சித்திரை புத்தாண்டு கட்டுரை

tamil puthandu katturai in tamil

இந்த பதிவில் “சித்திரை புத்தாண்டு கட்டுரை” பதிவை காணலாம்.

இந்தியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் இந்த சித்திரைப் புத்தாண்டை விமர்சையாக கொண்டாடி வருவது வழக்கமாகும்.

சித்திரை புத்தாண்டு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சித்திரைப் புத்தாண்டு வரலாறு
  3. சித்திரையின் மரபுகள்
  4. சித்திரை புத்தாண்டின் சிறப்புகள்
  5. சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம்
  6. முடிவுரை

முன்னுரை

தமிழர்கள் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்களாவர். “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்ற பெருமை குடி தமிழ் குடியாகும். ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் இந்த சித்திரைப் புத்தாண்டை விமர்சையாக கொண்டாடி வருவது வழக்கமாகும். ஆரம்ப காலங்களில் இருந்தே வானியல்⸴ ஜோதிடம் போன்றவற்றில் சிறந்து விளங்கியதால் தமிழ் ஆண்டு கால ரீதியாக சிறப்பாகக் காணப்படுகின்றது.

அதாவது சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் வருடம் மீன ராசியில் பிரவேசிக்கும் போது முடிவடைகின்றது. இதனடிப்படையில் பஞ்சாங்கங்களில் வாயிலாக தமிழ் புத்தாண்டு கணிக்கப்படுகின்றது. சித்திரை புத்தாண்டு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சித்திரை புத்தாண்டு வரலாறு

தமிழர்களின் வாழ்வியலோடு இயற்கையும் இரண்டறக் கலந்துள்ளது. இதனால் தமிழர்கள் பண்டிகைகளை கால அடிப்படையில் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தமிழ் நாட்காட்டியில் ராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதனால் 12 ராசிகளில் முதல் ராசியான மகர ராசியில் சூரியன் நுழையும் சித்திரை முதல் மாதமாகக் கருதப்படுகிறது.

சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் வருடம் முதல் ராசி மேடம் என்ற குறிப்பு காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் அகத்தியர் பன்னீராயிரம்⸴ பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்ப விதி முதலான நூல்களிலும் சித்திரை முதல் மாதம் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சித்திரையின் மரபுகள்

சித்திரை புத்தாண்டு பலவிதமான சம்பிரதாயங்களை கொண்டு காணப்படுகின்றது. புத்தாண்டு ஆரம்பிப்பதற்கு முதல் நாள் வீடு வாசலை சுத்தம் செய்து அலங்கரிப்பர்.

மா⸴ பலா⸴ வாழை முதலிய முக்கனிகளையும் வெற்றிலை⸴ பாக்கு⸴ நகைகள் முதலிய மங்களகரப் பொருட்களையும் வைத்த தட்டை வழிபாட்டு அறையில் வைத்து அதனை புத்தாண்டு அன்று காண்பது புனிதமாகக் கருதப்படுகின்ற மரபு உண்டு.

காலையில் எழுந்து நீராடி புத்தாடை அணிந்து ஆலயம் சென்று வருவர். இனிப்புப் பண்டங்களை பரிமாறிக் கொள்வர். பொங்கல் இடுதல்⸴ கைவிசேஷம் பெறுதல்⸴ சுபநேரத்தில் புதிய தொழில்களை ஆரம்பித்தல்⸴ பெரியோரிடம் ஆசி பெறுதல் முதலானவை சிறப்பு நாளில் மேற்கொள்வர்.

வாழ்க்கையில் கசப்பும் இனிப்பும் கலந்து இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூ பச்சடி⸴ மாங்காய்ப் பச்சடி முதலானவற்றை உண்பது மரபாகக் காணப்படுகின்றது.

சித்திரை புத்தாண்டின் சிறப்புகள்

தமிழர்களின் பண்டிகை என்றாலே சிறப்புகள் நிறைந்தவையாகும். எனினும் சித்திரை புத்தாண்டு தனித்துவமானது ஆகும். சித்திரை மாதத்தில் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் இம்மாதம் சித்திரை என அழைக்கப்பட்டது.

மேலும் சித்திரை வருடப் பிறப்பில் கைவிசேடம் என்பது மறக்க முடியாத விடயமாக காணப்படுகின்றது.

பெரியவர் அல்லது குடும்பத் தலைவரிடம் வெற்றிலையில் பணம் வைத்து அதன் மேல் நவதானியம்⸴ பாக்கு போன்றவற்றை வைத்து இளையவர்களுக்கு வழங்குவார்கள். அவர்களிடமிருந்து கைவசம் வாங்கினால் அந்த வருடம் முழுவதும் பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும் என்பது மரபாகும்.

சித்திரை புத்தாண்டுக் கொண்டாட்டம்

சித்திரை முதல் நாளில் வீட்டை சுத்தம் செய்து நுழைவாயில் படிக்கும் மஞ்சள் குங்குமம் இட்டு மாவிலைத் தோரணம் கட்டி மங்கலம் சேர்ப்பர். மருத்து நீர் வைத்துக் குளித்து தெய்வ வேண்டல்களையும் வருடப்பிறப்பு அன்று மேற்கொள்வர்.

புத்தாண்டு அன்று புது ஆடைகளை அணிவித்து கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் பங்கு பெற்றுவார்கள்.

சித்திரை புத்தாண்டு அன்று பானம்⸴ நீர்⸴ மோர்⸴ பருப்புவடை போன்றவற்றோடு வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பாயாசம் செய்து உறவினர்களுடன் உண்டு மகிழ்வர்.

முடிவுரை

இந்த சித்திரைப் புத்தாண்டில் ஐக்கியம்⸴ நல்லிணக்கம்⸴ நல்லுறவு⸴ இறைவழிபாடு⸴ புரிந்துணர்வு⸴ விருந்தோம்பல் போன்றவற்றை அறிந்து அதனை எம் வாழ்நாளில் கடைபிடித்து உயர்வோமாக.

You May Also Like:
சமுதாய வளர்ச்சி கட்டுரை
உழைப்பே உயர்வு கட்டுரை