விபத்தில்லா பயணம் கட்டுரை

vibathilla payanam katturai in tamil

மனிதர்களது பயணங்கள் வாழ்வின் இறுதி வரை தொடர்ந்து செல்ல வேண்டுமாயின் நாம் சிறந்த முறையில் சாலையில் பயணிக்க வேண்டும். மனிதனானவன் தன்னுடைய பல்வேறு தேவைகளுக்காக பயணம் செய்யக் கூடியவனாகவே காணப்படுகின்றான். இத்தகைய பயணத்தை விபத்தில்லாத சிறந்த பயணமாக மாற்றுவது எம் ஒவ்வொருவரினதும் கைகளிலேயே தான் உள்ளது.

விபத்தில்லா பயணம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சாலை பாதுகாப்பின் அவசியம்
  • விபத்தில்லா பயணமும் உயிர்களின் பாதுகாப்பும்
  • சாலை விதிகள்
  • விபத்திற்கு வழிவகுக்கும் சாலை விதி மீறல்
  • முடிவுரை

முன்னுரை

விபத்துக்கள் மனித வாழ்வோடு நெருங்கியதொன்றாகவே இன்று மாறி வருகின்றது. இத்தகைய விபத்திலிருந்து எம்மை நாம் காத்து கொள்ள வேண்டுமாயின் முறையாக சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்.

எம் வாழ்க்கை பயணமானது சிறப்பாக அமைய வேண்டுமாயின் நாமும் சாலை விதிமுறைகளை பின்பற்றி பயணித்தல் அவசியமானதாகும்.

சாலை பாதுகாப்பின் அவசியம்

இன்று மனிதர்களானவர்கள் தங்களது அலட்சியமான போக்குகள் மற்றும் வேகத்தின் காரணமாக பல்வேறு உயிர்களின் அழிவிற்கு காரணமாகின்றனர். இத்தகைய நிலையிலிருந்து எம்மை காத்துக் கொள்வதற்கு சாலை பாதுகாப்பானது அவசியமானதாகும்.

மேலும் இன்று ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் பல்வேறு விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றன. இத்தகைய நிலையை தவிர்ப்பதற்கான ஒன்றாகவே சாலை பாதுகாப்பு காணப்படுகின்றது.

விபத்தில்லா பயணமும் உயிர்களின் பாதுகாப்பும்

விபத்தில்லா பயணத்தினை மேற்கொள்ளும் விதமாக பல்வேறு சாலை விதிகள் காணப்படுகின்றன. அதே போன்று விபத்துக்களை தடுப்பதற்காக போக்குவரத்து காவல் துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

நாம் விபத்தில்லா பயணத்தினை மேற்கொள்ளவே பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் விளம்பரங்கள் போன்றன சாலை விதிகள் பற்றி எமக்கு தெளிவுபடுத்துகின்றன.

அதேபோன்று ஓட்டுனர் பயிற்சியின் போதும் சாலை விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்படுகின்றது. எம் பயணமானது பிறர் உயிரை கொல்லும் ஓர் பயணமாக அமையாது பிறர் உயிரை காக்கும் பயணமாக அமைகின்ற போதே நாமும் எம் குடும்பத்தினரும் சந்தோசமான வாழ்க்கையை வாழ முடியும்.

சாலை விதிகள்

விபத்தில்லா பயணத்திற்கான அடிப்படையே சாலை விதிகளை பேணுவதாகும். பல்வேறு சாலை விதிகள் விபத்தை தவிர்ப்பதற்காக காணப்படுகின்றன.

அதாவது நடைமேடையை பயன்படுத்தல், வாகனங்களை சரியான இடத்தில் நிறுத்தி வைத்தல், சாலை விளக்குகளை சரியான விதத்தில் புரிந்து கொள்ளல், தலைக் கவசம் அணிந்து வாகனங்களை ஓட்டுதல், பாதசாரி கடவைகள், வேகக் கட்டுப்பாடுகள், பாலங்கள், விலங்குகள் கடக்கும் இடங்கள் என அனைத்தையும் சரிவர பின்பற்றி சாலையில் பயணிக்கும் போதே விபத்தில்லா பயணத்தினை மேற்கொள்ள முடியும்.

இன்று பிரதானமாக மது போதையில் வாகனங்களை செலுத்தி விபத்திற்குள்ளாகின்றனர். மது போதையில் வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.

இவ்வாறு முறையாக சாலை விதிகளை பின்பற்றுவதன் மூலம் எம் உயிரும் பிறர் உயிரும் காப்பாற்றப்படும்.

விபத்திற்கு வழிவகுக்கும் சாலை விதி மீறல்

இன்று சாலை விதிகளை பின்பற்றாது சாலையில் பயணிப்பவர்களே அதிகமாக காணப்படுகின்றனர். இதனாலேயே விபத்துக்களும் அதிகரித்து காணப்படுகிறது.

அந்தவகையில் சன நெரிசலான இடங்களில் வேகமாக வாகனத்தை செலுத்துதல், மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுதல் போன்ற காரணங்களால் இன்று விபத்துக்கள் அதிகமாக இடம் பெறுகின்றன.

சாலை விதி மீறுபவர்களுக்கெதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படுவதோடு நின்று விடாமல் ஒவ்வோர் உயிரும் பெறுமதி மிக்கவையே என்பதனை உணர்ந்து இறுக்கமான சாலை விதி சட்டங்கள் பின்பற்றப்படுவதன் மூலமே விபத்துக்களை தவிர்க்க முடியும்.

முடிவுரை

எமது பயணமானது வாழ்வின் இறுதி பக்கமாக காணப்படாமல் எமது வாழ்க்கையையும் பிறரது வாழ்க்கையையும் மாற்றும் சிறந்ததொரு பயணமாக காணப்படல் வேண்டும். எனவே எம் ஒவ்வொருவருடைய பயணமும் விபத்தில்லா பயணமாக திகழ இன்றே சாலை விதிகளை பேணுவோம்.

You May Also Like:

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை

சாலை விபத்து மற்றும் இறப்புகளை குறைத்தல் கட்டுரை