காதியும் காந்தியும் கட்டுரை

kathaiyum gandhiyum katturai in tamil

விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தையாக திகழ்பவரே மகாத்மா காந்தி ஆவார். இவர் இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடிய மாமனிதராகவும், அகிம்சை வழியை கடைபிடித்தவராகவும் திகழ்கின்றார். இவரது வாழ்க்கையோடு நெருங்கியதோர் விடயமாக காதியானது காணப்படுகின்றது.

காதியும் காந்தியும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • காதி என்பது
  • காதி இயக்கத்தை தோற்றுவித்த காந்தி
  • காதியின் சிறப்பு
  • சுதந்திரப் போராட்டத்தில் காதியும் காந்தியும்
  • முடிவுரை

முன்னுரை

காதிக்கும் காந்திக்கும் இடையிலான தொடர்பானது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஏற்பட்டதாகும். காந்தி உருவாக்கிய காதி தொழிலானது காந்தியின் மூலமாக நடைமுறைக்கு வந்ததொரு தொழில் நுட்பமாகும். இக்காதி முறைமையானது இன்றும் காந்தியை நினைவுபடுத்துவதாகவே காணப்படுகிறது.

காதி என்பது

காதி என்பது கையால் நூற்கப்பட்ட நூலால் செய்யப்பட்ட ஓர் துணியாகும். இது பருத்தி அல்லது பட்டினால் கூட செய்யப்படலாம். இது ஆந்திராவில் சிறப்பு வாய்ந்ததொன்றாக திகழ்ந்து வருகின்றது.

இது பாரம்பரியமாக கையால் நெய்யப்பட்ட மற்றும் கையால் சுழற்றப்பட்ட காதியானது ஒரு குழித் தறியில் நெய்யப்படுகின்றது. இந்த காதி துணியானது குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் சூடாகவும் எம்மை வைத்திருக்க உதவுகின்றது.

காதி இயக்கத்தை தோற்றுவித்த காந்திஜி

காதி என்பது கையால் நெய்யப்பட்ட ஒரு துணியாகும். இது சாதாரண துணியை போல் அல்லாமல் இந்திய சுதந்திர வரலாற்றில் சிறப்பு மிக்கதொன்றாக காதி காணப்படுகின்றது.

அந்த வகையில் 1918ம் ஆண்டு மகாத்மா காந்தியே காதி துணியை சுதேச இயக்கத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தனார். இதனை காந்தி ஒற்றுமையினை நோக்கமாக கொண்டு பயன்படுத்தினார்கள். காதி இயக்கத்திற்கு வித்திட்டு இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவரே காந்தி ஆவார்.

காதியின் சிறப்பு

இந்திய தேசத்தின் தந்தையான மகாத்மா காந்தி அவர்களே காதி துணியை ஊக்கப்படுத்தினார். அந்த வகையில் காதியானது பல்வேறு சிறப்புக்களை கொண்டதாகவே திகழ்கின்றது.

காதியானது இந்திய சுதந்திர வீரர்களை நினைவு கூறுவதாக காணப்படுவதோடு தன்னம்பிக்கை, நிலைத்த தன்மை மற்றும் உடல் உழைப்பை ஊக்குவிக்கின்றது. அதேபோன்று சுதந்திரத்தின் சின்னமாகவும் காணப்படுகின்றது.

காதி உற்பத்தியானது சுற்றுச் சூழலை மாசுபடுத்தாது என்பதுடன் மின்சார ஆற்றலை விட மனித ஆற்றலே காதி உற்பத்திக்கு அவசியமானதாகும். மிகக் குறைந்த முதலீட்டின் மூலமாக வளங்களை பயன்படுத்தி சிறந்த முறையில் நெய்யப்படுவதாக காதியானது திகழ்கின்றது.

சுதந்திர போராட்டத்தில் காதியும் காந்தியும்

இந்திய சுதந்திர போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதொன்றாக காதியே காணப்பட்டது. அந்தவகையில் மகாத்மா காந்தி அவர்களால் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்திய தேசத்தின் தொழில்களுக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட ஓர் வழிமுறையாக காதியானது காணப்படுகின்றது.

காதியானது சுதேசி இயக்கத்திற்கு வழிவகுத்ததோடு மட்டுமல்லாமல் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை எமக்கு எடுத்தியம்பக் கூடியதொன்றாகவும் காணப்படுகின்றது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரிய பங்களிப்பினை செய்த ஒன்றாக காதி காணப்படுகின்றது. மேலும் காதி துணியானது தேசிய கொடிகளை தயாரிப்பதில் பிரதான இடத்தினை கொண்டுள்ளது.

காந்தியின் சிறந்த உந்துதலின் காரணமாகவே காதியானது இந்திய சுதந்திர போராட்டத்தை எமக்கு எடுத்தியம்புகின்றது.

முடிவுரை

காந்தி அவர்களின் தியாகமும் பணிவும் இவ்வுலக மக்கள் அனைவரையும் கவர்ந்த ஒன்றாக காணப்படுகின்றது. காந்தி வழிகாட்டிய காதி பண்பாடானது இன்றும் கூட அளப்பரியதாகவே திகழ்கின்றமை சிறப்பிற்குரியதாகும்.

You May Also Like:

காந்தியின் அகிம்சை கட்டுரை

காந்தி காண விரும்பிய இந்தியா கட்டுரை