கால்நடை வளர்ப்பு கட்டுரை

kalnadai valarpu tamil katturai

இந்த பதிவில் “கால்நடை வளர்ப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானத்தை எடுத்துக்கொள்வதே பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.

கால்நடை வளர்ப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கால்நடை வளர்ப்பின் நோக்கங்கள்
  3. கால்நடை வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள்
  4. கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்
  5. இந்தியாவும் கால்நடை வளர்ப்பும்
  6. முடிவுரை

முன்னுரை

கால்நடை வளர்ப்பானது விவசாய குடும்பத்துடன் பல ஆண்டு காலமாக ஒன்றிணைந்து காணப்படுகின்றது. மனித சமூகம் வேட்டை, உணவு திரட்டலை வாழ்க்கை முறையாகக் கொண்டிருந்த நிலையிலிருந்து வேளாண்மை நிலைக்கு மாறிய காலத்திலிருந்து கால்நடை வளர்ப்பு இடம்பெற்று வருகிறது.

உலகெங்கும் கால்நடை பொருளாதாரம் தான் பிரதான பொருளாதாரமாக விளங்கி வந்திருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக இருந்து இயக்கிக் கொண்டிருந்ததும் கால் நடை வளர்ப்புதான்.

கால்நடைவளர்ப்பால் நாட்டில் இன்றும் பல குடும்பங்கள் தமது வாழ்வை வளப்படுத்தி வருகின்றன. கால்நடை வளர்ப்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கால்நடை வளர்ப்பின் நோக்கங்கள்

கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானத்தை எடுத்துக்கொள்வதே பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.

இவை தவிர இறைச்சி, பால் பொருட்கள், முட்டை, கால்நடைகளின் முடி, கால்நடைக் கழிவுகளால் கிடைக்கும் உரம், மற்றும் வண்டி இழுக்க சுமை தூக்க போன்ற பயன்களை பெற்றுக் கொள்வதற்காகவும் வளர்க்கப்படுகின்றது. கால்நடைகளின் மூலம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வளர்க்கப்படுகின்றது.

கால்நடை வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள்

கால்நடை வளர்ப்பால் உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. குறிப்பாக பால், இறைச்சி, முட்டை போன்ற பல உணவுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றது. கால்நடை வளர்ப்பவர்களுக்கு வருமானத்தை அதிகரித்து பொருளாதாரத்தை ஈட்டித் தருகின்றது.

கால்நடை மனிதத் தேவைக்கான புரதங்களை மட்டுமன்றி தாவர உற்பத்திக்கான பசளைகளையும் வழங்குகின்றது. மனிதனுக்கு கால்நடைகளால் எரிபொருள் மற்றும் இழுவை சக்தி போன்றவை கிடைக்கும்.

நிறைவான மனநிலையையும், பொழுது போக்கையும் பூர்த்தி செய்வதுடன் சூழலையும் சுத்தமாகப் பேண உதவுகின்றது.

கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்

கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு கால்நடைகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவுகளை வழங்க வேண்டும், கால்நடைகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சை, தடுப்பூசிகள் போன்றவற்றை உரிய காலத்துக்குள் செலுத்த வேண்டும்.

கால்நடைகளுக்கு உரிய இருப்பிடங்களை தூய்மையானதாகவும், கால்நடைகளுக்கு ஏற்ற வகையிலும் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

இந்தியாவும் கால்நடை வளர்ப்பும்

இந்தியாவில் பல தசாப்த காலங்களாக விவசாய குடும்பங்களுடன் கால்நடை வளர்ப்பும் ஒன்றித்து காணப்படுகின்றது. இந்தியப் பொருளாதாரத்தில் கால்நடைப் பொருளாதாரத்தின் பங்கு கணிசமாக இருக்கின்றது.

நாட்டு மக்கள் தொகையில் 60 விழுக்காடு மக்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பது கால்நடைகள் வளர்ப்பும், கால்நடை சார்ந்த தொழில்களுமே ஆகும்.

இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்கு 9 விழுக்காடு இருந்து வருகின்றது எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முடிவுரை

பழங்காலத்தில் கால்நடை வளர்ப்பு வேளாண்மையின் துணைத் தொழிலாகவே இருந்துவந்துள்ளது. ஆனால் இன்று பெரும்பாலும் கால்நடை வளர்ப்பு வியாபாரத்துடன் கூடிய தொழிலாக மாறியுள்ளது.

மக்களின் தேவையும், தொகையும் அதிகரிக்கும் போது விலங்கு உற்பத்திகளின் பாவனையும் தேவையும் அதிகரித்த வண்ணமே இருக்கும்.

மனிதகுல வாழ்க்கையின் ஆதாரமே கால்நடைகள் என்றால் மிகையாகாது. காரணம் கால்நடைகள் இல்லையேல் விவசாயம் இல்லை, உணவு இல்லை என்பதேயாகும். எனவே கால்நடை வளர்ப்பை அரசு ஊக்கிவிக்க வேண்டும்.

You May Also Like :
சுற்றுச்சூழலை பாதுகாப்போம் கட்டுரை
விலங்குகளின் பயன்கள் கட்டுரை