இந்த பதிவில் “ஊழலற்ற இந்தியா கட்டுரை” பதிவை காணலாம்.
ஒவ்வொரு இந்தியர்களும் தமது கடமைகளை சரிவர செய்தால் ஊழல் அற்ற புதுமையான இந்தியாவை மாற்றியமைக்க முடியும்.
ஊழலற்ற இந்தியா கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வேற்றுமையில் ஒற்றுமை
- தனிமனித விழிப்புணர்வு
- வளமான இந்தியா
- வெளிப்படை தன்மை
- முடிவுரை
முன்னுரை
இன்றைய இந்தியாவில் எத்தனையோ சிறப்பான விடயங்கள் வளர்ச்சி பெற்றாலும் ஊழல் என்ற ஒற்றை சொல் அந்த அனைத்து விடயங்களையும் பாழாக்கி விடுகின்றது.
ஒவ்வொரு இந்தியர்களும் தமது கடமைகளை சரிவர செய்தால் ஊழல் அற்ற புதுமையான இந்தியாவை மாற்றியமைக்க முடியும். நாட்டில் நடந்து வரும் இந்த வகையான சீரற்ற நிலமைகளை ஒழிக்க வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை
மதங்களாலும், இனங்களாலும், தட்ப வெப்பங்களாலும், மொழிகளாலும் பல வேற்றுமைகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றிலும் ஒற்றுமை பாராட்டும் இந்தியர்கள் உலகுக்கு உதாரணமானவர்கள்.
பொதுவாகவே சில அரசியல் லாபம் தேடும் சிலர் மதங்களால் மக்களை பிரித்தாள முயற்சி செய்கின்றனர் அவ்வகையான சக்திகளை நாம் புறந்தள்ள வேண்டும்.
இந்த வகையான ஒரு ஒற்றுமையான உணர்வு மக்களிடத்தில் ஏற்பட்டால் ஊழல் லஞ்சம் போன்ற வியாதிகளுக்கு முடிவு கட்ட முடியும்.
தனிமனித விழிப்புணர்வு
பொதுவாகவே ஒரு நோயாளியை குணப்படுத்த வேண்டுமானால் வைத்தியர் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும் அவ்வாறே மற்றவர்களை நாம் திருத்த வேண்டுமானால் நாம் முதலில் எம்மை திருத்தி கொள்ள வேண்டும்.
இதனையே காந்தியடிகள் மாற்றம் என்பது உங்களில் இருந்து துவங்க வேண்டும் என்று கூறினார்.
அரச மற்றும் தனியார் துறைகளில் பல்வேறான ஊழல்கள் இடம்பெற்று கொண்டு தான் இருக்கின்றன. இவ்வகையான குற்ற செயல்களை உரிய வகையில் முறைப்பாடு செய்வதோடு நாமும் அந்த குற்ற செயல்களுக்கு உடந்தையாகமல் இருப்பது நன்றாகும்.
வளமான இந்தியா
எமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும் இந்தியாவின் கனவுகளின் நாயகனுமான டாக்டர் ஏ.பி ஜே அப்துல்கலாம் அவர்கள் இந்தியா வல்லராசாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று கூறினார்.
அதுபோல சகல துறைகளிலும் அதிகாரிகள் மற்றும் மக்கள் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி தமது கடமைகளை சரிவர செய்வதோடு நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமத்துவத்துடன் பணியாற்றினால் வளமான இந்தியாவை உருவாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதுவே நமது முன்னோர்களின் கனவாகவும் உள்ளது.
வெளிப்படை தன்மை
ஒளிவு மறைவற்ற அரசாங்கமே ஊழலற்ற அரசாங்கமாகும். எனவே அரசாங்கம் தனது அனைத்து விடயங்களிலும் வெளிப்படை தன்மை உடையதாக இருக்க வேண்டும்.
இந்தியா ஊழல் நாடுகளின் பட்டியலில் 81 வது இடத்தில் உள்ளது. இந்த நிலை மாறவேண்டும் ஊழல் மற்றும் லஞ்சம் போன்றவற்றை ஆற்றுபவர்களுக்கு கடுமையான தண்டணை வழங்கப்பட வேண்டும்.
இதற்கு உடந்தையானவர்களுக்கும் தண்டனை நிறைவேற்றினால் தான் குற்றங்கள் குறைவடைய வாய்ப்புக்கள் உண்டாகும்.
முடிவுரை
உலக நாடுகளின் வரிசையில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத பலம் பொருந்திய நாடாகும்.
இருப்பினும் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பில் இந்தியா வளர்ச்சியடைய சவாலாக இருப்பது ஊழல் நிறைந்த அரசியல் தான் என்றால் மறுப்பதற்கில்லை.
இந்த நிலையினை மாற்றி ஒரு தலை சிறந்த நாடாக இந்தியாவை உருவாக்குவது இன்றைய இளைஞர்களுடைய கைகளில் தான் தங்கியிருக்கின்றது.
You May Also Like : |
---|
விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா |
இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை |