இந்த பதிவில் மனித வாழ்வில் பின்னிப்பிணைந்துள்ள “எரிபொருள் பயன்பாடு கட்டுரை” பதிவை காணலாம்.
எரிபொருள் தட்டுப்பாட்டில் இருந்து காத்துக்கொள்ள எரிபொருட்களை சிக்கனமாக கடைப்பிடிக்க வேண்டியது இன்றியமையாதாகும்.
எரிபொருள் பயன்பாடு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- எரிபொருள் பயன்பாடு
- எரிபொருள் சிக்கனத்தின் அவசியம்
- எரிபொருள் பாவனையால் எதிர்நோக்கும் சவால்கள்
- மாற்று எரிசக்தி
- முடிவுரை
முன்னுரை
மனித வாழ்க்கையில் எரிபொருள் பயன்பாடானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. மனித வாழ்வோடு எரிபொருள் பயன்பாடு இரண்டறக் கலந்துள்ளமை தவிர்க்க முடியாததாகும்.
உலக எரிபொருள் தேவையில் பெரும்பான்மை பூமியிலிருந்து வெட்டியோ, உறிஞ்சியோ மட்டுமே பெற்றுவருகிறோம்.
அதிகரித்த எரிபொருள் பயன்பாட்டால் எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சினையை உலக நாடுகள் எதிர்கொள்வதுடன் உலக சுற்றுச் சூழலையும் பாதிப்புக்குள்ளாகுகின்றது.
எனினும் எரிபொருள் பாவனை இன்றி மனிதகுலம் இயங்காது என்பது நிதர்சனமான உண்மையாகும். எரிபொருள் பயன்பாடு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
எரிபொருள் பயன்பாடு
காலை எழுந்தது முதல் துயில் கொள்ளச் செய்வது வரை எரிபொருள் பயன்பாடு இன்றி முடிவதில்லை. வீடு முதல் தொழில் துறை வரை அனைத்து இடங்களின் தேவைகளையும் இயக்கும் மற்றும் தீர்மானிக்கும் சக்தியாக எரிபொருள் பயன்பாடு உள்ளது.
வீடுகளில் சமையல் அறையினை மின்சார உபகரணங்களே ஆக்கிரமிக்கின்றன. இன்று அதிநவீன ரயில்களின் பாவனை போக்குவரத்தை எளிமையாகியுள்ளது. மோட்டார் வாகனம் முதல் ஆகாய விமானம் வரை அனைத்திற்கும் எரிபொருள் பயன்பாடு இன்றியமையாததாக உள்ளது.
எரிபொருள் பாவனையால் எதிர்நோக்கும் சவால்கள்
பெற்றோலிய எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களின் பாவனையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பின் விளைவாகப் பல்வேறு விதமான பிரச்சினைகளும் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
அவற்றில் வாகன நெரிசல் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. வளி மாசடைதலும் சுற்றுச்சூழல் பாதிப்பும் பெரிதும் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக சுவாசத் தொகுதி தொடர்பான உபாதைகளுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.
புதைபடிம எரிபொருள் உற்பத்தி உலகில் குறைவடையும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதிகரித்த எரிபொருள் பாவனையால் சுற்றுச் சூழல் அதிகம் மாசடைவினைச் சந்திக்கின்றது.
எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வழிகள்
வாகனத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பழுது நீக்கிப் பராமரிக்க வேண்டும்.
குறுகிய பயணங்களைத் துவிச்சக்கர வண்டி மூலம் மேற்கொள்ளலாம். இதனால் உடல் ஆரோக்கியம் பேணப்படுவதுடன், எரிபொருள் சிக்கனமும் ஏற்படும்.
தனியாகக் காரில் செல்வதைத் தவிர்த்து, அலுவலகம், பள்ளி போன்ற இடங்களுக்கு வீட்டுக்கு அருகில் இருப்பவர்களுடன் வாகனத்தைப் பகிர்ந்துகொள்வது போக்குவரத்து நெரிசலையும் எரிபொருள் செலவையும் குறைக்கும்.
எரிபொருள் சிக்கனத்தின் அவசியம்
இன்று உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் எரிபொருள் தட்டுப்பாடும் ஒன்றாக காணப்படுகின்றது. எனவே எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதில் பொதுமக்கள் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.
நாளுக்கு நாள் பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனால் மக்கள் பாரிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதனை தடுப்பதற்கு எரிபொருள் சிக்கனம் தேவை.
எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்காது விடுமாயின் எதிர்காலத்தில் உலகம் இருளில் மூழ்கிவிடும்.
எதிர்கால எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து அடுத்த தலைமுறையினரை எரிபொருள் தட்டுப்பாட்டில் இருந்து காத்துக்கொள்ள எரிபொருட்களை சிக்கனமாக கடைப்பிடிக்க வேண்டியது இன்றியமையாதாகும்.
மாற்று எரிசக்தி
எதிர்கால எரிபொருள் தேவைக்குத் தீர்வு காண பயோமாஸ் போன்ற மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துவது சிறந்ததாகும்.
பயோமாஸ் போன்ற விவசாய விளைபொருட்கள் மரங்களிலிருந்து கிடைக்கும் கழிவுகள் மூலம் எரிசக்தியை உருவாக்குவதற்கான பல்வேறு வழிமுறைகள் கண்டறியப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
சூரியசக்தி மற்றும் காற்றுச் சக்தியை விட இது முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
முடிவுரை
எரிபொருள் பயன்பாட்டால் மனிதன் அதிகம் நன்மை அடைகின்றான் என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் அதனால் அதிக பாதிப்பினைச் சந்தித்து வருகின்றான் என்பதும் உண்மையே.
இன்று எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் ஒன்று சுற்றுச் சூழல் பாதிப்பாகும். எனவே எரிபொருள் பாவனையை குறைத்துக் கொண்டால் எரிபொருள் தட்டுப்பாட்டிலிருந்தும் சுற்றுப்புறச் சூழல் மாசடைவிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
You May Also Like : |
---|
அறிவியல் வளர்ச்சி கட்டுரை |
சுற்றுச்சூழலை பாதுகாப்போம் கட்டுரை |