இந்திய கலாச்சாரம் கட்டுரை

india kalacharam katturai in tamil

உலகின் மிகவும் பழமையான கலாச்சாரத்தை கொண்ட ஒரு நாடே இந்தியாவாகும். சுமார் 4500 வருடங்களுக்கு முன்பே இந்திய நாகரீகம் தோன்றியுள்ளதாக ஆய்வுகளின் வழி தெரிய வந்துள்ளன.

இதன் படி உலகின் முதல் மற்றும் உயர்ந்த கலாச்சாரம் கொண்ட ஒரு நாடு இந்தியா என அனைத்து உலக அமைப்புகளும் தெரிவித்துள்ளமையை காண முடியும்.

இந்திய கலாச்சாரம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மொழி
  • மதம்
  • உணவுப் பழக்க வழக்கம்
  • ஆடை அணிகலன்கள்
  • கலை
  • முடிவுரை

முன்னுரை

கலாச்சாரம் எனப்படுவது குறிப்பிட்ட ஒரு மக்கள் குழுவினர் பின்பற்றும் மதம், மொழி, ஆடை அணிகலன்கள், கலை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே அமையும்.

இந்தியாவானது பல்வேறு இன, மத, மொழி கொண்ட மக்களை உள்ளடக்கியதாகவே காணப்படுகின்றது. இக்கட்டுரையில் இந்தியாவின் கலாச்சாரம் பற்றி நோக்கலாம்.

மொழி

தமிழ் நாட்டில் தமிழ், கேரளாவில் மலையாளம், ஆந்திராவில் தெலுங்கு, கர்நாடகாவில் கன்னடம் மற்றும் மராத்தி, பெங்காலி போன்ற பல்வேறு மொழிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்படுவதனைக் காணலாம்.

இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும் அனைவரும் பிற மொழிகளை மதித்தே நடக்கின்றனர். மேலும் பழமையான பல மொழிகள் இந்தியாவில் தோன்றியுள்ளன.

இதில் இந்திய கலாச்சாரத்தின் மூத்த மொழியான தமிழ் தென்இந்தியாவில் தோன்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

மதம்

இந்திய கலாச்சாரமானது இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம், பார்ஸி, சீக்கியம், சமணம் போன்ற பல்வேறு சமயங்கள் கொண்டதாகவே காணப்படுகின்றது.

பெரிய மதங்களின் வரிசையில் மூன்றாவது, நான்காவது வரக்கூடிய இந்து மற்றும் பௌத்த மதங்களின் பிறப்பிடமும் இந்தியாவாகும்.

ஆய்வுகளின் வழி இந்திய மக்களில் பெரும் பகுதியினர் இந்துக்களாகவே அறியப்படுகின்றனர். ஆகவே இந்திய கலாச்சாரத்தில் மதங்களும் இன்றியமையாததாகவே காணப்படுகின்றது.

உணவுப் பழக்க வழக்கம்

இந்தியாவில் சைவம் மற்றும் அசைவம் உணவுப் பழக்கம் கொண்டவர்கள் காணப்படுகின்றனர். அரிசியும், கோதுமையும் இந்தியாவின் உணவு வகைகளில் முக்கியமானதாகும். வட இந்தியர்கள் கோதுமையையும், தென் இந்தியர்கள் அரிசியையும் அதிகம் பயன்படுத்துவதனைக் காணலாம்.

மேலும் சாமை, கேழ்வரகு, சோளம், பருப்புவகைகள், சட்னி வகைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் அசைவத்தில் கோழி, ஆடு போன்றன இந்திய உணவுப் பழக்க வழக்கமாக காணப்படுகின்றது.

ஆடை அணிகலன்கள்

இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் வித்தியாசமான ஆடைப் பழக்கங்களை கொண்டுள்ளனர். அதிமான இந்தியப் பெண்கள் புடவை அணிபவர்கள் ஆவர். ஆயினும் சுடிதார், சல்வார் போன்றவற்றையும் இந்திய பெண்கள் அணிகின்றனர்.

இந்திய ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட், குர்தா என்பவற்றை அணிகின்றனர். இவ்வாறாக இந்தியா பிற நாடுகளை போல தனித்துவமான ஆடை முறையை கொண்டுள்ளது.

கலை

கலை எனும் போது அதில் கட்டிடங்கள், அழகியல், இசை, நடனம் மற்றும் நடிப்பு போன்ற அனைத்துமே உள்ளடங்கும். இந்திய கலாச்சாரத்தின் கட்டிடக்கலை பெருமைகளை பறைசாற்றும் வகையில் தாஜ்மஹால், இந்தியா கேட் என்பன காணப்படுகின்றது.

அத்தோடு 1896 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்கள் மும்பையில் சினிமா துறையை ஆரம்பித்தது தொடக்கம் இன்றுவரை சினிமா இசை, நடனம், நாடகம் என்பவற்றை உள்வாங்கிக்கொண்டு பாரிய செல்வாக்கு கொண்ட ஒரு கலைத்துறையாக விளங்குகிறது.

இந்திய இசை, நடன, நாடக மரபுகள் 2000 ஆண்டுகளுக்கும் மேலானவை என ஆய்வுகளின் வழி தெரிய வந்துள்ளன.

முடிவுரை

இந்திய மக்கள் பல்வேறு வகையான இன, மத, மற்றும் மொழி வேறுபாடுகளை கொண்டவர்களாக காணப்படுகின்றமையால் பல் கலாச்சாரம் கொண்ட ஒரு நாடாகவே இந்தியா காணப்படுகின்றது.

நாட்டில் எவ்வளவு வேற்றுமைகள் காணப்படினும் “வேற்றுமையில் ஒற்றுமை” என மக்கள் அனைவரும் இந்தியன் என்ற ரீதியில் தேசப்பற்றுடன் செயற்படுவதனைக் காணலாம்.

You May Also Like:

ஊழலற்ற இந்தியா கட்டுரை

ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம் கட்டுரை