சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேச்சு போட்டி

sutru sulal pathukappu speech in tamil

இன்று என் உரையை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் இங்கு கூடி வந்துள்ள பெரியவர்களே தாய்மார்களே தந்தைமார்களே என் தோழர்களே தோழிகளே அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள். இன்று உங்கள் முன் பேச வந்துள்ள விடயம் நம்மை பாதுகாக்கும் நம் சூழலை நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது என்பதை வலியுறுத்தவே வந்துள்ளேன்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நமக்காக நம்மை பாதுகாக்கும் சூழலை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பது ஆகும். அதாவது பஞ்சபூதம் என்று சொல்லப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்பவற்றை மாசு அடையாமல் சேதம் அடையாமல் பாதுகாப்பாக வைத்து இருப்பது ஆகும்.

நம் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு ஆணிவேராக இருந்தவை சூழல் ஆகும். காடுகள், மலைகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவை நம் சூழல்களில் அடங்குகின்றன. அவற்றை நம் வாழ்க்கையின் பொன்னானவையாகவும் கடவுள் தந்த பரிசுகளாகவும் பாதுகாப்பது நம் கடமையில் ஒன்றாகும்.

நாம் யாவரும் சூழலை நேசிக்க வேண்டும் எனவும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனவும் பல கூற்றுகளும் பல அறிவுரைகளும் நமக்காக நம் முன்னோர்களிடம் இருந்து கூறப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தினம்

சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஜூன் 5ஆம் திகதி அன்று ஐக்கிய நாடுகள் சபையால் உலக சுற்றுச்சூழல் தினம் இடம்பெறுகின்றது. இதனை அனைத்து நாடுகளும் ஒவ்வொரு முறைகளில் கொண்டாடுவார்கள். முக்கியமாக சூழல் பாதுகாப்பு தொடர்பில் பாடசாலை மாணவர்களையே அதிகம் ஈடுபாட்டுடன் செய்வதற்கு தூண்டப்படுகின்றனர்.

இதன் காரணம் சூழல் தொடர்பில் எதிர்கால சந்ததியினரிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர்களின் நாட்டம் சமூகத்தின் முன்னேற்றமாக இருப்பதற்கும் ஆகும். அத்துடன் பாடசாலை மாணவர்களால் சூழல் தொடர்பான தெரு நிகழ்ச்சிகளும் சமூகத்திற்கு கொண்டு செல்கின்றார்கள். அது மட்டும் அல்லாது மரங்கள், செடிகள் என பலவற்றை நாட்டி சூழலை கௌரவிப்பார்கள்.

அத்துடன் பாடசாலை நிகழ்ச்சிகளும் அலுவலகங்களில் சூழல் தொடர்பான செயற்பாடுகளும் நடத்துவார்கள். இவ்வாறு பல செயற்பாடுகளை உலக நாடுகள் எங்கும் நடத்தப்படுகின்றது.

அத்துடன் அரசாங்கமும் தங்கள் சார்பில் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வையும் சில புதிய சட்டதிட்டங்களையும் நடைமுறைக்கு கொண்டு வருவார்கள். இவ்வாறு சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடப்படுகின்றனர்.

சுற்றுச்சூழல் எவ்வாறு பாதுகாப்பது அதனால் கிடைக்கும் முக்கியத்துவமும்

நாம் வாழும் இவ் அழகிய உலகத்தில் பச்சை பசேல் என்று புல்வெளிகளும் உயர்ந்து உள்ள காடுகளும் மிருதுவான தென்றல் காற்றுக்களும் பறவைகள் விலங்குகள் என எம் போன்ற மனிதர்களும் பெயர் சொல்லா உயிரினங்களும் வாழ்ந்து கொண்டு தான் உள்ளன.

சற்று நினைத்து பாருங்கள் நம் வாழ்க்கையே ஓர் அற்புதம் தான் அவற்றில் நமக்கு இறைவன் தந்த இயற்கையும் எண்ணிலடங்காத அதிசயம்தான். அத்தகைய அதிசயத்தை பாதுகாப்பது நம் கடமை என்பதை ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும் உணர வேண்டும்.

நான் ஆரம்பத்தில் கூறியது போல் பஞ்சபூதங்களை பாதுகாக்க முதலில் பிளாஸ்ரிக் பாவனையை இயன்ற அளவில் குறைப்பதே சால சிறந்தது. காரணம் சூழலின் மாசுக்கு அனைத்து விதத்திலும் பிளாஸ்ரிக் பாவனை பரந்து உள்ளது.

உதாரணமாக பஞ்சபூதங்கள் அனைத்தும் சேதமடையும் விதத்தை விளக்குகின்றேன். நிலத்தில் உக்கலடையாத பிளாஸ்ரிக் பொருட்களை புதைப்பதால் காலங்கள் படிபடியாக மாறும் பொழுது நிலத்திற்கு அடியில் புதைந்து காணப்படும் அதனால் மரங்கள், விவசாய பயிர்களுக்கு தேவையான நிலத்தின் வளங்கள் குறைவாகவே காணப்படும். இதனால் விவசாயம் மட்டுமல்லாது உலகத்தின் செழிப்பு தன்மையும் குன்றும்.

நீர், கடலில் அல்லது ஆறுகள், அருவிகள் என வீசுவதால் கடல் உயிரினங்களின் வாழ்வாதாரம் தடைப்படும். சுனாமி, வெள்ளம் போன்ற பேரழிவுகளும் இடம்பெறும்.

காற்று பிளாஸ்ரிக் பொருட்களை எரிப்பதனால் சூழல் மாசடைந்து சுவாசிப்பதற்கு சுத்தமான காற்று கிடைக்க சிரமத்திற்குள்ளாவோம். சுவாசம் தொடர்பான இன்னும் பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

ஆகாயம் காற்று மாசடைவது போல் ஆகாய பாதுகாப்பிற்கு உள்ள வளிமண்டல படலங்கலும் இதன் மூலம் சேதமடைகின்றன. இவற்றில் ஓசோன் படை சிதைவு நல்லதோர் உதாரணமாகும்.

நெருப்பு அதாவது புவி வெப்பமடைதலை இது சுட்டிக்காட்டுகின்றது. பிளாஸ்ரிக் பாவனையில் மரங்கள் செழிப்பின்றி தானாக அழிவடைந்து புவி வெப்பமடைதல் ஏற்படும். இதனால் எரிமலை வெடிப்பு காடுகள் எரிதல், உயிரினங்கள் அழிவடைதல் என பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

ஆகவே பிளாஸ்ரிக் பாவனையை தடுப்பதற்கு வழியுறுத்த காரணமும் இவற்றால் தான் என விஞ்ஞானிகள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் மட்டுமல்லாது சூழல் பாதுகாப்பு புதிய தொழிற்சாலைகளின் வருகை, புதிய தொழிநுட்பங்களின் கண்டுபிடிப்பு, காடுகளை அழித்து, மண்களை அகழ்ந்து பணமாக்குபவர்களின் நோக்கம் என இன்னும் பலவற்றால் சூழல் மாசடைகின்றது.

எனவே இவற்றில் இருந்து சூழலை பாதுகாக்க உலக நாடுகள் சார்பாகவும் பல சட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அத்துடன் நாமும் எம் தரப்பில் இருந்து வீட்டுத்தோட்டம் அமைத்தல், நிழல் தரு மரங்களை நடுதல், கூடிய அளவில் பிளாஸ்ரிக் பாவனையை குறைத்தல் என நம் கைகளிலும் சில கடைமைகளை சரிவர செயற்படுத்துவதன் மூலம் நம் சுற்றுசூழலை பாதுகாக்க முடியும்.

மரங்கள் வளராப்போம் நாளை உலகை காப்போம் என கூறி என் உரையை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.

You May Also Like:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களின் பங்கு கட்டுரை