மகாத்மா காந்தி பேச்சு போட்டி கட்டுரை

mahatma gandhi speech in tamil

இந்த பதிவில் இந்தியாவின் தேச பிதா என்று வர்ணிக்கப்படும் “மகாத்மா காந்தி பேச்சு போட்டி கட்டுரை” பதிவை காணலாம்.

மகாத்மா காந்தி பேச்சு போட்டி கட்டுரை

சுதந்திர இந்தியாவின் தேச பிதா என்று வர்ணிக்கப்படும் மகாத்மா காந்தி உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராவார். பிரித்தானியர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்திய தேசத்தை சுதந்திரமடைய செய்ததில் இவரின் பங்கு அளப்பெரியதாகும்.

இவரது முழுப்பெயர் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி ஆகும். இவர் 1869 ஆம் ஆண்டு ஆக்டோபர் 2 ம் திகதி குஜராத் மாநிலம் போர்பந்தர் எனும் இடத்தில் பிறந்தார். இவரின் தாய்மொழி குஜராத்தி ஆகும்.

இவர் தனது 13 ஆவது வயதில் கஸ்தூரி பாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிறுவயதில் காந்தி பார்த்த அரிச்சந்திரா நாடகம் அவர் மனிதில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவர் தனது 16 ஆவது வயதில் தந்தையை இழந்தார். காந்தி கஸ்தூரி பாய் தம்பதியினருக்கு 4 ஆண் குழந்தைகள் பிறந்தன. தனது குடும்ப வாழ்வோடு நின்று விடாது. சமூக பற்று உடையவராகவும் விளங்கினார்.

சட்டம் பயின்ற இவர் தனது உயர் கல்விக்காக இங்கிலாந்து சென்று திரும்பினார். அந்த காலகட்டத்தில் தான் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். ஆங்கிலேயர்கள் அடிமைகள் போல இந்திய மக்களை நடாத்தப்படவதனை கண்டு அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென்று முடிவெடுத்தார்.

ஆயுத வழி போராட்டங்கள் எதுவும் கை கொடுக்காது என நம்பிய இவர் மக்களை அகிம்சை எனும் அமைதி வழி போராட்டத்துக்காக ஒன்று திரட்டினார். அகிம்சை என்ற போராட்ட வழியில் நாடெங்கிலும் சென்று மக்களுக்கு பிரச்சாரம் செய்தார்.

இவர் துவங்கிய அமைப்பான அகில இந்திய காங்கிரஸ் இந்தியாவில் அதிக பிரபல்யம் அடைய துவங்கியது.

இந்திய மக்களிடையே ஒற்றுமையினையும் தேசப்பற்றினை விதைத்து இந்தியர்களை ஒன்றுபடுத்தினார். ஒரு மிகச்சிறந்த ஆளுமை உடைய தலைவராக விளங்கி பல போராட்டங்களை முன்னெடுத்தார்.

இவர் ஆங்கில அரசுக்கு எதிராக நடாத்திய உப்பு சத்தியாக்கிரகம் பெரும் புகழ் பெற்றது. இந்தியாவில் மிக நீண்ட நடை பயணமாக கருதப்படும் இது ஆங்கில அரசு உப்புக்கு விதித்த வரியை எதிர்த்து நடாத்தப்பட்டது.

இந்த போராட்டத்தினால் இந்தியாவில் உப்புக்கான வரி நீக்கப்பட்டது. இவ்வாறு காந்தியடிகளின் சிறந்த போராட்டங்கள் கைகொடுக்கவே 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து கொள்கிறது.

இன்று வரைக்கும் காந்தி அவர்கள் இந்திய மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவரை கௌரவிக்கும் விதமாக இந்தியாவின் நாணய தாள்களில் அவரது உருவம் பொறிக்கப்பட்டிருக்கின்றது.

இந்திய அரச அலுவலகங்களில் இவருடைய புகைப்படம் நிச்சயமாக இருக்கும். இவர் இந்திய மக்களுக்கு கற்று கொடுத்தவை ஏராளம். உண்மை, நேர்மை, எளிமை, விடாமுயற்சி, தேசப்பற்று, கருணை போன்ற பண்புகளை நாம் அவரிடம் இருந்து கற்று கொள்ள முடியும்.

இவரது புகழ் வெறுமனவே இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் எங்கும் பரந்தது. இவரை நினைவு கூரும் முகமாக இந்தியாவில் காந்தி ஜெயந்தி இவரது பிறந்த நாளான ஆக்டோபர் 02 ம் திகதி சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இவ்வாறான தேச தலைவர்களது தியாகம் எளிதில் மறக்க முடியாதவையாகும். இவர்கள் காட்டி சென்ற வழியில் நாமும் பயணித்து எமது தேசத்தினை பெருமையடைய செய்ய வேண்டும்.

நன்றி.

You May Also Like:

அப்துல் கலாம் பற்றி பேச்சு போட்டி கட்டுரை