மனித வன உயிரினங்களுக்கு இடையிலான சகவாழ்வு கட்டுரை

மனித வன உயிரினங்களுக்கு இடையிலான சகவாழ்வு

இந்த பதிவில் “மனித வன உயிரினங்களுக்கு இடையிலான சகவாழ்வு கட்டுரை” பதிவை காணலாம்.

நமது முன்னோர்கள் இந்த இயற்கையினை தெய்வமாக கருதினார்கள் இந்த வன விலங்குகளை தமது நண்பர்களாக கருதினார்கள்.

மனித வன உயிரினங்களுக்கு இடையிலான சகவாழ்வு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மனிதன் ஒரு விலங்கு
  • இடைத்தொடர்புகள்
  • வன விலங்குகளின் அவசியம்
  • பாதுகாக்கும் வழி முறைகள்
  • முடிவுரை

முன்னுரை

இந்த பரந்த உலகில் வாழக்கூடிய மனிதர்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்கள் என்று சொல்ல கூடிய பிரதான உயிரினங்களாவன ஒன்றோடு ஒன்று இடைத்தொடர்புள்ள உயிரினங்கள் தான் என்பது உயிரியல் வல்லுனர்களுடைய கருத்தாகும்.

இதற்கமைய தான் உலகின் ஒவ்வொரு இயற்கையின் செயன்முறைகளும் முறையாக இடம்பெற்று வருகின்றன. இதற்கு இணங்க பிற உயிர்களையும் வாழ்வித்து வாழ வேண்டிய வகை பற்றி நாம் இக்கட்டுரையில் நாம் காண்போம்.

மனிதன் ஒரு விலங்கு

விஞ்ஞானிகளின் கருத்து படி மனிதன் ஒரு வகையான விலங்கே ஆவான். மனிதன் குரங்குகளில் இருந்து கூர்ப்படைந்தே இன்றைய நிலையினை அடைந்துள்ளான் என்பதற்கு பலவகையான ஆய்வுகளும் ஆதாரங்களும் உள்ளன.

எனவே மனிதர்கள் எனப்படும் பகுத்தறிய கூடிய விலங்குகளான நாம் எம்மோடு வாழ்கின்ற பிற உயிர்களான வன விலங்குகளையும் அவை வாழ கூடிய இயற்கை சூழலையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

வனவிலங்குகள் நமக்கு பலவகையிலும் நன்மை தரும் நண்பர்கள் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இடைத்தொடர்புகள்

மனிதர்களுடைய வாழ்வில் வன விலங்குகள் தவிர்க்க முடியா ஒரு இடத்தை வகித்து வருகின்றன எனலாம்.

முன்பு ஒரு காலம் மனிதன் வேட்டையாடலையே தனக்கான வாழ்வாதரமாய் கொண்டிருந்தான் விலங்குகளின் இறைச்சி, காய்கனிகள், இலை குழைகள், கிழங்குகள் என்பனவே அவனது உணவாக இருந்தன.

இவற்றை வழங்குவதும் செழித்து வளரும் காடுகளை வளமாக்கி வைப்பதும் இந்த வன விலங்குகளே ஆகும்.

மற்றும் இன்று பல நகரத்தவர்களும் வனவிலங்குகளை பார்த்து மகிழ வனவிலங்கு சரணாலங்களுக்கு செல்வதனை அவதானிக்க முடியும்.

வன விலங்குகளின் அவசியம்

நமது முன்னோர்கள் இந்த இயற்கையினை தெய்வமாக கருதினார்கள் இந்த வன விலங்குகளை தமது நண்பர்களாக கருதினார்கள்.

இந்த பசுமையான காடுகள் பறவைகள் சாப்பிட்டு போட்ட எச்சத்தில் இருந்து முளைத்த விதைகளினால் உருவானவை எனப்படுகிறது.

வன விலங்குகள் தமக்குள்ளே கொண்டுள்ள உணவு வலை தான் இந்த பரந்த காட்டு வளங்களை உருவாக்கியுள்ளது என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவேதான் மனிதர்கள் இந்த வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

பாதுகாக்கும் வழிமுறைகள்

இன்றைய காலத்தில் மனிதனுடைய தொழில்நுட்ப வளர்ச்சியும் அபிவிருத்தி எனும் பெயரில் வனவிலங்குகளும் அவை வாழ கூடிய இயற்கை சூழல்களும் மிகவும் மோசமாக அழிக்கப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடியும்.

இது மனித குலம் தமக்கு தாமே செய்து கொள்ளும் நாச வேலைகளாகும். மனிதர்கள் வனங்களையும் அங்கு வாழ்கின்ற விலங்குகளையும் இடையூறு விளைவிக்காமல் இருப்பதுவே அவற்றை பாதுகாக்கும் வழிமுறையாக இருக்கும்.

இவற்றை மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது சிறந்த வழியாகும்.

முடிவுரை

“தன்னுயிர் போல மன்னுயிரையும் நேசி” என்ற நமது முன்னோர்களின் பொன்னான வாக்கின் படி நாம் எம்மை சார்ந்து வாழ்கின்ற பிற உயிர்களையும் பாதுகாத்து வாழ்வதே மிகச்சிறந்த அறமாகும்.

இவற்றின் மூலமாக இந்த பூமியும் நமது எதிர்காலமும் பாதுகாக்கப்படும் இல்லாவிட்டால் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல பின்னாளில் மனித குலம் பல மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

You May Also Like:
கணித மேதை ராமானுஜன் வாழ்க்கை வரலாறு
அயோத்திதாசர் வாழ்க்கை வரலாறு