ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம் கட்டுரை

oolalatra india katturai in tamil

ஒரு நாடானது பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடையாது காணப்படுகின்றமைக்கான பிரதானமானதொரு காரணம் ஊழல் அதிகரித்து காணப்படுவதே ஆகும். ஊழலில்லாத நாட்டினை உருவாக்குவதன் மூலமாகவே ஜனநாயக நாடாக ஒரு நாட்டை உயர்த்த முடியும்.

ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான வழிகள்
  • ஊழலினால் ஏற்படும் விளைவுகள்
  • இந்தியாவில் ஊழல் ஏற்படக் காரணங்கள்
  • இந்தியாவும் ஊழலுக்கெதிரான சட்டங்களும்
  • முடிவுரை

முன்னுரை

பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியாவானது பல ஆண்டுகளாக ஊழலின் சவாலை எதிர்கொண்டே வருகின்றது. ஆகவே ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான வழிமுறைகளை பின்பற்றி சிறந்த இந்திய தேசத்தை உருவாக்க வழியமைப்பது அனைவருடைய கடமையாகும்.

ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான வழிகள்

இந்திய நாடானது ஊழலில் மிகப் பிரதான இடத்தை பெற்று வருகின்றது. அதாவது லஞ்சம் கொடுத்தல் மற்றும் வாங்குதலானது இந்தியாவில் அதிகமாக இடம் பெற்று வருவதாக ட்ரான்சிபரன்ஸி இன்டர்செனல் ஆனது தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதில் கல்வி பிரதான இடத்தினை வகிக்கின்றது.

அதாவது கல்வியறிவற்ற பலரே சட்டவிரோதமாக பல ஊழல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். எனவே கல்வியை பரப்புவதனூடாக ஊழலில்லாத இந்திய நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டணைகளை வழங்க வேண்டும். இதனூடாகவே சட்டவிரோதமாக தொழிலை மேற்கொள்பவர்கள், கறுப்பு பணத்தை குவிப்பவர்கள் தண்டனை விரிவானதன் காரணமாக ஊழல் நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள்.

அரச அலுவலகங்கள் மற்றும் ஏனைய இடங்களில் சிசிடிவி கமராக்களை பொருத்துதலினூடாக ஊழலில் ஈடுபடுபவர்களை இணங்கண்டு தண்டனையை பெற்றுக் கொடுக்க முடியும்.

ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்து அத்தகவலை வழங்குபவர்களுக்கு சன்மானங்களை வழங்குதல். போன்றவற்றினூடாக ஊழலில் ஈடுபடுபவர்கள் இலகுவில் அடையாளப்படுத்தப்படுவார்கள்.

ஊழலினால் ஏற்படும் விளைவுகள்

ஊழலின் காரணமாக திறமையானவர்களில் வாய்ப்புக்கள் பறிக்கப்பட்டு திறமையற்றவர்களுக்கே வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன, ஜனநாயக நிறுவனங்கள் பலவீனப்படுத்தப்படுவதோடு சட்டத்தின் ஆட்சியானது சீர்குலைக்கப்படுகின்றது, சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகின்ற போது சட்டத்தின் மீதான மரியாதை இழக்கப்படுகிறது. மேலும் ஏழைகளின் சமூக மற்றும் பொருளாதாரம் ஓரங்கட்டப்பட வழியமைக்கின்றது.

இந்தியாவில் ஊழல் அதிகரிக்கின்றமைக்கான காரணங்கள்

இந்திய நாட்டில் ஊழலானது பல காரணங்களின் அடிப்படையில் இடம் பெறுகின்றது. அந்த வகையில் அதிக வரிகள் மற்றும் அதிகாரத்துவ கட்டுப்பாடு போன்ற காரணங்களால் ஊழலானது அதிகரித்து காணப்படுகின்றது.

அதிக வரி காணப்படுவதன் காரணமாக மக்கள் சில சமயங்களில் ஊழல் வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்கின்றனர். மேலும் சிக்கலான வரிகள், வெளிப்படையான சட்டம் காணப்படாமை, ஊழல் வாதிகளுக்கெதிரான அபராதம் இல்லாமை என பல்வேறுபட்ட காரணங்களால் இந்தியாவில் ஊழலானது அதிகரித்து காணப்படுகின்றது எனலாம்.

இந்தியாவும் ஊழலுக்கெதிரான சட்டங்களும்

இந்தியாவில் ஊழலுக்கெதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படுவதோடு மாத்திரம் நின்று விடாமல் அதனை நடைமுறைப்படுத்துவதினூடாகவும் ஊழலில்லாத இந்திய தேசத்தை எம்மால் உருவாக்கி கொள்ள முடியும்.

அந்த வகையில் இந்தியாவில் 1947ல் ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதோடு மாத்திரமன்றி பல்வேறு தண்டனைகள் மற்றும் சட்டங்கள் ஊழலுக்கெதிராக கொண்டு வரப்பட்டது.

அவ்வாறு காணப்படினும் ஊழலானது இடம் பெற்று கொண்டேதான் இருக்கின்றது. எனவேதான் லஞ்சம் கொடுப்பவருக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படுவது போன்று லஞ்சம் வாங்குபவர்களுக்கு எதிராகவும் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

முடிவுரை

இந்திய நாடானது பல்வேறு அபிவிருத்தியை நோக்கி நகரும் ஓர் நாடாகவே திகழ்கின்றது. இத்தகைய சூழலில் ஊழலினை ஒழித்து ஒரு வளமான நாட்டை உருவாக்குவது ஒவ்வோர் இந்தியனதும் கடமை என்றுணர்ந்து செயற்படுவதன் மூலமே ஊழலில்லா இந்தியாவை உருவாக்க முடியும்.

You May Also Like:

ஊழலற்ற இந்தியா கட்டுரை

2047 எனது பார்வையில் இந்தியா கட்டுரை