையில் இடம்பெறும் பாத்திரம் பெற்ற காதையில் இறைநம்பிக்கையானது எவ்வாறு காணப்படல் வேண்டும் என்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது தீபதிலகையிடம் இருந்து விடைபெற்று மணிமேகலை ஊருக்கு செல்வதற்கு முன் தீபதிலகையை வணங்கி புத்த பெருமானது பீடிகையை வலம் வந்து தொழுத பின்னே மீண்டும் ஊருக்கு புறப்பட்டமையானது இறைநம்பிக்கையினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஒரு மனிதனுடைய வாழ்வில் இறைநம்பிக்கையானது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை இக்காதையானது தெளிவுபடுத்துகின்றது.

தாய் மகள் மீது கொண்ட அன்பு வெளிப்படும் விதம்

மணிமேகலையின் தாயான மாதவியும் செவிலித்தாயான சுமதியும் தன் மகள் வீடு திரும்பாமையை எண்ணி மனம் வருந்தியமையானது தாய் தன் மகள் மீது கொண்ட பாசத்தினையே வெளிப்படுத்தி நிற்கின்றது. அதாவது,

வழு வறு தெய்வம்
வாய்மையின் உரைத்தே
எழு நாள் வந்த தென்மகள் வாராள்
வழு வாய் உண்டென மயங்கி

என்ற வரிகளினூடாக அன்பானது விளக்கப்படுகின்றது.

அன்பில் சிறந்தது தாயானவள் தன் மகள் மீது கொண்ட அன்பேயாகும் என்பதானது தெளிவுபடுத்தப்படுவதோடு, தாயின் அன்பு எத்தகையது, தன் மகளின் மீது பாசத்தினை வெளிப்படுத்திய விதம் போன்றவற்றை சிறப்பாக எடுத்து கூறுவதாகவும் அமைந்துள்ளது.

மணிமேகலை காப்பியத்தின் சிறப்பு

மணிமேகலை காப்பியமானது சமூகத்தை சீர்திருத்தும் ஓர் காப்பியமாக காணப்படுவதோடு துறவறம் பற்றி கூறும் ஓர் சமணக் காப்பியமாகவும் திகழ்வது இதன் சிறப்பினையே எடுத்துக் கூறுகின்றது.

மேலும் அறக்கருத்துக்களை எடுத்தியம்பக் கூடியதொரு காப்பியமாகவும், இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை போன்ற கருத்துக்கள் மற்றும் பெண்ணிண் பெருமையை பறைசாற்றும் காப்பியமாகவும் திகழ்வது இக்காப்பியத்தின் சிறப்பையே சுட்டி நிற்கின்றது.

முடிவுரை

மணிமேகலையில் இடம்பெறும் பாத்திரம் பெற்ற காதையானது ஒரு மனிதனானவன் எவ்வாறு அறத்தின் வழியில் செயற்பட வேண்டும் என்பதனை கூறுவதோடு மட்டுமல்லாது பல்வேறு வாழ்வியல் கருத்துக்களையும் எடுத்துக்கூறுகின்ற ஒரு சிறப்புமிக்க காதையாகவும் காணப்படுகிறது.

You May Also Like:

சிறுத்தையே வெளியே வா கட்டுரை

சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரை