இந்த பதிவில் அரசனுக்கு அரசன் “ராஜராஜ சோழன் கட்டுரை” பதிவை காணலாம்.
ராஜராஜ சோழன் புகழானது இன்றும் பேசப்பட காரணம் அவரது ஆட்சி திறனும் வீரமும் அவர் தனது நாட்டின் மீதும் கொண்ட ஆழமான பற்றுதலுமே ஆகும்.
ராஜராஜ சோழன் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அறிமுகம்
- ஆரம்பகால வாழ்க்கை
- தஞ்சை பெருங்கோயில்
- சாதனைகள்
- முடிவுரை
முன்னுரை
இன்றுவரை உலகமெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு பேரரசனாக ராஜராஜ சோழன் விளங்குகின்றார். கடல் தாண்டிய தமிழர்களின் ஆதிக்கத்தையும் உலகறிய செய்த ஒரு மாவீரனாக இவர் விளங்குகின்றார்.
சோழர் காலத்தினை தமிழக வரலாற்றின் பொற்காலமாக கூறுவதன் வாயிலாக இவருடைய ஆட்சியில் தமிழும் சைவமும் தளைத்தோங்கியிருப்பதனை பல வரலாற்று சான்றுகள் மூலமாக எம்மால் அறிய முடிகின்றது.
அறிமுகம்
சிற்றரசாக இருந்த சோழநாட்டை ஒரு தலைசிறந்த பேரரசாக மாற்றியமைத்து இந்தியா மட்டுமன்றி இலங்கை, தென்கிழக்காசியா வரைக்கும் தன்னுடைய தலைசிறந்த கப்பல் படையினாலும் போர் தந்திரங்களாலும் ஆதிக்கம் செலுத்திய ஒரு பேரரசன் இவராவார்.
தெளிவான சிந்தனையும் தனது தேசத்தின் மீதும் தனது பிரஜைகள் மீதும் அளவு கடந்த பற்றும் உடையவனாக சோழ நாட்டை சகல வளங்களிலும் சிறந்த நாடாக மாற்றியமையினால் தான் இன்றளவும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு ஆட்சியாளனாக திகழ்கிறார்.
ஆரம்பகால வாழ்க்கை
இவர் கிபி 957 முதல் கிபி 973 வரை சோழநாட்டை ஆண்ட சுந்தரசோழனுக்கும் வானவன்மாதேவியாருக்கும் மகனாக கிபி 585 ஐப்பசி திங்கள் 25ம் நாள் சதய நன்னாளில் பிறந்தவராவார்.
இவருடைய இயற்பெயர் “அருண்மொழிவர்மன்” என்பதாகும் இவர் தனது இளமை பராயத்தில் சிறந்த வீரனாக பல போர்க்களங்கள் சென்று வந்தவர்.
இவரது ஆட்சிகாலத்தில் சோழநாடு – தொண்டைநாடு, பாண்டியநாடு, இமையம் வரையில் பரந்திருந்தது என வரலாறுகள் தெரிவிக்கின்றன.
தஞ்சை பெருங்கோயில்
உலக வரலாற்று ஆய்வாளர்களால் வியந்து பார்க்கப்படும் ஒரு அதிசயமான கட்டடக்கலையின் சான்றாக தஞ்சை பெருவுடையார் கோயிலானது காணப்படுகின்றது.
இது இவருடைய சிவ பக்தியினையும் தமிழ் பற்றினையும் வெளிப்படுத்துகின்றது. இதுவே இவர் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும் படியாக செய்தது.
இன்றளவும் உலகமெங்கும் இருந்து மக்கள் இந்த கோயிலை பார்க்க அலை அலையாக தஞ்சாவூருக்கு செல்வதனை அவதானிக்க முடிகின்றது.
மிகச்சிறந்த கலை படைப்புக்களை உடைய பிரமாண்ட கோயிலாக தஞ்சை பெருங்கோயில் ராஜராஜ சோழனின் பெரும் புகழை பறைசாற்றி நிற்கின்றது.
சாதனைகள்
இவர் கடல்கடந்து பல நாடுகளை வென்றிருந்தார் ஈழத்தை வென்றமையினால் மும்முடி சோழன் என அழைக்கப்பட்டார்.
அது போல கங்கை முதல் கடாரம் வரையுள்ள தேசங்களை வென்றமையினால் கடாரம் கொண்டான் எனவும் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் தனது காலத்தில் பல வெற்றிகரமான போர்களை நடாத்தி வெற்றி பெற்றதோடு மட்டுமன்றி தனது நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான அனைத்து நலன்களையும் சிறப்பாக விவசாயம், கல்வி, உட்கட்டமைப்பு என பல வழிகளிலும் சோழநாட்டை சகலதுறைகளிலும் வளர்ச்சி அடைய செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
முடிவுரை
இந்த மன்னனுடைய புகழானது இன்றும் பேசப்பட காரணம் அவரது ஆட்சி திறமும் வீரமும் அவர் தனது நாட்டின் மீதும் கொண்ட ஆழமான பற்றுதலே ஆகும்.
தமிழக வரலாற்றில் ஒரு பலமான ஆட்சியினை இவர் நடாத்தியதோடு தமிழையும் சைவத்தையும் வளர்க்க இவர் அரும்பாடு பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய தலைமுறையினருக்கு பல முன்னுதாரணமான சிந்தனைகளையும் ஆளுமையினையும் இவருடைய ஆட்சி மற்றும் வாழ்க்கையில் இருந்து பெற்று கொள்ள முடிவது சிறந்த விடயமாக உள்ளது.
You May Also Like: