புனித தேவசகாயம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

theva sagayam pillai history in tamil

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு இந்துவாகப் பிறந்து 18ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி கிறிஸ்தவ மத வளர்ச்சிக்கு உதவினார்.

85 வயதான “போப் பிரான்சிஸ்”, வாடிகனில் உள்ள “செயின்ட் பீட்டர்ஸ்” தேவாலாயத்தில் நடைபெற்ற புனிதர் பட்டமளிப்பு விழாவில் தேவசகாயம் அவர்களுக்கு “புனிதர்” பட்டம் வழங்கப்பட்ட முதல் சாமானிய இந்தியராவார்.

புனித தேவசகாயம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

பிறப்புஏப்ரல் 23, 1712
இயற்பெயர்நீலகண்ட பிள்ளை
பிறந்த இடம்நத்தாலம், கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர்
தந்தைவாசுதேவன் நம்பூதிரி
தாய்தேவகி அம்மை
மனைவிபார்கவி அம்பாள்
இறப்பு14 ஜனவரி 1752
(அகவை 39)

ஆரம்ப வாழ்க்கை

நாயர் குலத்தை சேர்ந்த நீலகண்டன் சிறுவயதிலேயே சமஸ்கிருதம், கலை ஆகியவற்றைப் பயின்றார். வயது வந்ததும் வில்வித்தை, மர்மக் கலைகள், போரிற்கான ஆயுதங்களை உபயோகிக்கும் முறை என்பவற்றை கற்று தேர்ச்சி பெற்று காணப்பட்டார்.

அதன் பின்னர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையின் பத்மநாமபுரக் கோட்டையில் கருவூல அதிகாரியாக பணிபுரிந்தார்.

இவருக்கும் பார்வதி அம்பாளுக்கும் திருமணம் நடைபெற்றது. சிறிது காலத்தின் பின் இவரது சொத்துக்கள் பலவற்றை இழந்து பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார்.

கிறிஸ்தவ மத மாற்றம்

1741இல் குளச்சல் துறைமுகத்தை கைப்பற்ற வந்த, டச்சுப் படைகளால் மார்த்தாண்ட வர்மாவின் படைகள் தோற்கடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது.

டச்சு கடற்படை தலைவரான கத்தோலிக்க மதத்தை சார்ந்த பெலடிக் டிலனாய் மார்த்தாண்ட வர்மாவின் படையின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதன் விளைவாக டிலனாயுடன் நீலகண்ட பிள்ளை நெருங்கும் வாய்ப்பு கிட்டியது. இதனால் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.

ஒருநாள் நீலகண்ட பிள்ளை தமது பொருளாதார நெருக்கடியிணை எண்ணி மிகுந்த மனவருத்தத்தில் இருப்பதைக் கண்ட டிலனாய் அதற்கான காரணத்தை வினவியபோது, நீலகண்டன் தமக்கு சொந்தமான கால்நடைகள் இறந்து போவதும், அவர்களுடைய பயிர் நிலங்கள் கருகிப் போவது தொடர்ந்து இடம்பெற்று பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டுள்ளதை கூறினார்.

அப்போது டிலனாய் திருவிவிலியத்தில் உள்ள ஜோவின் கதையைக் கூறி கிறிஸ்தவ சமயத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவை பற்றி கேட்டு அறிந்து கொண்ட நீலகண்ட பிள்ளை, கிறிஸ்தவ சமயத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்குத் தந்தையாக பணிபுரிந்த “யோவான் பக்கிஸ்தாபுட்டானி” என்பவரால் திருமுழுக்கு பெற்றார்.

பின் “லாசர்” என பெயரை மாற்றிக் கொண்டார். பின்னர், “லாசர்” என்பதற்கு இணையான “தேவசகாயம்” எனும் பெயர் சூட்டப்பட்டது.

கிறிஸ்தவ பணிகள்

கிறிஸ்தவராக மாறிய பின்னர் பலருக்கு கிறிஸ்தவ போதனைகளை கூறி, அவர்களையும் கிறிஸ்தவ சமயத்திற்கு மதமாற்றினார். இவரது மனைவியையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார்.

தினமும் தேவாலயம் சென்றார் அத்துடன் திருப்பலிகளிலும் தவறாது கலந்து கொண்டார். அவர் சென்றுவரும் வழியில் கஷ்டப்படும் மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தார்.

பல ஊர்கள் தோறும் சென்று கிறித்தவ மத பிரச்சாரங்கள் செய்தார். பல மக்களை கிறிஸ்தவராக மாற்றினார். சாதி பாகுபாடின்றி அனைவரும் சமம் எனவும் கூறுகிறார்.

நாயர்குல மதத்தவர்களின் எதிர்ப்பு

தேவசகாயம் பிள்ளை கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதால் அவர் பணியாற்றி வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு அவரின் பணிகள் பறிக்கப்பட்டது.

புரோகிதர்கள் அவரது இல்லம் சென்று அவரை மதமாற்றத்தில் இருந்து வெளிவர செய்ய பல அறிவுரைகள் கூறியும் தேவசகாயம் கிறிஸ்தவ மதத்தில் இருந்து மாற்றம் அடைய இயலாது என உறுதியாக கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த புரோகிதர்கள், தேவசகாயம் அரசனையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி விடுவார் எனவும் அச்சம் கொண்டு, அரசனுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார் என பொய்க் குற்றச்சாட்டுகள் தேவசகாயம் மேல் கூறினார்கள்.

இதை தொடர்ந்து தேவசகாயம் பிள்ளை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தேவசகாயம் பிள்ளை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட போதிலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் இறை பணியை மட்டுமே முன்னிலைப்படுத்தினார்.

இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடி மலை பகுதியில் தேவசகாயம் பிள்ளை சிறை வைக்கப்பட்டு துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.

புனிதர் பட்டம் வழங்கப்பட்டமை

கிறிஸ்தவ மத நம்பிக்கைக்காக தனது உயிரைத் தியாகம் செய்ததால், 2004 ஆம் ஆண்டில், கோட்டார் மறைமாவட்டமும், தமிழ்நாடு பிஷப்ஸ் கவுன்சில் மற்றும் இந்திய கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டும் இணைந்து தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்க பரிந்துரைத்தது.

அவர் பிறந்து 300 ஆண்டுகளுக்குப் பிறகு 2012 இல் கோட்டார் மறை மாவட்டத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டார். 2020-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி போப் ஆண்டவரால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டத்தை வழங்கினார்.

இந்தியாவில் இல்லற வாழ்வில் இருந்த ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது இதுவே முதன்முறையாக காணப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டின் முதல் புனிதர் என்ற பெருமையையும் தேவசகாயம் பெற்றுள்ளார்.

You May Also Like:
தில்லையாடி வள்ளியம்மை வரலாறு
கண்ணப்ப நாயனார் வாழ்க்கை வரலாறு