இந்த பதிவில் பல சாதனைகளை புரிந்த “ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் கட்டுரை” பதிவை காணலாம்.
எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்ற அவர் “கனவு காணுங்கள், அந்தக் கனவை நினைவாக்கப் பாடுபடுங்கள்” என்றார்.
ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பிறப்பும் இளமைக்காலமும்
- அப்துல் கலாம் வகித்த பணிகள்
- விருதுகளும் பட்டங்களும்
- ஏவுகணை நாயகன் சாதனைகள்
- முடிவுரை
முன்னுரை
தமிழகம் தந்த தவப்புதல்வர்களுள் ஒருவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் ஆவார். இவரின் முழுப்பெயர் “ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்” என்பதாகும். சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து தன் அயராத உழைப்பால் உலகம் போற்றும் விஞ்ஞானி ஆனவர்.
இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். உலக இளைஞர்களின் உத்வேகமூட்டும் தலைவராகவும், நல்வழிகாட்டி ஆசிரியராகவும் திகழ்கின்றார்.
பிறப்பால் இவர் ஓர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தனது நற்பண்புகளால் மதங்கள் கடந்து அனைவர் மனதிலும் சிறந்த மனிதராக போற்றப்படுகின்றார்.
பிறப்பும் இளமைக்காலமும்
தமிழகத்தில் உள்ள இராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி அப்துல் கலாம் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ஜைனுலாப்தீன், தாயின் பெயர் ஆஷியம்மா.
அப்துல் கலாம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வி முதல் உயர் நிலை பள்ளி வரை இராமேஸ்வரத்தில் கற்றார். சென்னையில் பொறியியல் படிப்பையும் முடித்தார்.
அப்துல் கலாம் வகித்த பணிகள்
அப்துல் கலாம் அவர்கள் ஆரம்பத்தில் விமான உற்பத்தி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கு தந்தி என்ற ஜெட் விமானத்தை உருவாக்கினார். இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மிக முக்கிய பொறுப்பு வகித்தார்.
தகவல் துறையிலும், பாதுகாப்பு துறையிலும் இவர் ஆற்றிய பணிகள் ஏராளமாகும். 2002 முதல் 2007 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
விருதுகளும் பட்டங்களும்
அப்துல்கலாம் அவர்கள் பல விருதுகளுக்கும், பட்டங்களுக்கும் சொந்தக்காரர் ஆவார்.
- டாக்டர் பிரேம் ராய் விண்வெளி விருது
- ஓம் பிரகாஷ் பாஸ் விருது
- பத்மவிபூஷன் விருது
- பத்ம பூஷன்
- நேரு தேசிய விருது
- இந்திரா காந்தி விருது
போன்ற விருதுகள் மட்டுமன்றி 1998 ஆம் ஆண்டு கலாம் அவர்களுக்கு இந்திய நாட்டின் மிகச் சிறந்த விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது.
ஏவுகணை நாயகன் சாதனைகள்
விண்வெளித்துறையில் ராக்கெட் ஏவுவது என்பது இந்தியாவிற்கு ஒரு கனவாகவே இருந்த நிலையில் அந்தக் குறையைப் போக்கியவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களே.
எஸ்.எல்.வி (SLV) உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். அதன் மூலம் முதன்முதலாக ரோகினி எனும் செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தார்.
இருபது வருடத்திற்கு மேலாக ரோவில் பணியாற்றிய பின்னர் இந்திய பாதுகாப்புத் துறையை பலப்படுத்தும் வகையில் உள்நாட்டிலேயே ஏவுகணையை உருவாக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
அக்கினி மற்றும் ப்ரீத்வி ஏவுகணைகள் இவர் தலைமையிலேயே உருவாக்கப்பட்டது. இதனையடுத்து “இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என்று அழைக்கப்படுகின்றார்.
முடிவுரை
இந்திய நாட்டில் வருங்காலத் தூண்கள் மாணவர்களே என்பதை உணர்ந்து பல உபதேசங்களை கூறிவந்தார்.
எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்ற அவர் “கனவு காணுங்கள், அந்தக் கனவை நினைவாக்கப் பாடுபடுங்கள்” என்றார்.
கலாம் அவர்களின் ஒவ்வொரு சொல்லும், செயலும் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கானவை என்பதில் ஐயமில்லை.
You May Also Like : |
---|
அப்துல் கலாம் பற்றி பேச்சு போட்டி |
இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை |